Monday, November 30, 2015

மழைக்கால கொசுவத்தி

இந்த முறை மழை ரொம்ப அதிகமா பெய்ஞ்சு பாதிப்புகள் அதிகம். ஆனா ரொம்ப சந்தோஷ பட்ட வர்க்கம் மாணவர்கள் தான்.  வானிலை ஆய்வாளர் ரமணனை தெய்வமா கொண்டாடுறாப்ல பல மீம்கள் வந்திச்சு.  இப்ப திரு. ரமணன் அவர்கள் தான் ஹீரோ.

 நான் படிக்கும் காலத்திலயும் மழையால் ஸ்கூல் லீவு விட்டிருக்காங்க. 3 அல்லது 4 கிளாஸ் படிக்கும்போது செம மழை. நரிமேட்டுக்கிட்ட இருக்கற குளம், ஐயர் குளமெல்லாம் கரை உடைஞ்சு தண்ணி ரோட்ல. ஆனா எங்க ஊர்ல கால்வாய்லாம் உண்டு.  வீட்டுக்கும் ரோட்டுக்கும் நடுவுல அந்த கால்வாய் வெட்டி அழகா இருக்கும். சிலர் அதில் இருக்கும் மண் வீட்டு கழிவுநீர் குழாய்ல வந்திடும்னு சிமிண்டெல்லாம் போட்டு வெச்சிருப்பாங்க. அதனால தண்ணி திபு திபுன்னு போறதை பாக்கலாம்.

  அப்ப நாங்க இருந்தது கீழ3ல செட்டியார் கடைக்கு எதிர் வீடுல. படிச்சது சுப்பராமய்யர் ஸ்கூல் (அம்மாவோட தாத்தா ஆர்ம்பிச்ச ஸ்கூல்) சுப்பராமய்யர் ஸ்கூல்க்கு ரெண்டு ப்ரான்ச். சின்ன ஸ்கூல் 5 கிளாஸ் வரைக்கும். எதிர்ல இருக்கற பெரிய ஸ்கூல் 8 கிளாஸ் வரைக்கும் அப்ப. இப்ப 10 வந்திருச்சுன்னு கேள்வி பட்டேன். நான் 5 ஆம் வகுப்பு வரைக்கும் சுப்பராமய்யர் ஸ்கூல். அப்புறம் ராணி ஸ்கூல். சரி மேட்டருக்கு வருவோம்.

இப்பல்லாம் ஸ்கூல் லீவுன்னா டீவில உடனுக்குடன் நியூஸ் வந்திருது. இல்லாட்டி ஸ்கூல்லயே எஸ் எம் எஸ் அனுப்பிடறாங்க. ஆனா அப்பல்லாம் அந்த மாதிரி அறிவிப்புக்கள் கிடையாதே! ஸ்கூல் வாசல்ல போர்ட்ல எழுதி போட்டிருப்பாங்க. அதை போய் பாத்துட்டு திரும்பி வர்ற பசங்க மூலமா தெரிஞ்சிக்கலாம். போர்டுல எழுதி போட்டிருந்தாலும் எங்கள் அன்பான லீவு சார் வாசல்லயே நின்னு வர்ற பசங்களை எல்லாம் திருப்பி அனுப்புவார். அவர்தான் எங்களுக்கு ரமணன் மாதிரி.

 ஸ்கூல் லீவுன்னு சர்க்குலர்லாம் அனுப்ப மாட்டாங்க. பெரிய ஸ்கூல்லில் வேலை பார்த்த. திரு ராமச்சந்திரன் சார் தான் வந்து லீவ் சொல்வார். காப்பரிட்சை, அரைப்பரிட்சை, வரலட்சுமி விரதம் இப்படி எதுக்கு லீவுன்னாலும் சார்தான் வந்து சொல்வார். ஒவ்வொரு கிளாஸா போய் ஸ்கூல் லீவுன்னு சார் சொல்வார். அவர் ஒவ்வொர் கிளாசுக்கா போகும்போது பசங்க கோரஸா கத்தி வரவேற்பு கொடுப்பாங்க. (இப்ப ரமணனை டீவில பாக்கும்போது எம்புட்டு குஷியாவுராங்க பசங்க அந்த மாதிரி ) ஹீரோ வொர்ஷிப் நடக்கும் அவருக்கு.   ஏதாவது நாள்கிழமைன்னா லீவான்னா நாங்க எங்க கிளாஸ் டீச்சர்களை கேட்டா லீவு சார் வரலைல்லா, வந்தாதான் லீவுன்னு சொல்ற அளவுக்கு.  சில குறும்புக்கார பசங்க சாதாரண நாள்ல கூட சாரைப்பாத்தா “ இன்னைக்கு லீவா சார்னு” கேட்பாங்க. :)

அம்மாவோட தாத்தா குட்டிசார் ( குட்டையா இருப்பார் அதனால வந்த பெயர்) ஸ்கூலுக்கு ஒட்டின வீட்டுலதான் இருப்பார். அதனால அவரும் வர்ற பசங்களை திருப்பி அனுப்பிட்டு யாராவது பசங்க கிட்ட ,” போறப்ப ரத்னா டீச்சர் வீட்டுல ஸ்கூல் லீவுன்னு சொல்லிட்டு போங்கன்னு ”மெசஜ் சொல்லி அனுப்பிடுவார். அம்மா அந்த ஸ்கூல்ல அரிச்சுவடி (அந்த கால எல்கேஜி) டீச்சரா இருந்தாங்க. அப்புறம் பெரிய ஸ்கூல்ல கிளார்க்கா வேலைக்கு சேர்ந்தாங்க. ஆனா அம்மாவுக்கு ரத்னா டீச்சர்னுதான் பேர்.  கீழ 3லதான் ஸ்கூலும் இருந்தது.

மழை பேஞ்சதுக்கு மறுநாள்  ஸ்கூல் இயங்க ஆரம்பிச்சாலும்  அட்டண்டென்ஸ் கம்மியாத்தான் இருக்கும். அக்க பக்க கிராமங்களில் நல்ல மழை பெஞ்சிருக்கும். பஸ்ல வர முடியாம இருக்கும். தவிர பெரிய ஸ்கூல்ல தான் பெஞ்செல்லாம். சின்ன ஸ்கூல்ல தரையில உக்காந்துதான் பாடம். மழை அதிக்மா இருந்ததால தரையில் எல்லாம் நீர் வந்திருக்கும். சிமிண்ட் தரைதான். தண்ணி  உப்பரிச்சுக்கும். வெயில் அடிச்சாதான் அது அடங்கும். அதுவரைக்கும் ஸ்கூலுக்கு லீவு விட முடியாதே. வீட்டுலேர்ந்து கித்தான் சாக்குன்னு சொல்ற உர சாக்குகள் கொண்டு போய் போட்டு உக்காந்து படிச்சதெல்லாம் ஒரு அனுபவம். ஒரு சில கிளாஸ்ல ஒழுகும். அதனால ரெண்டு அல்லது 3 கிளாஸ் சேர்ந்து உக்காந்து படிக்க வேண்டிய கட்டாயம். பாடம் நடத்தமாட்டாங்க. டிக்டேஷன், வாய்ப்பாடு ஒப்பிக்கறது, கதை சொல்றதுன்னு செம எண்டர்டெயின்மெண்டா இருக்கும். இதுக்காகவே மழை வறாதான்னு ஏக்கமா இருக்கும்.

மழை, வெள்ளத்தால தொத்து நோய் பாதிப்பு வந்திடக்கூடாதுன்னு கார்ப்பரேஷன்லேர்ந்து வந்து தடுப்பூசி போடுவாங்க. கண்டிப்பா ஜுரம் வரும். அதுக்காக லீவுன்னு . மழை எப்பவுமே பசங்களுக்கு கொண்டாட்டம் தான். காலங்கள் மாறினாலும் மாறாத விஷயமா  இப்பவும் வானிலை ஆய்வாளர் ரமணனை கொண்டாடுறதை பார்க்கும் போது எங்க லீவு சார்தான் நினைவுக்கு வர்றாரு.




7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்...

Vaishnavi said...

Welcome Madam,
Unga postai padikumplothellam yenaku old memories varudhu.Kosuvathi unga postla 1 label than,ana yenakku unga yella postume kosuvathithan.nan 1.1.2014 irundhu unga blogs padikiren.after read that so many changes in my life.adha unga kooda share pannikanumnu ninaikiren.ippavum 3 pakkathuku yeluthi vachuruken.comment box poda mudiyatha alavuku iruku.so unga e mail id yenaku sonna adha ungaluku scan panni anupuven.valakkamana 1 kelvi,seethakku yeppa kalyanam?yenna nan first padichadu seetha kalyanaa post adhan.

Nagendra Bharathi said...

அருமை

Unknown said...

pudugai akka, hope things must be getting settled for you at chennai after the massive rains. Please update your well being in the blog when you get time.

Uma
California

pudugaithendral said...

நட்புக்கள் அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள். மழைக்கு பின் இணையம் சரியா வேலை செய்யலை டூர் போனதுன்னு இந்த பக்கமே வர முடியலை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வைஷ்ணவி,

உங்க பின்னூட்டம் எழுதாம இருக்கும் என்னை எழுத தூண்டுது. கண்டிப்பா எழுதணுங்கற வைராக்கியம் வெச்சு எழுத ஆரம்பிக்கணும். அப்ப கண்டிப்பா சீதாவுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிடுவோம். :)) நிறைய்ய வேலைப்பளு என் உடம்ப்பை விட மனதை ரொம்ப பாதிச்சிருச்சு. அதனால தான் விலகி இருந்தேன். என்னை மீட்டு கட்ட ஆரம்பிச்சிட்டேன். சீக்கிரமே வருவேன். அன்புக்கு நன்றி. pdkt2007@gmail.com இதான் மெயில் ஐடி.

pudugaithendral said...

ஹாய் உமா,

நலமோ நலம். சென்னை வெள்ளம் எங்களுக்கு பாதிப்பு அவ்வளவா இல்லை. 4 நாள் கரண்ட் இல்லை அப்படிங்கறதை விட வேறு பாதிப்பு ஏதுமில்லை. அன்புக்கு மிக மிக நன்றி