Saturday, November 15, 2014

டீ போட்டு மாட்டிக்கிட்டது

டீ போடறதுல என்ன பிரச்சனை, அதுல போய் என்ன மாட்டிக்கிறதுன்னு பாக்கறீங்களா? வாங்க சொல்றேன்.

எனக்கு டீ போடறதுன்னா ரொம்ப பிடிக்கும். ரசிச்சு டீ போடுவேன். அதுக்கான ஷ்பெஷல் மசாலா ரெடி செஞ்சு வெச்சுக்கறதுலேர்ந்து எல்லாம் ரொம்ப மெனக்கெடுவேன். அசத்தலா டீ போடுறதுன்னா ரொம்ப இஷ்டம். அதனால நம்ம டீ உறவுக்காரங்க, நட்புங்க மத்தியில நாம ஒரு டீ ஷ்பெஷலிஷ்டா எஷ்டாபிலிஷ் ஆகிட்டோம்.(ம்ம்ம் சரி சரி) மேட்டருக்கு போவோம்.

ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன்.  நாங்க போயிருந்த சமயம் அவங்களைப்பாக்க யாரோ வந்திருந்தாங்க. அவங்க கிட்ட கலா நல்லா டீ போடுவாப்லன்னு, சொல்லிட்டு போம்மா எனக்கும் சேத்து இஞ்சி டீயா போட்டு கொண்டான்னு சொல்ல , நானும் ரொம்ப சுறுசுறுப்பா டீ போட போனேன்.

உலகத்துலேயே முடியாத காரியம்னு ஒண்ணு இருக்குன்னா அது அடுத்தவங்க வீட்டு சமையக்கட்டுல போய் நாம வேலை செய்வதுதான் இருக்கும். இது என்னோட பரம அனுபவம் கூட. ஆனா அப்ப அது சத்தியமா தெரியலீங்க. (பாத்திரம் கழுவுறது, காய் நறுக்கி கொடுக்கறது இல்லீங்க- சமைப்பது, டீ/காபி போடுவதுதான்.)

டீ பொடி எடுத்துக்கொடுங்கன்னு கேட்டேன். அவங்க என்கிட்ட டீத்தூள் இருக்கற கவரை அப்படியே கொடுத்தாங்க. அதாவது ஓபன் செஞ்சது. (ஓபன் செஞ்சா அதை ஒரு டப்பால போட்டு வைக்க மாட்டாங்களா!!!) சரின்னு பார்த்தா அது டஸ்ட் டீ. நம்ம வீட்டுல நாம  உபயோகிப்பது  வேற ஆச்சேன்னு மண்டைல குடைச்சல். அடுத்து அவங்க இஞ்சின்னு கொண்டு வந்து கொடுத்தது இஞ்சிக்கும் சுக்குக்கும் இடைப்பட்ட ஸ்டேஜ்ல பாவமா இருந்துச்சு. இவைகளை வெச்சு எந்த சூப்பர் ஷ்பெஷலிஷ்ட் வந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது.

ஒரு உணவுல ருசியும் மணமும் கிடைக்கணும்னா அது கைப்பக்குவம் மட்டும் போதாது பொருள்களும் தரமானாதா இருக்கணும். முக்கியமா தண்ணி. இது மாறினா ருசி மாறிடும். இலங்கையில இருந்த வரைக்கும் ப்ளாக் டீ குடிப்பது ஒரு சுகானுபவம். இங்க வந்ததுக்கப்புறம் இட்ஸ் ஓகே தான். ஐம் சாரி டு சே திஸ்.

நம்ம ஊர்ல என்னவோ டஸ்ட் டீ வாங்கி தான் டீ போடுறாங்க. டஸ்ட் டீ டீத்தூள்களின் வகையில லாஸ்ட் ஸ்டேஜ்.




இம்புட்டு வெரைட்டி இருக்கு டீத்தூள்கள்ல.  டஸ்ட் டீ டீக்கடைகளில் உபயோகிப்பாங்க. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.  நல்ல தரமான, ருசியான டீ வேணும்னா BOPF தான். இலங்கையில் எல்லாம் டீ பாக்கெட்கள் மேல எழுதியே இருக்கும். நம்ம ஊர்ல டார்ஜ்லிங் டீ, இப்படி பேர்தான் சொல்லிப்போம். அதனால அங்கேர்ந்து யாராவது வர்றாங்கன்னு டீப்பொடி பார்சல்னு சொல்லி வெச்சிடுவோம் :) சரி இங்க என்ன டீ யூஸ் செஞ்சா நல்லா இருக்கும்னா என் அனுபவத்துல தாஜ்மஹல் லீஃப் டீ.







இது ரெண்டையும் கலந்து டீ போட்டீங்கன்னா சுவை,மணம் இதோட நல்ல கலராவும் டீ போட்டு அசத்தலாம்.

அன்னைக்கு நடந்த கதையை பாதியில விட்டேனே. டீயும் டஸ்ட்டீ, காஞ்சுபோன சுக்கு இவைகளோட தண்ணி ஊத்தி காய்ச்சின பால். இவைகளை வெச்சு நான் போடும் சுவையான டீ எனக்கு போடவே வரலை. :((( பாலில் தண்ணி ஊத்தாம காய்ச்சி காபி/பாலுக்கு தக்க தண்ணியோ டிக்காஷனோ சேப்பதுதான் என் பழக்கம். டீ போடும்போது திக்கான பாலில்  1:! ரேஷ்யோவில் பாலும் தண்ணியும் டீக்கு உபயோகிப்பேன். தண்ணிப்பாலில் மேலும் தண்ணி கலந்தா டீ எப்படி இருக்கும். ஆத்தினா பக்கத்து ஊர் தெரியராப்ல தான் இருக்கும்.

 ஹி ஹி ஹின்னு வழிஞ்சுகிட்டே டீங்கற பேர்ல நான் தயாரிச்ச பானத்தை கொண்டு போய் கொடுத்தேன். வந்தவர் குடிக்க சிரமப்பட்டதை பார்த்தேன். வேற என்ன செய்ய முடியும். (இது மாதிரி பல பேர் வீட்டுல விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி அவஸ்தை பட்டது எனக்கும் ஞாபகம் இருக்கு. அளவு கூட இல்லாம கட கடன்னு தண்ணி ஊத்தி கொதிக்க வெச்சு அதுல டீத்தூள், பால் சர்க்கரை எல்லாம் போட்டு வடிகட்டி சூடா ஒரு பானம் தயாரிப்பாங்க சிலர்.  குடும்பம் ஒரு கதம்பம் படத்துல ஒரு சீன் வரும். சுஹாசினி வேலைக்கு போகும்போது காபி எப்படி போடுவதுன்னு எஸ்.வி.சேகருக்கு சொல்வாப்ல. முக்கால் பங்கு டிகாஷன், கால் பங்கு பால், 2 ஸ்பூன் சர்க்கரை. கடவுளே! இதுதான் காபின்னா அந்த காபி குடிக்காமலேயே இருக்கலாம்)

இதனால நான் தெரிஞ்சுக்கிட்ட பாடம் என்னன்னா, அடுத்தவங்க வீட்டு கிச்சன்ல அவசியமே ஏற்பட்டாலும் நாம போய் ஏதும் செய்யக்கூடாது.

இந்த விளம்பரம் ஞாபகத்துக்கு வந்துச்சு :)



ஹேப்பி வீக் எண்ட் ஃப்ரண்ட்ஸ்

24 comments:

Thenammai Lakshmanan said...

hahahahaha

தினேஷ்குமார் said...

டீ போட்டு மாட்டிக்கிட்டது தலைப்பை படித்ததுமே எனக்கு அம்மா ஞாபகம் தான் வந்தது அம்மாக்கு எப்பவும் டீ குடிச்சுட்டே இருப்பாங்க அவங்க ரசிச்சு குடிக்கிற மாதிரி டீ போடுவேன் படிக்கும் போது வீட்டுக்கு யார் வந்தாலும் பெருமையா சொல்லுவாங்க தினேஷ் டீ போட்டான்னா சூப்பரா இருக்கும்னு ஊருக்கு போகும் போது திரும்ப டீ போட்டு கொடுக்கனும் அதுமட்டும் இல்லாம நல்லா சமைத்து போடனும் அம்மா அப்பாக்கு இதுவே என் பேராசை ....

pudugaithendral said...

வாங்க தேனக்கா,

செம காமெடியா இருந்துச்சோ :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தினேஷ்,

என் மகனும் சூப்பரா டீ போடுவாப்ல. இந்த வருஷம் தான் ஹாஸ்டல் போயிருக்காரு. லீவுல வரும்போது போட்டு கொடுப்பாப்ல. அம்மா, அப்பாக்கு நல்லா டிபன் செஞ்சு கொடுங்க.

வருகைக்கு மிக்க நன்றி

ADHI VENKAT said...

ஹா.ஹா..ஹா..

ஆமாம். இது போல் தான் மாட்டிக் கொள்வோம். நம்ம கிச்சனைத் தவிர எங்கு சென்றாலும் கடினம் தான்.

முன்பெல்லாம் தில்லியில் எங்க வீட்டுக்கு செட் செட்டா ப்ரெண்ட்ஸ் வந்துட்டே இருப்பாங்க. என்னவரின் ”சாய் பனா தோ!” என்ற குரல் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும்....:)) அங்கே தாஜ், மற்றும் டாடா....

இங்கே 3 ரோஸஸ் நேச்சுரல் கேர் தான்...க்ரீன் டீயும் உண்டு.

கீதமஞ்சரி said...

உங்க டீ அனுபவம் செமயா இருக்கு. அதோடு அடுத்த வீட்டு சமையலறை அனுபவம் சொல்லியிருக்கீங்களே... உண்மையோ உண்மை. ஒரு உறவினர் வீட்டில் காபி போடச்சொல்லி அவங்க கொடுத்த காபித்தூள் கவரைப் பார்த்த நொடியே எனக்கு படபடன்னு வந்திட்டுது. சன்ரைஸ் இன்ஸ்டன்ட் காபித்தூளைப் பிரித்து காற்றுபுகாத டப்பாவில் கொட்டாமல் ஓரத்தை கட் பண்ணிட்டு ஃப்ரிஜ்ஜில் வச்சிடறாங்க. அது ஓரமெல்லாம் பிசுபிசுன்னு கட்டிபிடிச்சுப் போயி தொடவே அருவருப்பா இருக்கறதோடு அதிலிருந்து எடுத்து காபி போடுவதற்குள் ஐயோடா காபியே வேண்டாம் என்று தோன்றிவிட்டது. காபித்தூள் டீத்தூள் கொட்டிவைக்கிறது கூடவா கம்பசூத்திரம்? ரசித்து டீ போடும் உங்க பதிவும் ரசனையா இருக்கு.

pudugaithendral said...

வாங்க ஆதி,

ஏதாவது சொன்னா நீங்கள்லாம் வடக்கே இருந்தவங்க. அதான் டீ நல்லா போடறீங்கன்னு சொல்லிடுவாங்க. வடக்கோ தெற்கோ எங்கே இருந்தாலும் செய்வதை அழகா செய்யலாமே

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கீதமஞ்சரி,

காத்து புகாத டப்பாவுல போட்டு வெக்கணும்னு கூடவா தோணாது.
சிலர் ஃப்ரிட்ஜ்ல வைக்கற பால், தயிர், ரசம் எதுக்கும் மூடி போடாம ஃபிரிட்ஜை திறந்தலே ஒரு வாசம் அடிக்கும் பாருங்க. :(

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

'பரிவை' சே.குமார் said...

நானும் டீ கொஞ்சம் நல்லாப் போடுவேம்... உங்க கதை சிரிக்க வைத்தாலும் உண்மையை சிந்திக்க வைத்தது அம்மா...

கோமதி அரசு said...

எதை செய்தாலும் நன்றாக செய்ய நினைப்பவர்களுக்கு இது தான் கஷ்டம்.
நம் வீட்டில் செய்வது போல் மற்றவர்கள் சமையல் அறையில் செய்வது கஷ்டம் தான்.

pudugaithendral said...

வாங்க குமார்,

சிரிக்கறதா அழுவுறதான்னு தெரியாத ஒரு ச்டேஜ்ல அன்னைக்கு இருந்தேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு அம்மா,

விருந்துக்கு போன இடத்துல முழு சமையலும் செய்ய நேர்ந்து தேடித்தேடி சமைச்சு முடிச்சா அவங்க வீட்டு பெரியவங்க எதுக்கு பாசிப்பருப்பு போட்ட, அப்படி செஞ்சிருக்கலாமே இப்படி செஞ்சிருக்கலாமேன்னு தொணதொணப்பு வேற. சமையல் முடிச்சு எல்லா பாத்திரங்களும் கழுவி வேற வைக்க வேண்டிய நிலமை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

எனக்கு இங்கேருந்துட்டு, லீவுக்கு எங்கம்மா அல்லது மாமியார் வீட்டுக்குப் போனாலே, சமையல் செட் ஆகுறகுக்கு நாளாகும். அதுக்குள்ள லீவும் முடிஞ்சுடும்...

இதுல அடுத்த வீட்டு சமையலா.... நெவர்.. யார் வீட்டுக்குப் போனாலும், செய்ற அதிக பட்ச உதவி பாத்திரம் கழுவித் தருவதுதான்.. நானே வித்தியாசமான சமையல் கிடைக்காதான்னு இருக்கறவ.. அங்கே போயும் என்னைச் சமைக்கச் சொன்னா... அதுக்கு ஹோட்டலே பெட்டர்... ஹா.. ஹா...

முக்கியமா அடுத்த வீடுகளில் சமைக்கப் பிடிக்காததற்கு முக்கியக் காரணம், சுத்தம், சுகாதாரம் ஒத்து வராததுதான்...

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

சில பேரு என்னிய கண்டாலே பிடிச்சு சமையக்கட்டுல தள்ளி கொடுமை செய்வாங்க. (நம்ம வீட்டுக்கு வந்தா மட்டும் ரெஸ்ட் எடுத்துப்பாங்க.) சமையல் முடிச்சு பாத்திரம் கழுவி ஊர் சுத்த போனாப்லதான்னு பல சமயம் எஸ்ஸாகி ஹோட்டல்ல போய் தங்கிடறது.

என்னவோ போங்க :)

வருகைக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

டீ குடிச்சா எனக்கு தலை சுத்தும்..யார் வீட்டுக்கு போனாலும் முதலிலேயே அறிவித்து விடுவேன்.என் பசங்களுக்கும் டீ,காஃபி பழக்கம் செய்யலை.அடுத்த வீட்டு அடுப்படி அய்டோ இந்த அனுபவம் எனக்கும் நிறைய உண்டு.

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா!!! எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. நாம கிச்சனை நல்லாத்தானே வெச்சிருக்கோம். நம்ம வீட்டுக்கு வர்றவங்க மட்டும் எப்படி கரெக்டா கெஸ்ட் மாதிரியே நடந்துக்கறாங்க. நாம அதுல வீக்கோ :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சுந்தரா said...

இப்படி எடக்குமடக்கா மாட்டிக்கிட்டா ரொம்பக் கஷ்டம்தான் :)

pudugaithendral said...

வாங்க சுந்தரா,

இதனாலத்தான் பலபேர் தனக்கு ஒண்ணும் தெரியாதுங்கற மாதிரி நடந்துக்கறாங்களோ என்னவோ :)

வருகைக்கு மிக்க நன்றி

Anuprem said...

ஆகா டீ நல்லா இருக்கு......இன்றைக்கு தான் உங்க பதிவுகளை பார்த்தேன் அனைத்தும் அருமை..................

pudugaithendral said...

வாங்க அனுராதா,

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாங்க

Jaleela Kamal said...

நானும் இந்த டீ விஷயத்தில் நிறைய மாட்டி இருக்கோம். எப்படியோ என் கைவண்ணத்தை வைத்து மேக்கப் பண்ணி போட்டுடுவேன்,

Jaleela Kamal said...

கித மஞ்சரி சொல்வதுபோல் தான் ஐய்யோ அத ஏன் கேட்கிறீங்க, காபி போட போயிட்டு பாட்டிலோடு அந்த காப்பி பொடி கட்டி பிடிச்சி அப்பரம் கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணீர் ஊற்றி அந்த ரங்கை எடுத்து பாலில் சேர்த்து போட்டேன்.

நானானி said...

தென்றல்,
டீ எனக்குப் பிடிக்காது. ஆனா அடுத்தவீட்டு சமையலறையில் நீங்க போட்ட டீ(டீதானே?) அருமையாயிருந்துது.
நான் அடுத்த வீட்டு சமையலறைக்குள் நுழைய மாட்டேன். என் சமையலறைக்குள்ளும் யாரையும்(விருந்தினர்)விடவும் மாட்டேன். இது எப்படி இருக்கு?

pudugaithendral said...

வாங்க நானானி,

நம்ம வீட்டுல விருந்தாளி கிட்ட வேலை வாங்குவானேன்னு நானும் ரொம்ப அனுமதிக்க மாட்டேன். ஆனா பாருங்க நான் அவங்க வீட்டுக்கு போனா அவங்க ரெஸ்ட் எடுக்க என்னிய கிச்சன்ல தள்ளி விட்டுடுவாங்க.

:(((

வருகைக்கு மிக்க நன்றி