Saturday, January 10, 2015

ஊர் சுத்தினது - 4

நாங்க போனதிலேர்ந்து லேசா தூறிக்கிட்டே இருக்கு. அதனால எங்கயும் போக வேணாம்னு இருந்தோம். ஆனா பசங்களுக்கு போட்டிங் போகணும்னு. கெஸ்ட் ஹவுஸுக்கு எதிர்லயே அழகான Gregory ஏரி.போட்டிங்குக்கு ரேட்டு கேட்டா அரை மணி நேரத்துக்கு 3000 இலங்கை பணம்னு சொன்னாங்க. வேண்டவே வேண்டாம். அதுவும் இந்த மழை தூரல்ல போகாதீங்கன்னு தாமஸ் அண்ணேன் சொன்னாப்ல. ஆனாலும் பசங்க ஏரிகிட்ட போவோம்னு சொல்ல சரின்னு காரை எடுத்துகிட்டு கிளம்பினோம். டிரைவர் பார்க்கிங் பாத்துக்கறேன்னு சொல்ல, நாங்க உள்ளே நுழைஞ்சோம். அங்கே சைக்கிளிங் செய்யறதை பார்த்து அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் சைக்கிளிங் செய்யணும்னு ஆசை. ஏரிக்கிட்ட சைக்கிளிங்கான்னு எனக்கு பயமா இருந்தது. ஆனா போகணும்னு பசங்க. உள்ளே போய் பாத்தாதான் தெரியும் சைக்கிளிங் செய்ய இடம் நல்லா இருக்குன்னு.


ரெண்டு நாள் ஓடினதே தெரியலை. நேரா நேரத்துக்கு தாமஸ் அண்ணன் சாப்பாடு, டீ/காபின்னு கொடுக்க, ஆனந்தமா ரிலாக்ஸ் செஞ்சோம். போன் கால் ஏதும் இல்லை. செம ஜாலியா இருந்தது. அடுத்த நாள் காலையில் டிபன் சாப்பிட்டு கிளம்பினோம் கொழும்புக்கு. மழை எங்களை துரத்திக்கிட்டே வந்தது. போற வழியில கொம்பனித்தெரு முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டோம். நாங்க சிட்டி அவுட்டர்ல தங்கியிருந்ததால சிட்டில இருந்த எஃபகட் இல்லன்னு அம்ருதம்மா சொல்ல அவங்களுக்காக கால் ரோடில் ஒரு ரவுண்ட் அடிச்சோம். அப்பத்தான் கடலுக்குள்ள மண்ணயும், கல்லையும் கொட்டி 15 கீமீ உள்ள போய் புது நகரம் உருவாக்க போறாங்கன்னு டிரைவர் சொன்னார்.கெஸ்ட் ஹவுஸ் சேரும்பொழுது ராத்திரி ஆகிடிச்சு. டின்னர் பேக் செஞ்சு வாங்கிகிட்டே போனோம். ( எஸ்ஸு கொத்துதான்)  அதற்கப்புறம் சரியான மழை.

அடுத்த நாள்  பிள்ளைகளின் எலக்யூசன் டீச்சரை பார்த்து பேசிட்டு, எங்க ஃபேவரிட் ஹவுஸ் ஆப் பேஷன் போனோம். ஹவுஸ் ஆஃப் பேஷன் கடை முன்ன Duplication Roadல இருந்தது. விலைகள் ரீசனபிளா இருக்கும். தரமாவும் கிடைக்கும். ஆனா இப்ப D S Senanayake Mawathaல பெரிய கடையா மாத்திட்டாங்க. போய் பாப்போமேன்னு போனோம். விலைகள் கன்னாபின்னான்னு ஏறி இருக்குன்னு நட்புக்கள்லாம் சொன்னாங்க.  உண்மைதான். நாங்க வழக்கமா போற கடைக்கு போயிட்டு வந்த திருப்தியே இல்ல. :(  ஏதோ புதுக்கடைக்கு போயிட்டு வந்த எஃப்கட். ரகங்களும் அந்த மாதிரி. விலையும் ஏக்க சக்கம். அயித்தானுக்கு ஐபேட் பேக் மட்டும் நல்லா இருந்தது. சில டீ ஷர்ட்டுகள் வாங்கிகிட்டோம்.

அயித்தானுக்கு போர்ட் மீட்டிங்குக்கு நேரமாகவே சீக்கிரம் பர்ச்சேசிங் முடிச்சு கிளம்பினோம். மதியம் லன்ச் எங்க போகலாம்னு யோசிச்சோம். அயித்தான் ஆபிஸ் கிட்டயே லஞ்ச் பாத்துப்பதா சொல்ல நாங்க அவரை இறக்கி விட்டுட்டு பசங்க ஃபேவரிட் இடமான சென்சாலுக்கு வந்தோம். அங்கயே கிம்புல பன், வெஜிடபிள் ரோட்டி, டோனட் அப்படின்னு சிம்பிளா லஞ்ச் முடிச்சு நாங்க கெஸ்ட் ஹவுஸ் போய் ரெஸ்ட் எடுத்தோம்.

சாயந்திரமா கிளம்பி மெஜஸ்டிக் சிட்டி வந்தோம். அங்கதான் அம்ருதம்மா அவங்க ஃப்ரண்ட்ஸ்களை மீட் செய்ய ப்ளான் போட்டிருந்தாங்க. 4 பேர் வந்திருந்தாங்க. ஆஷிஷ் அண்ணாவோட ஃப்ரெண்டும் வர அவர் ஜாலியா ரவுண்ட் அடிச்சுகிட்டு இருக்க, அங்கே சின்னதா ஒரு பதிவர் சந்திப்பும் நடந்தது. நம்ம தென்றல் என் கீதம் சுதர்ஷ்ணி தன் பிள்ளைகளோட வந்திருந்தாங்க. பாவம் பாப்பாவுக்கு ஜுரம். டாக்டர்கிட்ட போயிட்டு அதோட வந்திருந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. கொடுமை என்னன்னா, காலையில எலக்க்யூசன் டீச்சரை பார்க்க போயிருந்தேன்ல, அந்த ஏரியாவுல அதே தெருவுல தான் சுதர்ஷிணி வீடும் இருந்திருக்கு. தெரிஞ்சிருந்தா பாவம் அவங்களை அலையவிடாம அங்கயே சந்திச்சிருக்கலாம்.

அயித்தானும் மீட்டிங் முடிஞ்சு வர, அவருடைய நண்பர் கால் செஞ்சாப்ல. நம்ம சிசில் அய்யே தான். கெஸ்ட் ஹவுஸ்ல பாக்க வர்றதா சொல்ல அவங்க குடும்பத்தினருக்கும் சேர்த்து டின்னர் பேக் செஞ்சு எடுத்துக்கிட்டு போனோம். அவங்க பசங்களும் வளர்ந்துட்டாங்க. அவங்க கிளம்பினதும் ரீ பேக்கிங் செஞ்சுட்டு சீக்கிரம் எந்திரிக்க அலாரம் வெச்சுட்டு தூங்க போனோம்.

7.30 மணிக்கு ஃப்ளைட்டாச்சே!!!...

தொடரும்6 comments:

-'பரிவை' சே.குமார் said...

பயணத் தொடர் அருமை அம்மா...

புதுகைத் தென்றல் said...

வாங்க குமார்,

வருகைக்கு மிக்க நன்றி

‘தளிர்’ சுரேஷ் said...

பயணப் பகிர்வு சிறப்பு! நன்றி!

ரூபன் said...

வணக்கம்
நானும் சென்றது போல ஒரு உணர்வு.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதுகைத் தென்றல் said...

வாங்க சுரேஷ்,

உங்களின் வருகைக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ரூபன்,

தொடர்வதற்கு மிக்க நன்றி