Thursday, May 21, 2015

நான் கேட்பது தப்பா??!!!!

உங்க கிட்ட கேட்காம யாருகிட்ட கேட்கிறது?!! நாம சின்ன குழந்தையா இருந்தப்ப வீட்டுல சில பொருட்கள் குழந்தைகள் கையில் எட்டாத இடத்துல வைப்பாங்க. மருந்து, கெரோசின், எண்ணெய்கள் தவிர, அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்களை எட்டாத உயரத்துல வெச்சிருவாங்க. பீரோவை திறந்து அதை அண்ணாந்து பாத்துக்கிட்டு இருப்போமே தவிர அதை கையால ஒரு போதும் தொட அனுமதி கிடையாது.

அந்த மாதிரி நம்ம பெற்றோர் இருந்தது தப்பேதுமில்லை. விலை ஜாஸ்தின்னு பிள்ளைக்குத் தெரியுமா. கைபட்டு உடைஞ்சு போய் இல்லை ரிப்பேர் ஆகின்னு ஆகிட்டா அதை சரி செய்ய செலவாகும். அதோட அருமை பிள்ளைகளுக்கு தெரியாது. அறியாத வயசுன்னு அந்த மாதிரி வளர்த்தாங்க.

ஆனா இப்பொழுதைய பிள்ளை வளர்ப்புல மட்டும் இதுல மாற்றத்தை பார்த்தேன். மாத்திரை, மருந்தெல்லாம் எட்டாம தூரமாத்தான் வைக்கறாங்க. ஆனா பிறந்த குழந்தை டீவி சத்தத்துக்கு தலைய திருப்பி பாத்ததெல்லாம் பழைய கதை. லேட்டஸ்ட் பிறந்த குழந்தை ஃபேஸ்புக் அக்கவுண்ட்டோட மட்டுமில்லை அதை எப்படி ஆப்பரேட் செய்வதுன்னு தெரிஞ்சுகிட்டே பிறக்கற மாதிரி இருக்கு.

மிகைப்படுத்தி ஏதும் சொல்லலீங்க. சில உறவினர்கள் மட்டும் நண்பர்கள் வீட்டில் நான் கண்டதை பத்தி தான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன். சின்ன குழந்தைகளுக்கெல்லாம் ஐபாட், டேப் தான். கேட்டா அதுக பாட்டுக்கு அதுல கேம்ஸ் விளையாடிகிட்டு இருப்பாங்க. பிரச்சனை ஏதுமில்லை. சாப்பாடு ஒழுங்கா உள்ள போகுதுன்னு அதுக்கு விளக்கம் வேற.

ஐபாட்லாம் என்ன விலை. ஐபாட் விடுங்க ஒரு டேப் குறைஞ்சது 16000. இம்புட்டு விலை கொடுத்து வாங்கி அதை பிள்ளைகள் கொடுப்பது நல்லதா???
காஸ்ட்லியான பொருள் என்பதோட மட்டுமில்லாமல் இதுக்கு பழக்க பட்ட குழந்தைகள் கவனச்சிதைவு குறைபாடு ஏற்படுது. ADD  ( attention deficiency syndrome) தன் குழந்தைகளை பாதிச்சிருக்குன்னு எத்தனை பெற்றோர்களூக்கு தெரியும். பரிட்சையில மார்க் ஒழுங்கா வருதுல்ல அப்புறமென்னன்னு பசங்க கேட்கறாங்க.  பரிட்சையில் மார்க் வருது சரி.  விஷய அறிவு எம்புட்டு தூரம் இருக்குன்னு பரிட்சை மார்க் வெச்சு சொல்லிட முடியாது. (இதுக்கு தான் இந்த சிலபஸ்களை மாத்தணும்னு பலரும் சொல்றாங்க)

தன் வீட்டுல ஐபாட், டேப்ல பழகின பசங்க விருந்தினரா யார் வீட்டுக்கு போனாலும் அவங்க வீட்டு ஐபாட், ஸ்மார்ட் போனை கேக்காமலேயே எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கறப்ப அவங்க எவ்வளவு தூரத்துக்கு அடிக்‌ஷன் ஆகியிருக்காங்கன்னு தெரியுது. இதுல பெத்தவங்க என் குழந்தைக்கு ஐபேட்ல்லாம் நல்லா ஆப்பரேட் செய்ய தெரியும்!!  ஸ்மார் போன்லாம் அவங்களுக்கு ஜுஜூபின்னு சொல்லும்போது எனக்கு மனசு ரொம்ப வருத்தமா இருக்கும். டெக்ன்லாஜி வளர்ச்சி மனிஷங்க  கூட பேசறதை மட்டும் குறைக்கலை சின்ன குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்குது. ஆனா அதைப்பத்தி யாரும் கவலைப்படாம இருக்காங்க.

மேலை நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு தோழன் தோழி எல்லாமே லாப்டாப், ஐபாட், டேப் தான். அவங்க இந்தியா வரும்போது பாத்தீங்கன்னா இதெல்லாம் தூக்கிகிட்டு வருவாங்க. இங்க இருக்கும்போது கூட பசங்க உறவுகளோட பேசித் திரியாம ஐபாட்/டேப்போட தான் இருப்பாங்க. வெளியில போனா பொல்யூஷன்னு சொல்லி இன்னமும் அதோட ஐக்கியமாகி இருப்பாங்க. ஆனா இந்த நிலை இப்ப நம்ம இந்தியாவிலேயே இருக்கும் குழந்தைகள் கிட்டயும் இருக்கு என்பது தான் வேதனை தரும் விஷயம்.

அந்த வயசுக்கு அவங்களூக்கு என்ன கொடுக்கலாமோ அதை மட்டும் கொடுப்போமே? ஐபேட்/ டேப்புக்கு நோ சொல்லி வளர்க்கலாமா? 18 வயசு ஆகாம டூவிலர் ஓட்டகொடுப்பது எவ்வளவு தப்பு. சட்டப்படி குற்றம். ஆனாலும் சில பொடிசுகள் ஓட்டிக்கிட்டு தான் இருக்காங்க. ஆனா சில பெற்றோரால மட்டும் 18 வயசு ஆகாம வண்டி கிடையாதுன்னு கறாரா சொல்லி எப்படி வளர்க்க முடியுது? பிள்ளைங்களுக்கு நல்லதுன்னு நினைப்பதாலத்தானே அப்படி செய்யறாங்க. இப்படி செய்வதால நாம குழந்தைக்கு கெடுதல் ஏதும் செய்யலீங்க. நல்லது தான் செய்யறோம். அடிக்‌ஷன் ஆன பசங்களுக்கு அந்த பழக்கத்துலேர்ந்து வெளிய வருவது ரொம்ப கஷ்டம். ஆனா பெற்றோர் கொஞ்சம் மெனக்கெட்டா முடியும். இது சாத்தியமாகும்.  டாம் & ஜெர்ரி ஷோவே நெகட்டிவிட்டிய காட்டுதுன்னு சொல்வாங்க. அப்படி இருக்க பிள்ளைக விளையாடும் கேம்ஸ் ரூபத்துல எத்தனை வில்லன்கள் இருக்கும்னு தெரியுமா? யோசிச்சு பாருங்க.

இந்த மாதிரி பிள்ளைகளை பார்க்கும் போது ஆஷிஷ் அம்ருதா என் கிட்ட அடிக்கும் கமெண்ட்.  எங்களை விட எம்புட்டு பொடிசுகளெல்லாம் தனக்குன்னு ஒரு ஐபாட்/டேப் வெச்சுக்கிட்டு இருக்காங்க பாருங்கன்னு. இதிலிருந்து எல்லாம் என் பிள்ளைகளை விலக்கி வெச்சதாலத்தான் அதுங்க நல்லா இருக்கு. இதில் என் பிள்ளைகளுக்கும்  சந்தோஷம் தான். மத்த பிள்ளைகளும் சந்தோஷமா, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழணும் எனும் ஆசையில் இதை பகிர்ந்துக்கிறேன்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக சாத்தியமாகும்... பெற்றோர்கள் உணர வேண்டும்...

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ஆமாம் இது பெற்றோர் கையில் தான் இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

Unknown said...

அக்கா நீங்க சொல்லறது மிக மிக சரி. எங்க வீட்டில் கூட என் பெண்ணுக்கு ipad/iphone எல்லாம் ரொம்ப பிடித்தமில்லை. அதில் விளையாடுவது ரொம்பவே அரிது. என் தம்பி பையன் ஒரு வயசிலே smartphone வைத்து கொண்டு விளையாடிக்கொண்டு தான் சாப்பிடுவான். அதில் இருந்து random numberskku கால் கூட செய்வான். நான் பல தடவை சொல்லிவிட்டேன் ஆனாலும் அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து அவனை மாற்ற முயற்சி கூட செய்யவில்லை. அதற்கு பதில் என்னமோ அவன் சாப்பிட அடம் செய்கிறான் என்று. நீங்கள் சொல்ல்வது போல மனிதர்களின் சிநேகம் மறக்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. நம் வீட்டில் வளர்ப்பு முறையை மாற்றினால் தான் இது மாறும்.

பி.கு : சென்னை அக்னி நக்ஷத்திரம் வெயில் எப்படி உள்ளது.

Uma
Bayarea, California

Unknown said...

People go to fine dinning places and still do not talk to each other. Once I saw a mother with 3 kids and all four of them had their own Ipad including the toddler in the pram. Then the father came and joined them in the middle. Alas! When he settled down, he took out his phone and started using it. I felt like smacking the dad and the mother with my handbag

pudugaithendral said...

வாங்க உமா,

ரொம்ப தாமதமா தான் பின்னூட்டத்தை பார்க்கறேன். மன்னிக்கவும். அக்னி நட்சத்திரம் முடிஞ்சு ஒரு மாசம் ஆகப்போகுது ஆனாலும் அப்படியே தான் இருக்கு. :( :)

//நம் வீட்டில் வளர்ப்பு முறையை மாற்றினால் தான் இது மாறும். // ரொம்ப ரொம்ப சரி.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

Hi edna,

Thanks for visiting my blog. you are correct. Now a days people thinking that settling with cadgets is their way of relaxing. where in doctors are saying that ADD can even affect adults.