Tuesday, January 19, 2016

ஹைதை ஆவக்காய பிரியாணி - 2016

வலையுலக நட்புக்களுக்கு அன்பார்ந்த வணக்கம். ஹாப்பி நீயூ இயர், ஹேப்பி பொங்கல் எல்லாம் முடிஞ்சதா? என்னுடைய தாமதமான வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு சபதமாக வலைப்பதிவை தொடரணும்னு திட்டம் போட்டு ஆரம்பிச்சிருக்கேன். இருக்கற ஊர் மாறினா என்ன?!!! நாம எங்க இருந்தாலும் ஹைதை ஆவக்காய பிரியாணி தான் போடுவோம். அதான் ருசி. இனி என்னை கண்டிப்பாக தொடர்ந்து இங்கே பார்க்கலாம் அத்துடன் இந்த வருடம் சீதா கல்யாணத்தை சிறப்பா முடிச்சிடலாம் எனும் நல்ல செய்தியோடு ஆரம்பிக்கிறேன்.
**********************************************************************************
சமீபத்தில் கேரளா ட்ரிப் போயிருந்தோம். நம்ம ஊர்ல இருக்கற மாதிரி ஹைவே அகலமா இல்லைன்னாலும் ரோட் குண்டு குழியுமில்லாம நேர்த்தியா இருக்கு. (80 கிமீ தூரத்தை கடக்க 2 மணிநேரத்துக்குமேல ஆவுது. அந்த மாதிரி கொஞ்சம் குறுகிய சிங்கிள் ரோடுதான்.) ஆனா அதுக்கும் சில இடங்களில் டோல் கட்டணம் உண்டு.  போக 5 ரூவா போக வர 7.50 பைசா.  அதுலயும் அந்த மீதி 2.50 ரூவாவையும் டோக்கன்லயே சுத்தி கொடுக்கும் அழகே அழகு. நம்ம ஊர்ல டோல் கட்டணமே ஜாஸ்தி இதுல 5 ரூவாவைக்கூட திருப்பி கொடுக்க மாட்டாங்க. இவங்களுக்கு மட்டும்தான் சில்லறை தட்டுப்பாடெல்லாம்.
********************************************************************************
ட்ரெஸ் பத்தி  எப்பவும் ஏதாவது டாபிக் ஓடுவதெல்லாம் இப்ப சகஜமாகிடிச்சு. கோவில்களுக்கு லெகின்ஸ், பேண்ட் போடக்கூடாதுன்னு கோர்ட் உத்தரவு, அதற்கான தடை உத்தரவுன்னு..... அல்லோகலம்தான். நம்ம உடை நம்ம உரிமைன்னாலும் எந்த இடத்துக்கு போறோமோ அதற்கு ஏற்ற உடை அணிவதுல என்ன தப்பு? அதை மத்தவங்க சொல்றாப்ல ஏன் வெச்சுக்கணும்?  ஸ்விம்மிங் பூல் போகணும்னா அதற்கான ப்ரத்யேக உடைல போனாதான் பூல்ல இறங்க விடுவாங்க. கல்யாணத்துக்கு போகும்போது வீட்டுல கட்டுற சாதராண புடவையோடவா போறோம். அதே மாதிரி கோவிலுக்கு போகும்போது சுடிதார் போடக்கூடாதுன்னு சொல்லலியே. லெகின்ஸ் பேண்ட் தானே வேணாம்னு சொல்றாங்க. என்னவோ போங்க அண்டை மாநிலத்துல  பாராம்பரிய உடையோடத்தான் கோவிலுக்கு போறாங்க. சுடிதார் போட்டவங்களை பாத்தேன். குருவாயூர்ல பேண்ட் போட்டிருந்த ஆண்களை வேஷ்டி கட்டினாத்தான் உள்ள விடுவோம்னு சொன்னதை பாத்தேன். நம்ம ஊர்லதான் இதெல்லாம் தப்புன்னு சொல்றாங்களோன்னு தோணுது... என்னவோ போடா மாதவா..... கதைதான்.
*********************************************************************************
ஒவ்வொரு வருட பிறப்புக்கு முன்னாடி பிறக்க இருக்கும் வருடத்தின் நிறத்தை பத்தி பதிவு வரும். ஆனா இந்த வாட்டி போடலை. லேட்டானா என்ன? லேட்டஸ்ட் பதிவுல போட்டுவோம்னு வாங்க அதைப்பத்தி பாப்போம்.
ஆஹா என்ன அழகான கலர். பார்க்கவே இதமா இருக்குல்ல!!!  Rose quartz & serenity.  ரோஸ் குவார்ட்ஸ் ரொம்ப இதமான கலர்.  ரோஸ் குவார்ட்ஸ் கலர் இதயத்தை இளக வைக்கும், அன்பை பெருக்கும் ஒரு அற்புதமான நிறம். இந்த விஞ்ஞான உலகத்துல இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க இந்த கலர்கள் உதவும்னு  பெண்டோன் நிறுவனம் சொல்லுது. இது உண்மைதான். செரினிட்டி நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் அதோடு சேர்ந்த ரோஸ்குவார்ட்ஸ் மன அமைதியை கொடுக்கும். அப்புறமென்ன இந்த வருடம் இந்த கலர் காம்பினேஷன்ல ட்ரெஸ்ஸோ, இல்ல வீட்டில் அதிகமாக கண்ணில் படுற இடத்துல ஒரு பொருளோ, திரைச்சீலயோ இந்த நிறத்தில வாங்கி வைங்க. ஆனந்தம் பொங்கும் வீட்டில் ஆரோக்கியத்துடன் கூடிய மன அமைதி உங்களுக்கு கிடைக்கட்டும்.
***********************************************************************************
ஆமா எனக்கு இந்த ஜல்லிக்கட்டு மேட்டர் பத்தி ஒரு டவுட். ஒவ்வொரு வருஷமும் ஏன் அதுக்கு தடா.... நடக்குமா நடக்காதான்னு ஒர் டென்ஷன்??? நம்ம பாராம்பரியத்தை விட்டு கொடுக்கறது எப்படி?ஜல்லிக்கட்டு காளையை அடக்கினாத்தான் கல்யாணம்னு சில இடங்களில் உண்டே!! பாவம் அந்த மாப்பிள்ளைகள். சரி டவுட்டுக்கு வருவோம்.  ஜல்லிக்கட்டு நடத்தினால் வாயில்லா பிராணியை இம்சை செய்வதா சொல்றாங்க. அப்ப மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சில்லாம் சாப்பிடறாங்களே அதெல்லாம் இந்த லிஸ்ட்டுல வராதா??? அப்ப அந்த வாயில்லா ஜீவனை இம்சிப்பது இல்லையா? பட்டுபூச்சியை அதுக்குன்னே வளர்த்து அதை வெந்நீர்ல போட்டு எடுத்து பட்டுபுடவை நெஞ்சு கட்டிப்பது அழகு. அது மாதிரி கொன்னா பாவம், தின்னா போச்சு. ஆனா காளையை அடக்குவது தப்பு!!!! நல்லாயிருக்கே நியாயம்.
*******************************************************************************
நாளைக்கு எங்க குடும்ப நண்பர் வீட்டுல கல்யாணம். பத்திரிகை அனுப்பிருந்தாங்க. அதுல ரொம்ப பிடிச்சிருந்த விஷயம். பரிசுகள், பூங்கொத்துகள் இதெல்லாம் தவிர்த்து விரும்பினா அந்த தொகையை ஒரு சேரிட்டிக்கு கொடுக்க சொல்லி அதற்கான லிங்குகள் டீடெயில்கள் கொடுத்திருக்கறதோட கல்யாண மண்டபத்துலயும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கொடுக்க வசதி செய்யப்பட்டிருப்பதா சொல்லியிருக்காங்க. என்ன ஒரு நல்ல எண்ணம்!!!! மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 இந்த மொய் விவகாரம் இருக்கே ரொம்ப கஷ்டம். நான் அவ்வளவு கொடுத்தேன். அவங்க இவ்வளவு தான் கொடுத்தாங்க அப்படின்னு  ஒரே கலாட்டா மேட்டர். பரிசு அன்போட கொடுப்பது. அதை இப்படி பண்டமாற்று மாதிரி ஆக்கிட்டாங்களேன்னு வருத்தம். சிலர் பர்த்டேவுக்கு கிஃப்ட் கொடுத்தா கூட அதே அமொவுண்ட்டுக்கு திரும்ப செஞ்சிடணும்னு நினைப்பாங்க. அப்புறம் அதுக்கு பேரு பரிசளிப்பா????  இதெல்லாம் பார்க்கும் போது இந்த புதுமணத்தம்பதிகள் எடுத்திருக்கும் முடிவு தான் ரொம்ப சரி.
***********************************************************************************
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்



9 comments:

Nagendra Bharathi said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

ஹைதை ஆவக்காய் பிரியாணி - வழக்கம் போல் கலக்கல்.

கல்யாணம் பற்றிய பகிர்வு சிறப்பு. அனைவரும் இதைத் தொடர்ந்தால் நல்லது.

pudugaithendral said...

வாங்க நாகேந்திர பாரதி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,
//வழக்கம் போல் கலக்கல்.// நன்றீஸ் :)

இனி தொடர்ந்து வாங்க

Jayakumar Chandrasekaran said...

ஆவக்காய் பிரியாணி எப்படிங்க செய்வது?

--
Jayakumar

pudugaithendral said...

வாங்க ஜெயக்குமார்,

முதல் வருகைக்கு நன்றி. ஆவக்காய் வெச்சு பிரியாணி செய்ய முடியாது. ஹைதை பிரியாணி ரொம்ப காரமில்லாம ஒரு அழகான சுவையில் இருக்கும். அத்தோடு ஆவக்காய் ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவது போல இருக்கும் என்னுடைய டிட்பிட்ஸ் பதிவுகளுக்காக நான் அந்த பெயரை வெச்சிருக்கேன். அவ்வளவுதான். :)

வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

/வலைப்பதிவை தொடரணும்னு திட்டம் போட்டு //

நானும்.. நானும்.. :-)

இந்த வருட கலர்னு ரெண்டு கலர் இருக்கு?? ரெண்டோட காம்பினேஷம் எடுத்துக்கணுமா?

கல்யாணத்துக்கு, கிரகப்பிரவேசம், குழந்தை பிறப்பு, மற்ற விசேஷங்களுக்கு மொய் எழுதுறதுங்கிறது - ஊர்ல மாசம்தோறும் ஒரு தொகையே ஒதுக்க வேண்டியிருக்கு!! பெருங்கொடுமை!! கொடுக்கலைன்னா அவங்க ஏளனமாப் பாப்பாங்களோ இல்லியோ, நம்ம வீட்டுக்காரங்களே ‘நம்ம கௌரவம் என்னாகும்?”னு நினைக்கிறாங்க!!

அதோட, சிலர் மத்தவங்க வீட்டு விசேஷங்களுக்கு புது ட்ரஸ் வேற எடுக்கிறாங்க!! எப்படித்தான் கட்டுப்படியாகுதோ!!

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நாம் எப்பவும் சேம் ப்ளட்டுதானே :)

ஆமாம். அதுவும் வெளிநாட்டுல இருந்தாலோ இருந்திட்டு வந்தாலோ தொகை பெருசா இருக்கணும்னு நினக்கறாங்க. ஆமாம்பா, நானும் பாத்திருக்கேன். ரிப்பிட்டேஷன் மாதிரி தெரியாம இருக்கறதை வெச்சுத்தான் நானும் ஓட்டுவேன்.

இந்த வருட கலர் ரெண்டு காம்பினேஷனும் நல்லாத்தான் இருக்கும். ரெண்டு கலரும் கண்ணுல படுறாப்ல ஏதாவது ப்ளான் செய்யலாம்

வருகைக்கு மிக்க நன்றி

Unknown said...

Talk about the dress code. The bouncers wont let you in to most pubs without shoes. You need to wear formals for graduations and conferences. But people will only make fuss over dresscode for temples. Need to punch on those idiots face.

You have forgotten to include PETA Angels in your post. Trisha & Alia eat nonveg- but they are PETA India Ambassadors. Worst part is they wear genuine leather shoes. Look at this.

https://www.instagram.com/p/BC13kkEBVgu/

There are quite a few pictures of Alia.

https://www.instagram.com/p/BC-oqgYyL-j/

The Website: https://www.instagram.com/vaphshoes/
They claim they use genuine leather. I tried to get PETA India to notice it. It did not work. If only any freelancers could do something about it. Stand up against these madness of PETA India.