Friday, January 09, 2015

ஊர் சுத்தினது - 3

எப்பவும் ஊர் சுத்திட்டு வந்த உடனேயே சுடச்சுட பதிவுகள் வந்திடும். இந்த வாட்டி பாருங்க.. அந்தா இந்தான்னு கிட்டத்தட்ட 8 மாசம் ஆகப்போகுது.   போயிட்டு வந்ததை பதிஞ்சு வெச்சுக்காவவது இந்த பதிவு இருக்கட்டும்னு தொடரறேன்.

முந்தைய பதிவுகளுக்கு சுத்தினது 1, சுத்தினது2.

அழகான தூறலோடு அடுத்த நாள் காலையில் பயணம் புறப்பட்டோம். இந்த வாட்டி ரிலாக்ஸ் மட்டும்தான்னு முடிவு செஞ்சிருந்ததால நுவரேலியாவுக்கு புறப்பட்டோம். போற வழியில ஸ்பைஸ் கார்டன் போயி வெனிலா, மிளகு அப்படின்னு நிறைய்ய ஸ்பைஸஸ்  பிள்ளைகளுக்கு காட்டினோம். ஏற்கனவே பாத்திருந்தாலும் மறந்திட்டாங்கன்னு நினைக்கறேன். போறவழிதானேன்னு அங்கயும் ஒரு விசிட் அடிச்சோம்.

7 மணிநேரம் பிடிச்சது பயணம். (இதுக்கு முன்ன 4 அல்லது 5 மணிநேரத்துல போயிருந்த ஞாபகம் எனக்கு) வழியில் டீ ஃபேக்டரிக்கு போவது எப்பவும் பிடிச்ச விஷயம். கிளஞ்ச் டீ பேக்டரிக்கு போகலாம்னா டிரைவர் வேற ஏதோ இடத்துக்கு கூட்டி போனார். அங்க போனா அவருக்கு சாப்பாட்டு இலவசமாம்!!!
ஜலதோஷம் பிடிச்சிருந்ததோட அந்த பொண்ணு சிங்கள ப்ரணொன்ஷியேஷன்ல ஆங்கிலத்துல அழகா டீக்களை பத்தி விவரிச்சாப்ல. க்ரீன் டீ குடிக்க கொடுத்தாங்க. அந்த சூழலுக்கு இதமா இருந்ததது. கொஞ்சம் டீ வாங்கிகிட்டு கிளம்பினோம்.

 மழை தூறி எங்களை வரவேற்தது நுவரேலியா. சாயங்காலம் 5 மணி ஆகிடிச்சு. மதியம் சரியா சாப்பிடதாதால தலைவலி வேற. சுடச்சுட வடை வாங்கிகிட்டு அயித்தானின் கம்பெனி கெஸ்ட் ஹவுஸுக்கு போனோம். அங்கே தாமஸ் அண்ணனுக்கு ஏற்கனவே நாங்க வர்ற தகவல் போயிருந்ததால அவர் வரவேற்க ரெடியா இருந்தார். சூடா டீ குடிச்சிட்டு இரவு சாப்பாடு என்ன வேணும்னு கேட்டார் தாமஸ் அண்ணன்.  கொத்து, இடியாப்பம், வாங்கியாராச்சொன்னோம்.

அதற்குள்ளார அந்த மலைப்பிரதேசத்துல பனி மூட்டம் ஆரம்பிச்சிருச்சாம்.
ஆனா தாமஸ் அண்ணன் சொன்ன தகவல் மனசுக்கு கஷ்டமா இருந்தது. நாங்க போயிருந்தது மே மாத கடைசியில. ஜனவரில எல்லாம் தண்ணி பஞ்சமா இருந்துச்சாம் நுவரேலியா. மழையே இல்லைன்னு சொன்னாங்க. அடக்கடவுளே, இந்த இயற்கை அழகிக்கு வந்த சோதனையான்னு நினைச்சுக்கிட்டோம்.

இராச்சாப்பாடு முடிச்சிட்டு சீக்கிரமே படுத்துட்டோம். காலையில் டீ குடிச்சதும் தோட்டத்துல போய் உக்காந்தோம். கெஸ்ட் ஹவுஸ் தோட்டம் தான் ஒவ்வொரு வருஷமும் தனியார் தோட்ட வளர்ப்பு பிரிவுல முதல் பரிசு வாங்கும். எல்லாம் தாமஸ் அண்ணன் உழைப்பு தான். அங்கே கேர் டேக்கரா இருக்காப்ல. பீட்ரூட், லெட்டுஸ், கேரட், தக்காளி எல்லாம் அங்கயே பயிரிடறாங்க. அதை வாரம் ஒரு முறை லாரியில் ஏத்தி கொழும்புக்கு அனுப்பி வைப்பது வரை அவரது வேலை தான்.
சின்ன பிள்ளைகளா மாறி ஊஞ்சலில் ஆடினது மனதுக்கு மகிழ்ச்சி.

காலைச்சாப்பாடும் வெளியிலிருந்து வாங்கியார சொல்லிருந்தோம். தால், போல் சம்பல் வீட்டுல செஞ்சிருந்தாரு. காலைச்சாப்பாடு முடிச்சு டீவி பாக்கலாம்னு உக்காந்தோம். டீவி வேலை செய்யலை. சந்தா பணம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லுது. கொழும்புக்கு போன் செஞ்சு சொல்லித்தான் ரீசார்ஜ் செய்யணும். ஆனா சனி ஞாயிறு ஆபிஸ்ல யாரும் இருக்க மாட்டாங்க பாருங்க. சரி என்ன செய்யலாம். அங்கே அருமையான ரேடியோ இருந்துச்சு. இருக்கவே இருக்கு நம்ம சக்தி எஃப் எம் & சூரியன் எஃப் எம். :)) பாட்டு கேட்டுகிட்டே பிள்ளைகளோட உக்காந்து சீட்டு விளையாடினோம். :)

டீவி பார்த்து போராவதை விட நாலும் பேரும் சேர்ந்து பொழுதை கழிச்சோம். தங்கிக்க இடம் இலவசம். சாப்பாட்டு செலவு எங்களது. என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்க தாமஸ் அண்ணா இருக்காப்ல. மதிய உணவுக்கு பணம் கொடுத்து காய், அரிசி வாங்கிக்க சொன்னோம். சுடச்சுட ரசம் கூட வெச்சு கொடுத்தது அந்த குளு குளு சீசனுக்கு இதமா இருந்தது.

சாயந்திரம் வெளியில ரவுண்ட் போகணும்னு பசங்க. ஹக்கல கார்டன், சீதா தேவி வனவாசம் இருந்த இடம் எல்லாம் பார்த்தாச்சு. அதனால் ஒன்லி ரெஸ்ட் எடுக்க தான் ப்ளான். பசங்க கொஞ்ச நேரம் வெளியில போவோம்னு சொல்ல சரின்னு ரெடியானோம்.
தொடரும்...
5 comments:

வல்லிசிம்ஹன் said...

Interseting Kala. this is the way to aspend holidays. Hope the children enjoyed it as much as you did.
Nuvaraliya reminded me of Radio Ceylon.

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

பசங்க ரொம்ப எஞ்சாய் செஞ்சாங்க. அதைப்பத்தின பதிவு வருது

வருகைக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

நுவேரேலியா அழகோ அழகு.போன வருடம் போன போது பார்த்தேன்.ஒரு விசிட் அடிச்சுட்டு இரவு பண்டாரவளையில் தங்கினோம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

கொள்ளை அழகு தான் :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

‘தளிர்’ சுரேஷ் said...

பயணப் பகிர்வு அருமை! நன்றி!