Friday, November 14, 2014

குழந்தைகள் தினம்

இன்னைக்கு குழந்தைகள் தினம். ஸ்கூல்ல சாக்லெட் கொடுப்பாங்க. இதைவிட பெருசா கொண்டாட்டம் ஏதும் இருந்ததில்லை.ஆனா இந்த கொண்டாட்டத்தை நாம பெருசாகிட்டோம்னு நினைச்சுக்கிட்டு தொலைச்சிடறோமோ!??!!!

ஸ்கூல்  முடிஞ்சதும் குழந்தைகள் தின கொண்டாட்டமெல்லாம் நமக்கில்லே, நாம பெருசாகிட்டோம்னு நினைச்சு விட ஆரம்பிப்பது அப்படியே தொடருதுன்னு நினைக்கிறேன். வேணாமே. அதை அப்படியே தொடருவோம்.

நமக்குள்ளே அந்த குழந்தைத்தனம் எப்பவும் இருக்கும்.  வயசுக்கேத்த மனமுதிர்ச்சி வேணும் தான். ஆனா அதுக்கும் அடியில் ரொம்ப ஆளமா நமது இயல்பான குழந்தைத்தனம் இருக்கும். அதை அப்படியே கொஞ்சமா வெளிக்கொணர்ந்துகிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்.

குழந்தைங்க மனசு கள்ளம் கபடமில்லாத மனசு. ஒரு சாக்லெட் கிடைச்சாலும் குஷியாகிடும்.  எதிர்காலத்தை பத்தின பயமில்லாத ஒரு இனிமையான பருவம். இப்படி நிறைய்ய சொல்லிக்கலாம்.

நாமளும் கொஞ்சம் கள்ளம் கபடமில்லாம அன்பான அழகான மனதோட வாழ்ந்தா நல்லதுல்ல.  கிடைக்கற சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்பட ஆரம்பிச்சோம்னா நமக்கு நிறைய்ய கிடைச்ச சந்தோஷம் இருக்கும். பெரிய்ய சந்தோஷங்கள்லாம் எப்பவோ கிடைக்க கூடியது.

நாம எதிர்காலத்தை பத்தி ரொம்ப யோசிச்சு, யோசிச்சு மனசு குழம்பினதுதான் மிச்சம். இதனால நிகழ்கால சந்தோஷத்தை தொலைப்பது மட்டுமில்லாம அனுபவிக்காம இருந்திடறோம்.

நமக்குள்ளே இருக்கற குழந்தைக்கு இன்னைக்கு பிடிச்சது செஞ்சு கொடுங்க. பிடிச்ச உடை போட்டுக்கங்க. பிடிச்சதை செய்ங்க. இது நல்ல ஃபீலிங்கை கொடுத்தா வரும் நாட்களிலும் தொடரலாமே!! :)) எப்பவுமே முடியாட்டியும் அப்பப்பவாவது நம்மளை நாம கவனிச்சுக்கலாம். தப்பில்லை.

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டை நீங்களும் கேளுங்க.




5 comments:

'பரிவை' சே.குமார் said...

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
அருமையான பாடல் பகிர்வு அம்மா...

”தளிர் சுரேஷ்” said...

இந்த பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்! இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

நன்றி குமார்

நன்றி சுரேஷ்

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள். மனசுக்குள்ள குழந்தைத்தனம் நிறைய இருக்கு. ’ஆனா, நம்மள ‘பெரிய மனுசி’ ரேஞ்சுக்கே எல்லாரும் நடத்துறாங்களா.... :-( :-)

pudugaithendral said...

ஆமாம் ஹுசைனம்மா,

அதுதான் கஷ்டம். வீட்டுக்குள்ளயாவது நம்மை நாம வெளிப்படுத்திக்கிட வேண்டியது தான். வருகைக்கு மிக்க நன்றி