Wednesday, November 19, 2014

முடி கொட்டுகிறதா??!!!!!!!

வாங்க!!! வாங்க!!! என்ன ஹேர் ஆயில் கம்பெனிக்கு ஏதும் ஏஜன்ஸி எடுத்து அதற்கான விளம்பரம் போட்டு பதிவோன்னு நினைக்கறீங்களா :)) “தலையாய” பிரச்சனையான முடி கொட்டுவதை பத்தி சும்ம பேசிக்கலாமேன்னு.

இப்பல்லாம் ஹேர் ஆயில் விளம்பரம் ரொம்பவே ஜாஸ்தி ஆகிடிச்சு. அதனால எந்த ஆயில் வாங்கி தேய்ச்சா நல்லா இருக்கும்னு நாமளும் யோசிப்போம். ஏன்னா தலை குளிக்கும்போதோ, முடி வாரும் போதோ கொத்து கொத்தா கொட்டும் முடியைப்பாத்து வம்சத்துல இல்லாட்டியும் நமக்கு சொட்டை விழுந்திடுமோன்னு  பீதி கிளம்புவது இயற்கை.  சத்யராஜ் ரொம்ப வருஷமா விக் வெச்சு தான் மேனேஜ் செய்றாரு. இப்ப அதையும் எடுத்துட்டு தைரியமா பேட்டி கொடுக்கறார்.

ஆண்களுக்கு ரொம்ப ஷார்ட் முடிதான். அதனால அது குறைஞ்சா ஒண்ணும் பெருசா தெரியாது.  முன் நெற்றி வழுக்கை, பின் நெத்தி வழுக்கை அப்படின்னு இருந்தாலும் நோ பிராப்ளம் யூசி :) தொப்பி போட்டு மறைச்சுக்கலாம்.

பெண்களில் பலருக்கு முடி நீளம் குறைவா இருந்தாலும் அடர்த்தி இருக்கும். சிலருக்கு ரொம்பவே எலி வால் மாதிரி இருக்கும். இதுவும் பரம்பரையா வர்றதுதான். ஆனா  நடுவயசு வரும்போது ரொம்பவே முடி உதிர்ந்து அடர்த்தி கம்மியாகி அந்த காலத்துல அதை கொண்டையாக்கி போட்டுகிட்டாங்க. ( கொண்டை கூட போட முடியாத சிலர் சவுரி வெச்சு பன் கொண்டை போட்டுப்பாங்க)  இப்ப கொண்டையெல்லாம் சரிப்பட்டு வராது. அதனால பார்லருக்கு போய் முடி அடர்த்தியா தெரியராப்ல கொஞ்சம் அழகு படுத்திகிடறது பெட்டர்.

சரி இந்த முடி கொட்டுற மேட்டரைப்பத்தி பாப்போம்.  முடி கொட்டுறதுக்கு பல காரணம் இருக்கும். அதுல முக்கியமானது சத்து குறைபாடு. ஆனா இதுக்கெல்லாம் யாரும் டாக்டர்கிட்ட போக மாட்டாங்க. என்னவோ கொட்டுதுன்னு இருப்பாங்க. அதனால வீட்டுல இருக்கறவங்க இந்துலேகா விளம்பரத்துல வர்றமாதிரி சாப்பாட்டுல முடியைப்பாத்து கத்துவாங்க.  உடம்பு சரியில்லாம இருந்திருந்தா முடி கொட்டும். சில சமயம் நாம சாப்பிடற மருந்துகளோட சைட் எஃபக்ட்டாவும் இருக்கலாம். கொட்டினா கொட்டிட்டு போகுதுன்னு இருக்காம அதற்கான வைத்தியம் பாத்துக்கறது நல்லது.

எனக்கு தெரிஞ்சு சில டாக்டர் அதெல்லாம் ஜகஜம்ங்க அப்படின்னு சொல்லிட்டு விட்டுறதை பாத்திருக்கேன். ஒரு நல்ல தோல் சம்பந்தமான மருத்துவரை பாத்து சிகிச்சை எடுத்துக்கிறது நல்லது. தலையில் வரும் பொடுகுதான் மிகப்பெரிய எதிரி.  anti dandruff shampoo, hairfall rescue இதெல்லாம் உடம்புல ஊட்டச்சத்து குறைபாடு இருந்தா ஒண்ணும் செய்ய முடியாது. இதெல்லாம் மேம்போக்கா வேலை செய்வது. பல சமயம் ட்ரீட்மெண்ட் உள்ளே கொடுக்கணும்.

தலையில் பொடுகு இருந்தா அது அரிச்சுகிட்டே இருக்கும். மெல்ல காது பின்னாடி புண்ணாகும். (கரப்பான்னு நினைச்சுப்பாங்க) சில சமயம் ரொம்ப சிலருக்கு கண் இமைகள் ரொம்ப அரிக்கும். அதுவரைக்கும் பொடுகு பரவியிருக்குன்னு தெரியாது.

கண்ட கண்ட விளம்பரங்களைப்பார்த்து அதை இதை வாங்கி தலையில தடவி இருக்கற முடியும் கொட்டிப்போகாம பாத்துக்கறது அவசியம்.  ஆயுர்வேத மருத்துவத்தில்  நல்ல குணம் இருக்கும்.  ஆனா முறையா மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உபயோகிப்பது நல்லது. சிலருக்கு முடியில் எண்ணெய் அதிகமா சுரக்கும். தலைக்கு குளிச்சு 2 நாளிலேயே ஏதோ எண்ணெய் வெச்ச மாதிரி ஆகிடும். இதுக்குன்னு ஷ்பெஷல் ஷாம்பு இருக்குன்னு நமக்குத் தெரியுமா? தெரியாது. அதனால இதுக்கெல்லாமா டாக்டர் கிட்ட போறதுன்னு யோசிக்காம மருத்துவம் பார்த்துக்கறது நல்லது.

தட்பவெட்பநிலை மாறும்போது நம்ம தோலுக்கு பாதிப்பு ஏற்படுவது போல முடியிலும் மாற்றம் வரும். பத்திரமா பாத்துக்குங்க.  இல்லாட்டி நாமளும் முன் ஜாக்கிரதை முத்தம்மாவா மாறி தலைக்கு கட்ட ஸ்கார்ஃப் வாங்கி வெச்சுக்கிட்டு நடந்து போனா கூட முகமுடி கூட்டத்தலைவி மாதிரி இருக்க வேண்டியதுதான்.

6 comments:

அமுதா கிருஷ்ணா said...

பசங்களுக்கு தான் இப்போ ரொம்ப கொட்டுது. ஹெல்மெட்,ஏசி ரூமில் வேலை,சரியான தூக்கமின்மை இதான் காரணம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

அதெல்லாமும் காரணம். ஆனா அதற்கும் ஏதும் தீர்வு கண்டிப்பா இருக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

கோமதி அரசு said...

தட்பவெட்பநிலை மாறும்போது நம்ம தோலுக்கு பாதிப்பு ஏற்படுவது போல முடியிலும் மாற்றம் வரும்//


உண்மை தென்றல். அதுக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்டால் இதை தவிர்க்கலாம்.

என் அம்மா, மாமியார் எல்லாம் தினம் தலை குளிப்பது தான் நல்லது. என்பார்கள்.

நிலாமகள் said...


பதிவு முடிப்பில் சொல்லியிருப்பது எளிய வழி:))

பார்க்கவும், எனது பதிவுகள் இதுபற்றி...

http://nilaamagal.blogspot.in/2013/12/blog-post_29.html

http://nilaamagal.blogspot.in/2013/12/blog-post.html

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதிம்மா,

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க நிலாமகள்,

உங்க பதிவுகள் படிச்சேன். ரொம்ப பயனுள்ளது. அதை இங்கே லிங்கா கொடுத்து உதவியதற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றீஸ்