Monday, January 12, 2015

ஊர் சுத்தினது - 5 ( நனவான கனவு)

7.30 மணிக்கு ஃப்ளைட். 3 மணிநேரம் முன்னால இருக்கணும்னு சீக்கிரம் எழுந்திரிச்சு கு்ளிச்சு ரெடியாகினோம். டிரைவர் நேரத்தே வந்ததும் லக்கேஜ்களை ஏத்திட்டு மைக்கலுக்கு நன்றி சொல்லி கிளம்பிட்டோம்.
 ஏர்போர்ட்டுக்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சது ஃப்ளைட் 1 மணிநேரம் லேட்டுன்னு. சரி போகுதுன்னு லோட்டஸ் லவுஞ்ச்ல ரெஸ்ட் எடுக்கலாம்னு அயித்தான் கூட்டிப்போனாக. காலைச்சாப்பாடும் அங்கயே முடிச்சுக்கலாம்.
பசங்களுக்கு சீக்கிரமே சாப்பிட்டு பழக்கமாச்சே. அங்க என்னென்ன இருக்குன்னு பாக்க ஒரு ரவுண்ட் போனப்ப இன்ப அதிர்ச்சி.

 கிரிபாத்னு ஒரு அயிட்டம் இலங்கையில் ரொம்ப ஃபேமஸ்.  புத்தாண்டுக்கு கண்டிப்பா செய்வாங்க. தேங்காய்பாலில் சோறு செய்வது. அதோட லுனு மிரிச் வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும். ஆனா இந்த வாட்டி அதை சாப்பிடும் பாக்கியமே இல்லைன்னு நினைச்சுகிட்டு இருக்க, அந்த கிரிபாத் அங்கே லவுன்சில் இருந்தது. எனக்கும் ஆஷிஷுக்கும் செம குஷி.


சீக்கிரமே எந்திரிச்சதால தூக்கம் கண்ணை சுத்துது. சரின்னு கொஞ்ச நேரம் அங்கயே படுத்தேன். பசங்க கொஞ்ச நேரம் படுத்துட்டு பாட்டு கேட்டாங்க. போர்டிங்னு அறிவிப்பு வந்ததும் ரெடியாகி போனோம். இந்தியாவுக்கு திரும்பினோம்னு நினைச்சீங்களா இல்லையே!! இந்த வாட்டி என் கனவு நனவானிச்சு. எஸ்ஸு போனது கீழே போட்டோவுல பாருங்க.

யெஸ்ஸு இந்த வாட்டி சூப்பர் பேக்கேஜ் கிடைச்சிருந்தது. ஸ்ரீலங்கன் ஏர்லயன்ஸில் சென்னை, கொழும்பு, மாலே என அயித்தான் புக் செஞ்சிருந்தாங்க. எங்க அம்ருதம்மாவுக்கு தான் தண்ணி பயம் போயிருச்சுன்னு உறுதி சொல்லிட்டாங்களே.  அங்கன இருந்தப்பவே போகாம வந்திட்டம்னு புலம்புகிட்டு இருந்தேன். சரி வா இந்த வாட்டி போயிட்டு வருவோம்னு சொல்ல அதான் இந்த இலங்கை பயணம் வாய்ச்சது. ஆஷிஷ் அண்ணா காலேஜ் போறாங்களே, அப்புறம் அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒரு சேர லீவு கிடைப்பது கஷ்டமாச்சேன்னு தான் இந்த விடுமுறை. :)


அப்பாவும் மகளும் ஒரு ரோவுல, நானும் ஆஷிஷ் அண்ணாவும் ஒரு ரோவுல. விண்டோ சீட்ல உக்காந்து அண்ணா போட்டோவா எடுத்து தள்ளிட்டாரு. அதுலயும் மாலே ஏர்போர்ட்ல லேண்டிங் இருக்கே அந்த வீடியோ சூப்பர். ஆனா அதை யூ ட்யூப்ல ஏத்த முடியலை. நெட்ல தேடினப்ப கிடைச்ச வீடியோவை கொடுக்கறேன். சூப்பரா இருக்கு. கட்டாயம் பாருங்க.
காக்பீட் வ்யூல இந்த வீடியோ சூப்பரா இருக்கு.  ரன்வே இருப்பது ஒரு தீவு. அதான் ஏர்போர்ட். அது பக்கத்துலேயே இன்னொரு தீவு தெரியுது பாருங்க அது தான் மாலே சிட்டி.  மாலைகளின் தீவு தான் மாலத்தீவுன்னு மாறியிருக்கறதா சொல்றாங்க. சிங்கள மொழியில மஹிளா தீபமாம். அதாவது பெண்களின் தீவு. நிறைய்ய சுவாரஸ்யமான தகவல்கள் விக்கிபீடியாவுல இருக்கு பாருங்க.

ரொம்ப சின்ன ஏர்போர்ட் தான். hulhule தீவுல  North Male Atoll தான் இந்த ஏர்போர்ட் அமைஞ்சிருக்கு.  மொத்தம் 1.1942 குட்டி குட்டி தீவுகள் இருக்கு. அதுல 200 தீவுகளில் தான் மக்கள் வாழ்றாங்க. இப்ராஹிம் நசிர் சர்வதேச விமான நிலையம் இதான் விமான நிலையத்தோட பேர்.

விலைவாசி ரொம்ப ஜாஸ்தி மாலேயில். அயித்தான் முன்ன அங்கே மார்கட் வொர்க் செஞ்சிருக்காங்க என்பதால தெரியும். அங்கே அயித்தானோட நண்பர் ஒருத்தர் இப்பவும் இருக்கார். மாலே போவதுன்னு முடிவானதும் அவர்கிட்ட பேசி எங்க தங்கலாம் எல்லாம் ப்ளான் செஞ்சுகிட்டோம். தாஜ் ரிசார்ட் எல்லாம் இருக்கு. செம செம காஸ்ட்லி. நம்ம பட்ஜட்ல அடங்கற மாதிரி அதே சமயம் நல்லா எஞ்சாய் செய்யணும் அதுமாதிரி ஒரு ஹோட்டல் ஐலேண்ட் பாக்க சொன்னோம். சமீபத்துல அவங்க குடும்பத்தாரை கூட்டிகிட்டு போன ஹோட்டல் நல்லா இருந்ததாகவும் அதை பத்தின விவரங்களையும் அனுப்பி வெச்சிருந்தாப்ல. எங்களுக்கும் பிடிச்சிருந்தது. நாலு பேருக்கும் பேக்கேஜா எடுத்துகிட்டோம்.

ஏர்போர்ட்ல visa on arrival. அதனால பிரச்சனை இல்லை.  ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சு வெளிய வந்தா கடல் வான்னு வரவேற்குது. அயித்தானின் நண்பர் காத்திருந்தாப்ல. அவரை சந்திச்சு  பேசிட்டு, கடல் பேக்க்ரவுண்ட்ல போட்டோ எடுத்துக்கிட்டோம். அழகான நீலக்கலர்ல கடல் தண்ணி பாக்கவே அம்புட்டு அழகா இருந்துச்சு.

அங்கேயிருந்து நாங்க தங்கப்போற தீவுக்கு போகணும். அந்த ஹோட்டல்லேர்ந்து வரவேண்டிய போட் இன்னும் வரலை. சரி கொஞ்சம் நேரம் வெயிட் செய்வோம்.:)

தொடரும்.8 comments:

கோமதி அரசு said...

நானும் 5ம் தேதியிலிருந்து 10 தேதிவரை ஊர் சுத்தினதால் உங்கள் பதிவுகளை பார்க்கவில்லை. பயண அனுபவங்களை படிக்கிறேன்.

‘தளிர்’ சுரேஷ் said...

மாலத்தீவின் அழகு மயக்க வைக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

Vijay Periasamy said...

அருமையான மாலத் தீவு !

வெங்கட் நாகராஜ் said...

தீவில் ஒரு ஹோட்டல் - நிச்சயம் ஒரு சுகானுபவமாகத் தான் இருந்திருக்கும். தொடர்கிறேன்...

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதிம்மா,

நான் போயிட்டு வந்து ஆகுது 8 மாசம் இப்பதான் பதிவு வருது. :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சுரேஷ்,

குட்டி குட்டித்தீவுகள் பார்க்க அழகா இருக்கு. கடலும் கடல் சார்ந்த இடமும்னு மனசை கொள்ளை கொண்ட அழகு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க விஜய்,

ஆமாம் அருமை.
வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

உங்க கனிப்பு சரிதான். :)

வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி