Friday, November 14, 2014

பக் பக் பால்கனி புறா

பத்து நாள் ஊருக்கு போயிருந்த சமயத்துல புறா நம்ம பால்கனிய பிரசவ அறையா மாத்தனும் திட்டம் போட்டிருந்துச்சு போல நாங்க ஊர்லேர்ந்து வந்த அன்னைக்குத்தான் முட்டை இட்டு வெச்சிருந்தது.
இலைதழை எதும் கொண்டு கூடு கட்டாம, அங்கேயிருந்த ஃப்ளவர் பாட்டில் மண் இருக்க அதில் முட்டை இட்டு வெச்சிருந்தது.

அடைகாக்க ஆரம்பிச்சது.  பெண்புறாவும் ஆண்புறாவும் மாத்தி மாத்தி பாதுகாத்தது. சாப்பாட்டுக்கு என்ன செய்யும்னு எங்களுக்கு ஒரே யோசனை. கிட்ட போனா உர்ருங்குது. இரண்டு புறாவுமே இல்லாம இருந்த ஒரு சமயத்துல ஒரு கிண்ணத்துல தண்ணியும், இன்னொரு கிண்ணத்துல கொஞ்சம் அரிசியும் போட்டு வெச்சேன்.

அதுக்கப்புறத்துலேர்ந்து பெண்புறா எங்கயும் போகாம அங்கயே இருந்துச்சு. பால்கனியில் இவுக நடமாட்டம் இருந்தாலும் நாங்க துணிகாயபோட எந்த பிரச்சனையுமில்லாம அவுக பாட்டுக்க இருந்தாக. அதுதான் பெண்புறான்னு நினைச்சுக்கிட்டோம். ஏன்னா ஒரு வாட்டி அரிசி போட கிட்டப்போனா கொத்தவந்துச்சு புறா. அப்ப இது வேற. ஆண் புறா போலன்னு நினைச்சுக்கிட்டோம். (பெண் புறா இருக்குற பக்கத்துல நின்னே துணி காயப்போட்டாலும் ஒண்ணும் செய்யாம இருந்துச்சு.) ஆனா கிண்ணத்துல அரிசி இல்ல என்ன செய்யன்னு யோசிக்கையில அம்ருதம்மா ஒரு நீளமான கரண்டில அரிசி வெச்சு அதை கிண்ணத்துல போட்டாப்ல. :)







 அம்மாவோ அப்பாவோ சாப்பாடு கொண்டு வர அதை அந்த குட்டிப்புறாக்கள் வாயிலேர்ந்து எப்படி எடுத்து சாப்பிடுதுங்க பாருங்க. பால்கனியில சத்தம் கேக்கும்போதெல்லாம் ஆஜர் ஆகி அதை பாத்துக்கிட்டு இருந்தோம்.

தினமும் காலையில் எந்திருச்சு ஒரு குட்மார்னிங் சொல்லி எப்படி இருக்காங்கன்னு பாத்துக்கறது பழக்கமா போச்சு.  குட்டிகள் மெல்ல மெல்ல பெருசாச்சு. பெருசானா கைகாள் வீசி நடக்க வேண்டாமா? ஆரம்பிச்சாங்க ரெண்டு பேரும். பாத்திரம் கவுத்து வைக்கிறது எல்லாம் வேஸ்ட் ஆக ஆரம்பிச்சுச்சு. இவங்க கழிவுகளால பால்கனியில் செம ஸ்மெல். எப்படி எடுத்து கழுவுறது. அங்கயே இருக்காப்ல. கூடு மாதிரி இருந்தா எடுத்து அந்த பக்கம் வெச்சிட்டு கழுவலாம்.

இப்படியே போக மெல்ல மெல்ல கழுவி ஏதோ ஒருவிதமா ஓட்டிக்கிட்டு இருந்தோம். ரெண்டு பேரும் பெருசாகிட்டாங்க.




பால்கனி மொத்தமும் இவுக ராஜ்ஜியமா போச்சு. வெளிய எப்படி அனுப்புறதுன்னு தெரியலை. ரொம்பவே அசொளகர்யமா போச்சு. ப்ளுகிராஸுக்கு போன் செஞ்சா. உடம்பு சரியில்லாத பிராணிகளைத்தான் ஏத்துப்போம். அதனால உங்க வீட்டுலயே பத்திரமா வெச்சுக்கங்கன்னு சொல்லிட்டாங்க.

பறவைகளை பறக்காதன்னு சொல்ல முடியாது. ஆனா எங்களுக்கு பாத்திரம் கழுவ துணி துவைக்க அதான் இடம். எல்லாம் நாசமாகிட்டு இருந்துச்சு. என்ன செய்யன்னு புரியாம வாட்ச்மேனைக்கூப்பிட்டு பிடிச்சு வெளியில பத்திரமாவிடு இல்லாட்டி உங்க ரூம் கிட்ட வெச்சுக்கன்னு சொன்னேன். (குப்பத்து பசங்க பிடிச்சு போய் பிரியாணி ஆக்கிடுவாங்களோன்னு பயம்)

வாட்ச்மென் பிடிக்க வந்தா ரெண்டு பேரும் பால்கனி கம்பிகேப்ல பறந்து போயிட்டாங்க. அடப்பாவிகளா பறக்க தெரிஞ்சுமா இங்க உக்காந்து வம்படி செஞ்சீங்கன்னு நினைச்சுக்கிட்டோம்.



9 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவம்!

இவை பார்க்கப் பிடித்தாலும் கழிவுகள் நாற்றம் தாங்க முடியாது!

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...
ரெக்கை முளைச்சும் பறக்கலையா...
படங்களை ரசிச்சு எடுத்திருக்கீங்கம்மா...
வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாங்க சகோ,

அதுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க குமார்,

அது என்னவோ ரொம்ப சொகுசா இங்கயே தங்கிடுச்சு.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கோமதி அரசு said...

வெங்கட் சொல்வது போல் பார்க்க பிடித்தாலும் அதன் சத்தம் (அனத்தல்) கொஞ்சம் கஷ்டம்.
அதன் கழிவுகள், நாற்றம் தாங்கமுடியாது தான்.

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு அம்மா,

ஒரு மாசம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

சுசி said...

கஷ்டமா இருந்தாலும் நல்ல ஸ்ரெஸ் பர்ஸ்டர்ஸ். எங்க வீட்டு பக்கத்து வீட்டு (காலி) பால்கனியில பூனை குட்டி போட்டிருக்கு. அதுகளுக்கு சோறு வக்கிறது, பேரு வக்கிறதுன்னு என் பொண்ணுங்களுக்கு பொழுது போயிகிட்டிருக்கு. ஸ்கூல்லருந்து வந்த உடனே கொஞ்ச நேரம் அதுங்களோட பேசிட்டு தான் வீட்டுக்கே வராங்க.

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

குழந்தைகளுக்கு இதெல்லாம் சுவாரஸ்யம்.

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

இங்கும் அதே கதை தான் பால்கனியே தான் அவர்கள் வீடு, ஆனால் இதுவரை குட்டி போட்டு பறக்க விட்டதெல்லாம் ஏசி மேலேயே தான் அதாவது பர்ஸ்ட் ப்ளோரை அவர்களுக்கு விட்ட்டாச்சு.

எங்க பால்கனிட்யும் நாஸ்தி தான்

உங்கள் பால்கனியில் குட்டிகள் பார்க்க அழகாக இருக்கு