Friday, June 26, 2015

ஆணியே.......... வேணாம்

அம்ருதம்மாவுக்கு ட்யூஷன் ஏதும் ஏற்பாடு செய்யலாம்னு பக்கத்துல இருக்கற ஒரு செண்டருக்கு போனேன். IITiansகளால நடத்தப்படுதுன்னு விளம்பரம் இருந்தாலும் அதுக்கு கீழ ட்யூஷனும் எடுக்கப்படும் போட்டிருந்தாங்க. அதனால போய் விசாரிச்சேன். அம்ருதம்மாவும் கூடவே வந்திருந்தாங்க.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்துக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுக்கறீங்கன்னு பாத்தேன் அதைபத்தி விசாரிக்க வந்திருக்கேன். அப்படின்னு சொன்னேன்.

அங்க ஒரு லேடி இருந்தாங்க. இன்னொரு ஆந்திரா அப்பாயி (abbayi) இருந்தாரு. அவர்தான் ஃபேக்வல்ட்டியாம். அதனால அவர் தெளிவா சொல்வாருன்னு சொல்லி இந்தம்மா சொல்ல சரி சொல்லுங்கன்னு கேட்டேன்.

நான் விசாரிச்சது ட்யூஷனுக்கு ஆனா, அவர் ஆரம்பிச்சது ஐஐடி. ஜேயி கோச்சிங்குக்கு. இது நான் கேக்கலியேன்னு சொன்னேன். மேடம் நான் சொல்வதை முழுதும் கேட்டுட்டு பிறகு முடிவு செய்யுங்கன்னு சொன்னார். ஆந்திரா அப்பாயி ஆங்கிலத்துல தான் பேசினார். நானும் அம்ருதாவும் தெலுங்கில் பேசினதை கேட்டு முகம் மலர்ந்து தனக்கு விஜயவாடா பக்கம்னு சொல்லிக்கிட்டார்.

மேட்டருக்கு வருவோம். இங்க நாங்க ஐஐடி எண்ட்ரன்ஸுக்கு கோச்சிங் தர்றோம். எங்க கோச்சிங் அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு சொன்னவர் சொன்ன மேலும் சில தகவல்கள்.

1. வாரத்துக்கு 4 நாள் கோச்சிங். 5 ஆம் நாள் டெஸ்ட்.
2.  +1 பாடம் எதுவும் சொல்லிக்கொடுக்க மாட்டாங்க. ஒன்லி எண்ட்ரன்ஸ் பேப்பர்  அதை எப்படி செய்வதுன்னு பரிட்சைக்கு தயாராக்குவதுதான் வேலை.

சரி. +1` சப்ஜக்ட்ல டவுட் வந்தா எப்படி?

+1ல மார்க்கு கம்மியா எடுத்தாலும் பிரச்சனை இல்லை. நமக்கு ஐஐடி எண்ட்ரன்ஸ் கிராக் செய்வதுதான் முக்கியம்.!!!!!!!!!!!!!!!!! ஓஓஒ அது சேரி.

+2லயாவது பாடத்திட்டத்தை டச் செய்வீங்களா? - இது நான்.

ஆமாமா! அதுக்கு வெயிட்டேஜ் உண்டுல்ல. அதனால +2 ஆரம்பிச்சதுலேர்ந்து அந்த பாடத்தில் நல்ல மார்க் எடுக்க பயிற்சி கொடுப்போம்.

அந்த சமயத்துல ரெண்டையும் கான்சண்ட்ரேட் செய்வது கஷ்டம் என்பதாலத்தான் நாங்க +1லயே முழு மூச்சா ஐஐடி கோச்சிங் கொடுக்கறோம்.
அம்ருதாவை பார்த்து - +1ல 70% மார்க் வந்தா போதும். அதை கூட யாரும் கண்டுக்க மாட்டாங்க. பாஸ் செஞ்சிட்டா போதும்னு சொல்ல அம்மா என்னை பாக்கறாங்க.

இப்படியே விடக்கூடாதுன்னு நானும் சில பவுன்சர்களை போட்டேன். சரி மக்கா, இந்த +1 ஸ்கூல்ல போயித்தான் படிக்கறாங்க. அவங்க வைக்கற டெஸ்ட்ல மார்க் குறைஞ்சா டீச்சர்ஸ் கூப்பிட்டு பெத்தவங்களுக்கு கிளாஸ் எடுப்பாங்களே!!

அதுக்குதான் மேடம் சொல்றேன். +1ல எவ்வளவு மார்க் குறைஞ்சாலும் அதெல்லாம் கண்டுக்க கூடாது. உங்களூக்கே தெரியும். ஆந்திராவில எப்படின்னு. (ஆந்திரா போர்ட்ல +1 & +2 ரெண்டுமே போர்ட் எக்ஸாம் தான். ஆனா சிபிஎஸ்சில அப்படி இல்லையே. இதை அந்த நல்லவர் மறந்திட்டாரு)

+2ல நல்ல மார்க் எடுத்தா தான் காலேஜ் அட்மிஷன் கிடைக்கும். அப்ப என்ன செய்ய. - நம்ம அடுத்த பவுன்சர்.

அதாகப்பட்டது மேடம் ஐஐடி கோச்சிங் என்பது உச்சபட்ச நிலை படிப்பு!!! அதையே ஈசியா அவங்களால முடிக்க முடியும்ங்கற போது +2 படிப்பெல்லாம் ஜுஜூபி. அப்படின்னு சொல்ல. இதுக்கு மேல எனக்கு பொறுமை கிடையாதுன்னு , நான் யோசிச்சு சொல்றேன்னு வந்திட்டேன்.
***********************************************************************

சில நல்ல கல்லூரிகள், வெளி நாட்டுல மேல் படிப்பு படிக்கணும்னு நினைக்கறவங்களுக்கு +1 மார்க் ரொம்ப முக்கியம். +2 ரிசலட் வந்து அதற்கப்புறம் அப்ளை செஞ்சுன்னு இன்னும் தாமதமாகும் என்பதால +!ல 95% மதிப்பெண் இருந்தா அதை வெச்சு அப்ளை செய்யலாம்னு இருக்கு.

எல் கே ஜில என்ன சொல்லி கொடுத்திடப்போறாங்க, அதனால இந்த வருஷம் வீட்டுல இருக்கட்டும்னு முடிவு செஞ்சு யூ கே ஜில தான் ஒரு குழந்தை மொதோ மொதலா ஸ்கூலுக்கு போகுதுன்னு வெச்சுக்காங்க அப்ப அந்த குழந்தை  எல் கே ஜில மிஸ் செஞ்சதையும் சேத்து படிக்கணூம். +1 & +2 வருட படிப்பையும் சேர்த்து படிக்கறதுதான் ஹையர் செகண்ட்ரி. +1 பாடத்தையே படிக்காம டைரக்டா +2 பாடத்தை படிச்சு பாசாகி  மார்க் வாங்க வைக்கறது பல பள்ளிகளிலேயே நடக்கற விஷயம்.

+2 மார்க்கை வெச்சு அட்மிஷன் வாங்கி காலேஜ் சேர்ந்தாலும், அங்க போய் பசங்க படிக்க முடியாம கஷ்டப்பட காரணம் +1 போர்ஷனை கத்துக்காம போறதுதான். அடிப்படையை ஒழுங்கா கத்துக்காம எப்படி மேல்படிப்பு?
நல்லா யோசிச்சு கோச்சிங் கிளாஸ்ல போடுங்க நட்புக்களே. எல்லாரும் போடுறாங்கன்னு நாமும் கோச்சிங்க் , ட்யூஷன் போட்டு பிள்ளைகளுக்கு நல்லது செய்வதை விட்டு கெடுதல் செஞ்சிடாம இருக்கணூம்.

+2ல நல்ல மார்க் எடுத்தாதான் நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கும். ஆனா அந்த காலேஜ்ல ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கினா தான் ஒழுங்கான வேலை கிடைக்கும்.

டிஸ்கி: இந்த பதிவோட தலைப்பு தான் நானும் அம்ருதம்மாவும் எடுத்த முடிவு.
:)
10 comments:

துளசி கோபால் said...

ரொம்ப நல்ல முடிவு! குட் லக்!

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்... தலைப்பும் சரி தான்...

‘தளிர்’ சுரேஷ் said...

தமிழகத்திலும் பல பள்ளிகள் டியுசன் செண்டர்கள் பிளஸ் ஒன் பாடத்தை சொல்லிக் கொடுப்பது இல்லை! நான் டியுசன் நடத்திய போது பிளஸ் ஒன்னுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடத்துவேன். அதனாலேயே ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களை என் மாணவர்கள் பெற்றார்கள்

பரிவை சே.குமார் said...

இதுதான் உண்மை... பல பள்ளிகளில் 9,11 பாடங்களை எடுப்பதே இல்லை...
உங்க முடிவு நல்ல முடிவு.

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

எப்படில்லாம் பாடம் நடத்தறாங்க பாருங்க. மெட்ரிக் பள்ளிகளில் முக்கிய கேள்விகள் கொடுத்திடறாங்களாம். அதை மட்டும் படிச்சா நல்ல மார்க் கிடைக்குமாம். அதனால +2வில் நல்ல மார்க் எடுக்க முடியுமாம்!!!.

இந்த மாதிரி எல்லாம் செய்வதாலே தான் கபில் சிபில் +2 மார்க்கும் காலேஜ் அட்மிஷனுக்கு ஏத்துக்கணும். எண்ட்ரண்ஸ் மார்க் மட்டும் கூடாதுன்னு சொன்னார்
வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க தளிர் சுரேஷ்,

படிப்புல கூட ஷார்ட்கட் மெத்தட் கொண்டு வந்திட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க குமார்,

இதைப்பத்தி சமீபத்தில ஆனந்த விகடனில் கூட ஒரு கட்டுரை வந்திருக்கு. அரசாங்கம் விழிக்கணும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முடிவு. அடிப்படை பாடங்களை படிக்காது நேரே மேலே போக நினைக்கிறார்கள்....

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

ஆமாம். ஆனா அதை பெரும் வியாபாரமாக்கிருக்காங்க பாருங்க. அதான் கொடுமை.

வருகைக்கு மிக்க நன்றி