Friday, October 24, 2014

MANAM

அந்தக்கால சூப்பர் ஹீரோ அக்கினேனி குடும்பத்தினரின் தயாரிப்பு இந்தப்படம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினர் நடிக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இந்த படத்தை பற்றி இருந்தது.  அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்கள் மிக உடல்நிலை சரியில்லாம இருந்த நிலையல் நடித்த படம். ஆம் இது அவரின் கடைசி படம். சரி பார்க்கலாம் என மிக மிக ஆசைப்பட்டு சென்றோம்.  (3 மாசம் முன்பு வெளியான படம் இப்பதான் பதிவெழுத நேரம் கிடைச்சது)

ரொம்ப சூப்பர் டூப்பர் கதை அப்படின்னு சொல்ல முடியாது. ஆனால் ஆபாசம் இல்லாத, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத ஒரு அழகான குடும்ப சித்திரம். தன் பெற்றோரை அதிகம் நேசிக்காத அல்லது நேசிப்பதை வெளிக்காட்டத பிசி லைஃப்ஸ்டைல் உள்ளவர்கள் கூட இந்த படத்தை பார்த்ததும் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

நாகேஸ்வர ராவ் அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா.
ஆனால் படத்தில் அப்படியே தலைகீழ். அரேஞ்ச்ட் மேரேஜில் தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படித்துக்கொள்ளாத தம்பதிகளின் ஒரே ஆசை மகன். அவனது 10ஆவது பிறந்த நாளுக்கு மறுநாள் நடக்கும் கார் ஆக்சிடண்டில் இறந்து போகிறார்கள். (இங்கே நாக சைதன்யா - சமந்தா தான் அந்த ஜோடி)இந்த படத்தில் கதாபாத்திரங்களுடன் மணிக்கூண்டு மிக முக்கியமான இடம். முக்கியமான சம்பவங்கள் அங்கே தான் நடக்கிறது. ஆக்சிடண்டும் அங்கே தான்.

சில வருடங்கள் கழித்து அவரது மகன் வளர்ந்து ஒரு பெரிய பிசினஸ் சாமாரஜ்யத்தை உருவாக்கி சிறந்த  பிசினேஸ்மென் எனும் விருது பெருகிறார். அதுதான் நாகார்ஜூனா.  ஃப்ளைட்டில் தனது பக்கத்து சீட்டில் அம்ர்பவரை பார்த்து அதிர்கிறார். அதுதான் நாக சைதன்யா.  தனது அப்பா போல இருப்பது நாகார்ஜுனாவுக்கு மட்டும் தெரியும்.  ஃப்ளைட்டில் நடக்கும் கூத்து செம ஜாலி.
அப்பா மறுபிறவி எடுத்திருக்கிறார் என்றால் அம்மாவும் இருக்க வேண்டுமே என யோசித்து தேடுகிறார் நாகார்ஜுனா. அம்மாவும் கிடைத்துவிடுகிறார்.

இவர்கள் கதை இப்படி இருக்க  அதே மணிக்கூண்டு அருகில் இன்னொரு நாள் சிக்னலுக்கு வெயிட் செய்து கொண்டிருக்கும் நாகார்ஜுனாவின் காரில் ஓடி வந்து ஏறுகிறார் ஸ்ரயா. ஆபத்தில் இருக்கும் ஒரு பெரியவருக்கு உதவ காரில் அவரை ஆஸ்பிட்டல் அழைத்து சென்று, ரத்தம் கொடுக்க வைக்கிறார். அந்த வயதான பெரியவர் கண் விழித்து பார்க்கும் போது 8 வயதில் தனது பிடிவாதத்தால் அவசரமாக வந்து ஆக்சிடண்டில் உயிரழந்த அம்மா, அப்பா நாகார்ஜுனா- ஸ்ரயாவை பார்த்து பரவசப்படுகிறார்.

நாகார்ஜுனா-ஸ்ரயா முன் ஜென்ம கதையும் மிக அழகானது. மிக மிக ஏழையான ஸ்ரயாவை நாகார்ஜுனா திருமணம் செய்ய சம்மதிக்கிறார். ஆனால் 6 மாதம் கெடு கேட்கிறார் ஸ்ரயா. பெற்றோரை இழந்து பாட்டியுடன் தனியாக இருக்கும் ஸ்ரயாவின் குடும்பத்தினரின் வழக்கம், கல்யாணத்தின் போது மணமகன் அணியும் வேஷ்டி பெண் வீட்டினர் கொடுக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அதை வாங்க பணம் இல்லததால் விவசாயம் செய்து பணம் சேர்க்க நேரம் கேட்கிறார். அந்த கிராமத்துக்கு நாகார்ஜுனா வந்து அவர்கள் வீட்டில்யே தன்னை  அறிமுகம் செய்து கொள்ளாமல் தங்கியிருந்து ஸ்ரயாவுக்கு உதவி 3 மாதத்திலேயே வேலை முடிக்க உதவியாக இருந்து பின்னர் மணமேடையில் தன் கணவனை பார்த்து ஸ்ரயா அதிர்வது அழகு.

இந்த ஜன்மத்தில் தனது பெற்றோர் இணைய வேண்டும் என நாகார்ஜுனாவும், நாகேஸ்வர ராவும் முனைந்து இரண்டு ஜோடிகளும் இணைகிறார்கள். நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் தனது பையன் தான் நாகார்ஜுனா என தெரிந்தது போல நாகார்ஜுனா தம்பதிகளுக்கு தெரியாது.

கிளைமாக்ஸில் அதே போல ஆக்சிடண்ட் நடக்க இருந்து இரண்டு தம்பதிகளும் காரில் பயணிக்கும் பொழுது (நாகார்ஜுனா-அமலா தம்பதிகளின் மகன்) அகில் வந்து  காப்பாற்றுவது போல எடுத்திருக்கிறார்கள். அகிலுக்கு தாத்தாவின் படத்தில் இண்ட்ரோ கொடுக்க வேண்டும் என முடிவு செய்து செய்திருப்பதாக நாகார்ஜுனா சொல்லியிருந்தார்.

மெலடியான பாட்டுக்கள், அழகான அளவான நடிப்பு என ஒரு அருமையான குடும்ப படம். இந்தப்பாட்டு ரொம்ப அழகு




3 comments:

கோமதி அரசு said...

பார்க்க தூண்டும் விமர்சனம்.

pudugaithendral said...

வாங்க கோமதி அரசும்மா,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வணக்கம் மனசு,

மிக்க நன்றி. :)