Tuesday, June 30, 2015

திரும்பவும் ஆரம்பிச்சிருக்கேன்!!!!!!!!!!!!!

வர வர பதிவுகள் போடுவதே ரொம்ப குறைவா போயிடிச்சு. மொபைலில் ஃபேஸ்புக் பாத்திடறதால அங்கயே நிறைய்ய சுத்தறமாதிரி தெரியுது. :)ஆனா உண்மையில் பதிவுகள் போட முடியாம போனதுக்கு காரணம் வலி. 6 வருஷமா அன்போட என் கூட இருக்கற கைவலி இப்ப துணைக்கு கால்வலியையும் சேத்து கூட்டி வந்திருக்கு. இதுவும் முன்ன இருந்தது. ஆனா ரொம்ப ஹாய் சொல்லாம அடக்கி வாசிக்கும். ஆனா இப்ப சமைக்கணும்னு நினைச்சாலும் அழுவாச்சியா வரும் சூழல்.

அரை மணி சமையற்கட்டில் நின்னா கால் வலி. அப்படியே கால் டைட்டாகி வலி ஜாஸ்தி. தோசை போடுறதே கஷ்டம்னா, இதுல காய் வெட்டி, சமையல் செஞ்சுன்னு மத்த வேலைகள் செய்ய செய்ய சதை முறுக்கிகிதா இல்லை நரம்பான்னு தெரியாம அவஸ்தை.

அடிக்கடி ஃபேஸ்புக் பக்கமே சுத்திகிட்டு இருக்கேன்னு சொன்னேன்ல. அதுவும் நல்லதா போச்சு. நம்ம  ஃப்ரெண்டு நுனிப்புல் பிளாக் உரிமையாளர்  உஷா ஃபேஸ்புக்ல தானும் கால் வலிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறதா சொல்லி பதிவு போட்டிருந்தாங்க. சென்னைக்கு வந்து கொஞ்ச நாளே ஆகியிருக்கு. இதுல எந்த டாக்டரை பார்க்கன்னு தெரியாம அவஸ்தையில் இருந்த நேரத்துல அவங்க பதிவு ஆபத்பாந்தவனா வந்திருக்கு.

அவங்க குறிப்பிட்ட அந்த மருத்துவரை போய் பார்த்தேன். கன்சல்டேஷன் ரூமுக்கு போனா பயங்கர அதிர்ச்சி. வழக்கமான டேபிள் சேரைக்காணோம்.
ரிவால்விங் சேரை பிடிச்சுகிட்டு ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தார். அவர் தான் டாக்டரான்னு டவுட் எனக்கு. பின்ன டாக்டருக்கான அடையாளமான வொயிட் கோட் கூட போடாம ஸ்போர்ட்ஸ்மென் மாதிரி ட்ரெஸ் செஞ்சுகிட்டு நின்னா!!
(ஹாஸ்பிட்டலில் வேலை பார்ப்பவங்களும் இந்த காஸ்ட்யூம் தான்) ரொம்ப நல்ல டாக்டர். அனுபவ சாலி.

உக்காருங்கன்னு சொன்னார். என்ன பிரச்சனைக்கு கேட்க என் வலி பிரதாபங்களை சொன்னேன். கூடவே வந்திருந்த தெரபிஸ்ட் இடம் இவங்களுக்கு விட்டமின் டி & ப்ளட் டெஸ்ட் மட்டும் எடுங்க. கண்ணுலயே அம்புட்டு ஸ்ட்ரெஸ் தெரியுது. வேற ஏதாவது டெஸ்ட் எடுத்தா மயக்கமாகிடுவாங்க போல இருக்காங்கன்னு சொல்லிட்டு, ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்கன்னு அட்வைஸ் செஞ்சார். ரத்தம் கம்மியா இருக்கும்னு பாத்த உடனேயே சொல்லிட்டாப்ல. REHAB னு ப்ரிஸ்க்ரைப் செஞ்சு எழுதி கொடுத்தாப்ல.

நான் போனது போயஸ் கார்டன் பிராஞ்சுக்கு. நமக்கு வேளச்சேரி பிராஞ்ச் தான் பக்கம்னு சொன்னதால என் பேப்பரை அங்கே அனுப்பி வெச்சாங்க.  மருந்து மாத்திரை ஏதுமில்லை. ஆனா அவங்க சொல்லிக்கொடுக்கிற எக்சஸை செய்யணும். அதுக்கு தெரபிஸ்ட்  இருக்காங்க. ஒரு 4 நாள் செஞ்சதுக்கு வலி ஜாஸ்தி ஆகிடிச்சு. இத்தனை நாள் இதெல்லாம் செஞ்சதில்லையே (இத்தனைக்கு 6 மாசம் முன்னாடி வரை யோகா செஞ்சுகிட்டு இருந்தேன். டெயில் வாக்கிங் விடாம போவேன்) அதுக்கு ஃபிசியோன்னு 3 நாள் கொடுத்தாங்க பாருங்க. அது கிட்டத்தட்ட சுளுக்கு எடுக்கற மாதிரி. வலிக்கும் மேல வலி அது. ஆனா தசைகள் இளகினது ஆச்சர்யம்.

இப்ப இது தொடருது. ரொம்ப வீட்டு வேலை செய்யாதீங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆனா பிள்ளைகளுக்கு ஸ்கூல் திறந்திட்ட நிலையில் கஷ்டம். மேனேஜிங். :) அந்த ட்ரீட்மெண்ட்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. வயசானவங்க, நடக்க முடியாதவங்க, முழங்கால் வலி இருக்கறவங்கன்னு நிறைய்ய பேரை அங்கே பாக்கறேன்.  மத்தவங்களுக்கு உதவியா இருக்கும்னு அந்த ஹாஸ்பிடல் டீடயில்ஸ் கீழே. முடிஞ்சப்ப வந்து ஹாய் சொல்வேன். மறந்திடாதீங்க. :)

sparrc Institute

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உடல்நலம் முக்கியம்.... மற்றவை எல்லாம் அப்புறம்...

”தளிர் சுரேஷ்” said...

உடல் நலமே முக்கியம்! பகிர்வுக்கு நன்றி!

இராய செல்லப்பா said...

கால்வலி, மூட்டுவலிக்கு - என்று நிறைய பேர் மருத்துவம் தருவதாகக் கிளம்பி இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே! எனக்குத் தெரிந்து சென்னையில் மியாட், அப்பல்லோ என்ற இரண்டு மருத்துவ மனைகளில்தான் நம்பகமான சிகிச்சை கிடைக்கிறது என்பேன். - இராய செல்லப்பா

pudugaithendral said...

வாங்க தனபாலன். இப்போதைக்கு அதுதான் முடிவு. வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி சுரேஷ்

pudugaithendral said...

வாங்க செல்லப்பா யஞ்யசாமி அவர்களே,

இந்த மருத்துவமும் வொர்க் அவுட் ஆகியிருக்கு பலருக்கு. இங்கே ஒன்லி உடற்பயிற்சி. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளவும். எனக்கும் அதே மூட்டுவலி + முழங்கால் வலி பிரச்சனைகள் உள்ளன. என்ன செய்வது என்றே புரியவில்லை. உடல் எடையும் கூடுதலாக உள்ளது. இனிமேல் தான் எடையைக்குறைத்து, மூட்டுவலிக்கு ஏதாவது செய்யணும்.

என்னுடைய இன்றைய (03.07.2015) பதிவினில் ‘நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும் என்ற தலைப்பினில் தங்களின் வலைத்தளம் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முடிந்தால் வந்து பாருங்கோ. இதோ இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html

இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் வை. கோபாலகிருஷ்ணன்

Anuprem said...

விரைவில நலம் பெறுவீர்கள் ........

'பரிவை' சே.குமார் said...

உடல் நலம் பாருங்கள் அம்மா...

pudugaithendral said...

அனைவருக்கும் நன்றி,

ஒரு மாத ட்ரையினிங்கிற்கு பிறகு இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் 3 மாதம் போகணும். ஆனால் இப்போது வலியில்லாமல் இருப்பதே சந்தோஷமா இருக்கு