Wednesday, January 20, 2016

கேரள நந்நாட்டிலே....................................

சுமார் 17 வருஷம் முன்ன கேரளா போனது. அதுக்கப்புறம் அந்த பக்கம் போக சான்ச் வரலை.  ஹைதையில இருந்தப்ப ஒரு வாட்டி ப்ளான் செஞ்சோம். செட் ஆகலை.  இந்த வாட்டி எப்படியாவது போய் வரணும்னு ப்ளான் 2 மாசம் முன்னாடியே செஞ்சோம். ட்ரையின்ல டிக்கட் கிடைக்கலை!!!! ஆக விமானத்துல போகலாம்னு புக் செஞ்சாச்சு.  ஹோட்டல் புக்கிங் எல்லாம் செஞ்சு ரெடியா இருந்தோம். அம்ருதம்மாவுக்கு இது முதல் கேரள தேச பயணம். ஆஷிஷ் அண்ணாவுக்கு விவரம் தெரிஞ்சு இப்பதான் பரசுராம சேட்சத்திர பயணம். ஆகக்கூடி எல்லாம் ஒரு எக்ஸைட்மெண்ட்டோட இருந்தோம்.

பொங்கல் லீவுல தான் பயணம். போகி அன்னிக்கு காலையில ஏர்போர்ட்டுக்கு கிளம்ப கீழ இறங்கினா ஒரே பனிமூட்டம். அது பனிமூட்டமா இல்ல போகி  புகையான்னு புரியாம இருந்துச்சு. 100மீட்டர் தூரத்துல இருக்கறது கூட தெரியலை. ரோடும் காலியா இருக்க 20 நிமிஷத்துல ஏர்போர்ட் சேர்ந்தாச்சு. ஏர்போர்ட் செம பிசி. லீவு நாட்களில் ஏர்போர்ட் ரயில்வே ஷ்டேஷன், சுற்றுலா தலங்கள் பக்கம் போக கூட்டமா இருக்குன்னாலும் எனக்கு இன்னொரு விஷயம் ரொம்ப பிடிச்சது. அது லீவு என்பதால குடும்பமா வெளியூர் போவாங்க. அதனால ஸ்கூல் போகும் அந்த குட்டி தேவதைகள் வெளியில வருவாங்க. முன்ன கல்யாண வீட்டுல கூட குழந்தைகள் அங்க இங்கயும் ஓடிக்கிட்டு இருப்பாங்க. அதுதான் அழகு. ஆனா இப்பல்லாம் லீவு எடுக்க முடியாத பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் படிப்பு படிக்கறதால கல்யாண வீட்டுக்கு அவங்க வர முடியாம ஆகிடுது. ஸோ சேட்.

செக்கின் , செக்யூரிட்டி எல்லாம் முடிச்சு லவுன்ச்ல போய் ஃப்ரெக்ஃபாஸ்ட்டுக்கு போனோம். இந்த லவுன்ச் பத்தி தெரியாதவங்களுக்காக கொஞ்சம். நாம பொதுவா ஏர்போர்ட்ல தண்ணி பாட்டில் வாங்கினாலே ரேட் ஜாஸ்தியா இருக்கும். அங்க கிடைக்கற சாப்பாட்டோட விலையை கேட்கவே வேணாம். இந்த லவுன்ச்கள் எல்லா ஏர்போர்ட்லயும் இருக்கும். எனக்கு தெரிஞ்சு உள்ளே உழைய ப்ரியார்ட்டி பாஸ் கார்ட் போன்றவை இருக்கணும். ஒரு கார்ட்ல ஒருத்தர் தான் அனுமதிப்பாங்க. மிஞ்சி போன இன்னொருத்தர் சேத்துப்பாங்க. குடும்பத்தோட போகணும்னா பில் பழுத்திடும். ஐசிஐசியை போன்ற பேங்குகளில் ஏடிஎம் கார்ட் கொடுப்பது வருடாந்திர கட்டணம் 250 ரூவா. ஆனா அதுவே 500 ரூவாக்கு ஒரு கார்ட் இருக்கு. அதுல சில சலுகைகள் கிடைக்கும். அதுல முக்கியமான சலுகை ஏர்போர்ட் லவுன்ச்களில் அனுமதி. 2 ரூவாதான் சார்ஜ் செய்வாங்க. அது இல்லாட்டி ஒருத்தருக்கு 600 லேர்ந்து 1000 வரைக்கும் சார்ஜ் ஆகும்.  இந்த மாதிரி கார்ட் இருந்தா நாம உள்ள போய் ப்ரெக்பாஸ்டோ, லஞ்சோ, டிபனோ, டின்னரோ நேரத்துக்கு தக்க சாப்பிடலாம்.

நாங்க போனது ப்ரெக்பாஸ்ட் சமயம். காண்டினெட்டல் ப்ரெக்பாஸ்ட். புஃபே டைப் தான்.  அன் லிமிட்டட். மினரல் வாட்டர், டீ, காபி, ஜூஸ் எல்லாம் எடுத்துக்கலாம். அந்த 2 ரூவாவைத்தவிர வேறு எதுவும் சார்ஜ் செய்ய மாட்டாங்க. பட்ஜட் ஏர்வேஸ்ல போனோம்னா தண்ணி பாட்டில் கூட காசு கொடுத்து வாங்கணும். லவுன்ஞ்லேர்ந்து நாம தண்ணி பாட்டில் எடுத்துக்கிட்டு போகலாம். தோது பட்டவங்க இந்த மாதிரி ப்ரியாரிட்டி பாஸோ, எக்ஸ்ட்ரா ப்ரீமியம் டெபிட் கார்டோ வாங்கி வெச்சுகிட்டா உள்நாடு/வெளிநாடு லவுன்ச்களில் உதவும். ஃபிளைட் போர்டிங் அறிவிப்பு வரும் வரை சொகுசா டீவி பாத்துக்கிட்டு, வைஃபை வேணும்னா அதையும் யூஸ் செஞ்சுகிட்டு ஆனந்தமா உக்காந்திருக்கலாம். மிட் நைட் ஃப்ளைட்ல வந்து கனெக்டிங் ஃப்ளைட் ஏறும் வரை குட்டி தூக்கம் போடறவங்களும் இருப்பாங்க.

நாங்க ஃப்ரெக்பாஸ்ட் முடிச்சு கீழ வந்தோம். 8.55க்கு எங்க ஃப்ளைட்.  8.30 ஆகியும் ஒரு அறிவிப்பும் இல்லை. ஸ்பைஸ் ஜெட் ஃப்ளைட் ஒண்ணு 10 மணிக்கு கிளம்ப வேண்டியது சென்னையில் இருக்கும் மோசமான காலநிலையால 12 மணிக்கு கிளம்புதுன்னு அறிவிப்பு செஞ்சாங்க. சரிதான்னு நினைச்சுகிட்டோம். மும்பையிலிருந்து வர வேண்டிய எங்க விமானம் தாமதமாகி 9.15க்கு தான் வந்தது. அதற்கான வருத்தமோ எதுவும் இல்லாம் போர்டிங் அறிவிச்சது நம்ம நேஷனர் கேரியர்.

சின்மயி அன்னைக்கு எங்க கூடத்தான் பயணம் செஞ்சாங்க. யாரும் அவங்களை டிஸ்டர்ப் செய்யலை. பிசினஸ் கிளாஸ் இல்லாம எகானமில அவங்க பயணம் செஞ்சது எனக்கு ஒரு ஆச்சரியம் தான். அடுத்த ஆச்சரியமா அதே எகானமில இருமுடி ஏந்திக்கிட்டு நம்ம தனியொருவன் புகழ் ரவி (அதாங்க ஜெயம் ரவி) வந்தாப்ல. அவங்க அப்பாவும் வேற 4 பேரும் மலைக்கு போறதுக்காங்க அதே கொச்சி ஃப்ளைட்ல தான் வந்தாங்க. அப்படி இப்படின்னு 10.15க்கு டேக் ஆஃப் ஆனிச்சு. 11.30க்கு அங்க போய் சேர்ந்தோம். நெடும்பசேரில இருக்கு கொச்சி விமான நிலையம். ரொம்ப பெருசா இல்லை. நம்ம மதுரை ஏர்போர்ட் சைஸ்னு நினைக்கிறேன்.  சாமான்களை எடுத்துகிட்டு வெளிய வந்தோம். பிக் அப் பாயிண்ட் கொஞ்சம் அன்ப்ளாண்டா இருக்கு. அதனால டிராபிக் ஜாமாகி கடையில நிக்கும் வண்டி கடைசில மட்டுமே வரும் நிலமை. பார்க்கி சார்ஜ் 65 ரூவாதான்.

நம்ம வாகனஓட்டி வந்தார்.( அதுக்கு கொஞ்சம் முன்ன தான் ஜெயம் ரவி மற்றும் அவங்க கூட வந்தவங்க கார்ல ஏறி போனாங்க. வெறும் காலோடதான் ஜெயம் ரவி வந்திருந்தார். ) நாங்களும் புறப்பட்டோம்......

தொடரும்

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையாக மட்டுமல்ல! தகவல்களும் விரவிக்கிடக்கிறது பயணத்தொடரில்! பயணிக்கிறேன்! நன்றி!

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

பயணத்தில் இணைந்து கொண்டதற்கு நன்றி. :)

Unknown said...

If they are paying from their pocket, they fly in economy :)