Tuesday, May 05, 2015

இதை எப்படி ஹேண்டில் செய்வது?

சமீப காலமா நான் கவனிச்சுக்கிட்டு வர்ற விஷயத்தை உங்க கிட்ட பகிர்ந்து ஒரு முடிவு தெரிஞ்சிக்க ஆசை.  இப்பல்லாம் மகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால வயதான கணவன் மனைவி இருவரும் தனியே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்னு வெச்சுக்கலாம்.

ரிட்டயர்ட் ஆன உடனே இல்ல, ஒரு 80 & 75 வயதுள்ள தம்பதிகள்னு வெச்சுப்போம்.  பெண்ணுக்கு எப்போது ரிட்டர்ய்மெண்ட் கிடையாது என்பது எங்க அம்மம்மாவோட ஸ்ட்ராங்கான அபிப்ராயம். எந்த ராஜா எந்த பட்டணம் போனாலும் சமைச்சுத்தான் ஆகணும். (கேட்டரிங்ல வாங்கி சாப்பிடறது எல்லாம் சிலருக்கு செட் ஆகாது)

இந்த மாதிரி வயதுகளில் இருக்கும் பல தம்பதிகளை பாத்திருக்கேன். அந்த காலத்தில் பத்து வயசு வித்தியாசத்துல கல்யாணம் செஞ்சு கொடுப்பது சர்வ சாதாரணம் என்பதால  அந்த வயசான ஆணுக்கு 85 வயசும், 75 வயசான மனைவியும்னு வெச்சுக்கோங்க.  எனக்கு வயசாகிடிச்சு அப்படின்னு ஆண் சொல்லிக்கிட்டு ரொம்ப அலட்டிக்காம ஓய்வா இருப்பதை பார்க்கிறேன். ( 70 வயசுலேர்ந்து ஆண்கள் சொல்லும் விஷயம் எனக்கு வயசாகிடிச்சு) பெருசா எந்த பொறுப்பையும் எடுத்துப்பதில்லை.  அதிலும் அவங்களுக்கு ஏதும் உடல்நிலை சரியில்லாம இருந்தா இன்னும் அதீத கவனிப்பு கொடுக்கப்படும்/படணும் என்பது எழுதாத விதி.

எல்லாம் சரி. ஆனா அவங்களை விட வயசு கம்மிங்கறதால அந்த அம்மாவுக்கு எல்லாம் செய்ய முடியும்னு எப்படி நினைக்கத்தோணுது?
ஒரு குழந்தை உண்டானதுமே உடலில் மாற்றங்கள். 2 அல்லது 3 குழந்தை பேறு, அதற்கப்புறம் குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன், இதைத் தவிர அவங்களுக்கு ஏதும் ஆப்பரேஷன்கள் ஆகியிருந்தா அது....  மெனோபாஸ் அவஸ்தைகள், தெரியாமலே இருந்த ஹார்மோன் பிரச்சனைகள், பெண்/மகன் திருமண வேலைகள், அவர்களின் பிள்ளை பேறுன்னு பெண்ணுக்கு எத்தனையோ உடல் அவஸ்தைகள் இருக்கும்போது உண்மையா பாக்க போனா வயசாகிடிச்சுன்னு அந்த அம்மாவைல்ல உட்கார வெச்சு அந்த  ஐயா பாத்துக்கணூம்???!!!!!

ஆனா தனக்கு வயசு கூட என்பதால  சலுகைகள் தனக்குத்தான் கிடைக்கணூம்னு நடந்துக்கறவங்களை பார்க்கும்போது ரொம்ப கோவம் வருது. எத்தனை வயசானாலும் பெண் தன்னை கவனிப்பதை விட்டு விட்டு கணவரை மட்டுமே கவனிக்கனும் என்பது எந்த விதத்தில் நியாயம். இதில் சில விதி விலக்குகளும் பார்த்திருக்கேன். முழங்கால் வலியால் அவதி படும் தன் மனைவியால் அதிக நேரம் நிற்க முடியாதுன்னு கேட்டரிங் சாப்பாட்டுக்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டு, தன்னால் முடிஞ்ச சில உதவிகளை, இரவு சாப்பாடு செஞ்சு கொடுப்பது கூட செய்யர சில நல்ல வயதான கணவன்கள் இருக்காங்க. ஆனா பெரும்பாலும் பாத்தா நான் முன்னே சொன்னது போல தான் ஆண்கள் நடந்துக்கறாங்க.

இதைப்பத்தி நாம பேசி ஏதும் செய்ய முடியாதுன்னு போயிட முடியாது? அவங்கங்க வீட்டு சூழலை பொறுத்ததுன்னாலும்,  ஏதாவது செஞ்சாத்தான் நல்லது. தன் உடம்பில் இருக்கும் உபாதைகளை எல்லாம் விட்டு விட்டு நேரத்துக்கு காபி/டீ, சாப்பாடு என மனைவி கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களை எப்படி மாற்றுவது. (இத்தனை வயசுக்கு மேல எப்படி மாத்த முடியும்னு தோணினாலும், அந்த அம்மாகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது)

 வயதான அந்த பெண்மணிகள் மணி ஆயிடுச்சு அவருக்கு ஹார்லிக்ஸ் கொடுக்கணூம்னு ஓடுவதை பார்க்க கஷ்டமா இருக்கு. என்ன செய்யலாம்? சொல்லுங்களேன்.

8 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அவர்களுக்கு சந்துள்ள உணவு கொடுத்து கவனிப்பது நன்று... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஹுஸைனம்மா said...

ம்ம்... எல்லா வீட்டிலயும் இதேதானா... :-))

அம்மாவுக்கு ஒரு இடம் போக முடியலைன்னு புலம்பல்... தங்கை தம்பி வீட்டுக்குப் போனால், போய்ச் சேர்ந்த நிமிஷத்திலிருந்து ஃபோன்... இன்னும் கிளம்பலியா கிளம்பலியான்னு :-)

அவங்க நம்ம வீட்டுக்கு வந்தாலும் அதே கதைதான். உக்காந்து பேச விடாம, தண்ணியத் தா, வெந்நியத் தான்னு....

ஃபோன் பண்ணா ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ணியே நேரம் போவுது.... சிரிப்புதான் வரும். இந்த வயசுல (இறைவன் ஆயுசைக் கொடுத்தா) நாம எப்படி இருப்போம்னு இப்பவே எங்களுக்குள்ள சண்டை.... :-)

ப.கந்தசாமி said...

ஆண்கள் மாறித்தான் ஆகணும். தங்கள் துணிகளைத் தாங்களே துவைக்கணும். தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைக்கணும். காலை டிபனைத் தயார் செய்யலாம். மதிய சாப்பாட்டையே இரவிற்கும் வைத்துக்கொள்ளலாம்.

இப்படிப் பல மாறுதல்களை அவர்கள் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். இல்லையென்றால் முதியோர் இல்லங்களில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் பொருளாதார வசதி வேண்டும். அது இல்லாதவர்கள் பாடுதான் மிகவும் கஷ்டம்.

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...! ஹிஹி...

pudugaithendral said...

வாங்க ரூபன்,

தனியா இருக்கும் பெரியவங்க என்ன சமைச்சுக்க முடியுமோ அதானே சாப்பிட முடியும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

எங்க அம்மம்மா இருந்த வரைக்கும் தாத்தாவை கூட்டிகிட்டு தான் எங்கயும் போவாக. இப்ப எங்க அம்மா. தனியா எங்கயும் விட்டது இல்லை.

இங்க வந்தாங்கன்னா கூட இத்தனை மணிக்கு காபி/சோறுன்னு பர பரன்னு ஓட வேண்டியதா இருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஐயா,

நீங்க சொன்னா மாதிரி கூட மாட ஒத்தாசையா இருந்தா நல்லது. பொருளாதாரத்தை விட தன் துணைக்கு உதவின்னு ரெண்டு பேரும் நினைக்கணும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

யார் கொடுத்து வைத்தது :)

வருகைக்கு மிக்க நன்றி