வீடுகளில் பண்டிகை காலம். வரிசையாக போகி,தைப்பொங்கல்,கணுப்பொங்கல்னு கொண்டாட்டமான வாரம். பொங்கலுக்கு எல்லாம் ரெடியாகி கிட்டு இருப்பாங்க. பொங்கல்னா எங்க ஊர்ல நடந்ததுதான் ஞாபகம் வரும். வீதியில யார் வீட்டுல எல்லாம் இந்த வருஷம் பெயிண்ட் அடிச்சிருக்காங்க என்பது பெரிய விஷயமா இருக்கும். இப்ப மாதிரி பெயிண்ட் எங்க டிஸ்டம்பர்னு ஒண்ணு அடிப்போம்.
சில வருஷம் வீட்டுக்குள்ள ஒதுங்க வெச்சு, சுத்தமாக்கிட்டு வெளியில வீட்டு முகப்புக்கு மட்டும் சுண்ணாம்பு அடிப்போம். அதுலயும் கோவில்ல இருக்கற மாதிரி கீழே மட்டும் காவி அடிப்பாங்க பாருங்க அதுவே அழகா இருக்கும். தனி வீடுன்னா எம்புட்டோ சொளகர்யம் தான்.
மார்கழி மாசம் தெருவையே அடைச்சு கோலம் போட்டவங்க தான். கோலப்போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்துக்குவோம். ஆனா இப்ப அப்பார்ட்மெண்ட் வாசியானதுக்கப்புறம் சின்ன கோலத்தோட சரி. நாளு கிழமையில் சின்ன கோலத்துலயும் கலர் கோலம் போட்டு சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்.
ஆனா பாருங்க சிலர் இதையும் கிண்டலடிப்பாங்க. சமீபத்துல ஒரு புத்தகத்துல படிச்சேன். “ குக்கரில் பொங்கல் வெச்சு, சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான்” அப்படிங்கற ரீதியில ஒருத்தர் எழுதியிருந்தார். தனி வீட்டுல இருக்கறவங்க இஷ்டப்படி வெட்ட வெளியில பொங்கல் வெச்சு சாமி கும்பிடலாம். நகரங்களில் அதுவும் அப்பார்ட்மெண்டில் இருக்கறவங்க எங்கன போய் பொங்க வைக்க? கியாஸ் அடுப்பில்தான் வைக்க முடியும். விறகு அடுப்பை எங்க போய் தேட சொல்லுங்க. முடிஞ்சவங்க கியாஸ் அடுப்பில் வெங்கலப்பானை வெச்சாவது பொங்கல் செய்வாங்க. வெங்கலப்பானை எல்லாம் உபயோகப்படுத்தாதவங்க குக்கரில் பொங்கல் வைக்கறாங்க. இதுல என்ன தப்பு இருக்கு.
திரு நாள் அன்னைக்கு பால் பொங்கிச்சா, வீடு சுபிஷமடைஞ்சுச்சான்னு பாத்தா போதும்னு நினைக்கிறேன். பண்டிகையை விடாம கொண்டாடுறாங்களேன்னு சந்தோஷப்படுறதை விட்டுட்டு குக்கரில் வைக்கறாங்க, கியாஸ் அடுப்புல வைக்கறாங்கன்னு புலம்ப இப்ப நாம இருப்பது தனி வீடுகளில் இல்லை என்பதை புரிஞ்சு இந்த மாதிரி எதிர்மறையா பேசும்போது/ எழுதும்போது மக்கள் மனசு வருத்தப்பட்டு அதையும் செய்யாம போயிட வாய்ப்பு இருக்கு.
அப்பார்ட்மெண்ட்களில் மொட்டை மாடியில் வைக்கலாம்னு சிலர் சொல்லலாம். அதுக்கு மண்ணெணெய் அடுப்பு மாதிரி தேடனும். கியாஸ் அடுப்பில் பொங்கல் செஞ்சிட்டு மொட்டை மாடிக்கு எடுத்து போய் பூஜை செய்யலாம். இல்லையா வீட்டு பால்கனியில் சூரியன் ஹாய் சொன்னா அங்கயே வெச்சு பூஜை செஞ்சாலும் சரிதான். பண்டிகையை விடாம கொண்டாடும் மனசு, முறையா செய்ய ஆசை இருந்தாலும், முடிஞ்சதை செய்யும் உள்ளம் இவைகள் போதும் ஆனந்தமா பண்டிகை கொண்டாட.
என் மனசுல பட்டதைதான் சொல்லியிருக்கேன்.
ஆஷிஷ் அண்ணா பண்டிகைக்கு வர்றாப்ல. வழக்கம் போல பிறந்த வீட்டு சீதனப்பணம் வந்திருச்சு. சூப்பரா புது வெங்கலப்பானை வாங்கியிருக்கேன். அதுல ஆனந்தமா பொங்கல் வெச்சு அந்த போட்டோக்களோட வர்றேன். அனைவருக்கும் ஆனந்தமான பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

16 comments:
பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் அவ்வளவுதான்.
முடிந்தவரை விடாமல் செய்ய வேண்டும்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
கொண்டாட்டமான பொங்கல் வாழ்த்துக்கள் !
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
காலத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் வருவது தானே..... அதில் தவறொன்றும் இல்லை.
இருக்கும் வசதிகளை வைத்து குறையில்லாமல் கொண்டாடுவதுதான் பண்டிகையின் அடிப்படை.
இனிய தமிழர் தின வாழ்த்துக்கள்...
சொல்றவங்க சொல்லிட்டு போறாங்க விடுங்க. நாங்க எப்பவுமே வீட்டுல கேஸ் அடுப்புல வெங்கலபானை வச்சு பொங்கல் செஞ்சிட்டு மாடியில கோலம் போடுத்தான் பூஜை செய்யறது வழக்கம். அபார்ட்மெண்ட்ல எல்லோரும் வித்தியாசமா பார்ப்பாங்க. ஆனா,நாங்க கண்டுக்கறதில்லை. இந்த வருஷம் ஒரு கிராமத்துக்கு போறோம் (ஆபீஸ்காரங்களோட) பொங்கலுக்கு. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா.
நியாயமான ஆதங்கம். புரியாதவர்கள் புரிந்துகொண்டால் நல்லது. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் கலா.
வாங்க கோமதிம்மா,
எனக்கும் அதே எண்ணம் தான். அந்த பத்திரிகையில் இந்த மாதிரி புலம்பியிருந்தது பார்க்கும்போது கோவம் தான் வந்தது.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க விஜய்,
செம கொண்டாட்டமா கொண்டாடியாச்சு.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க சகோ,
அதானே.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சாந்தி,
அடிப்படியே அதுதாங்கறதை சிலர் மறந்திடறாங்க.
வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தனபாலன்,
நலமா? வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க தானைத்தலைவி,
எங்க அப்பார்ட்மெண்ட் மொட்டை மாடி போகக்கூடிய நிலமையில் இல்லை. அதனால பால்கனியிலேயே பூஜை நடந்தது.
வருகைக்கு மிக்க நன்றி
வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Post a Comment