கேரளாவில் போட் ஹவுஸில் தங்கணும்னு ரொம்ப நாளா ஆசை. போட்ல என்ன செய்யப்போறோம் வேற ஏதாவது இடமாயிருந்தா நல்லா இருக்குமேன்னு ஒரு யோசனை.அப்படி யோசிச்ச போது கிளிக் ஆன இடம் தான் இது. vivanta by taj - kumaakom. ரெண்டு மாதம் முன்னாடியே ஆன்லைன்ல பாத்து புக் செஞ்சோம். Early bird price அப்படின்னு சொல்லி ரூமுக்கு மட்டும் தான் சார்ஜ். சாப்பாட்டுக்கு கிடையாது. 4 பேர் என்பதால ரெண்டு ரூம் புக் செஞ்சிருந்தோம்.
ஹோட்டலில் நுழையும்போதே மதியம் ரெண்டு. செக்கின் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சு தென்னங்குருத்து மாலை போட்டு வெல்கம் ட்ரிங்கா கூல் கூல் இளநீர் கொடுத்தாங்க. சாப்பாட்டு கடையை மூடறதுக்குள்ள சாப்பிட போகலாம்னு போனோம்.
மெனுகார்ட் பார்த்து நமக்கு எது வேணுமோ அதை ஆர்டர் செஞ்சுக்கலாம். Beverages எது ஆர்டர் செஞ்சாலும் எக்ஸ்ட்ரா. சூப் ரொம்ப டேஸ்ட்டியா இருந்தது. நான், சப்ஜிக்களும் டேஸ்ட் சூப்பர். சாப்டு முடிச்சு ரூமுக்கு போனோம். ஸ்விம்மிங் பூலுக்கு எதிரில் ஒரு ரூம். அதுக்கு பக்கத்தில் ஒரு ரூம் கொடுத்தாங்க. இங்க லிஃப்ட் வசதி எல்லாம் கிடையாது. ஒவ்வொண்ணும் தனி வீடு மாதிரி. வில்லா டைப் ரூம்களுக்கு தனி ஸ்விம்மிங் பூல், ஜாக்குஸி எல்லாம் இருக்கும். ரேட் 60,000. நாம போனது சுப்ரீம் ரூம்ஸ் தான்.
இது வில்லா டைப்.
ரூம் செக்கின் செய்யும் போது அங்கே என்னென்ன ஆக்டிவிட்டிஸ் இருக்குன்னு ஒரு பேப்பர் கொடுத்திடறாங்க. அது படி 5.30 மணிக்கு ஜெட்டில சன் செட் வ்யூவோட சாயாக்கடைன்னு போட்டிருந்தாங்க. ரூம்லயே கெட்டில் காபி பவுடர்லாம் இருக்கு ஆனாலும் இங்கயும் போய்க்கலாம்.
கெஸ்ட்களுக்கு சைக்கிள் வேணும்னா அங்கயே இருக்கு எடுத்தக்கலாம். சாப்பிடற இடத்துலேர்ந்து லேக்கை சுத்தி நடந்து வந்தாலே தின்னது செமிச்சிடும். :) பிள்ளைகள் சைக்கிளை எடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தாங்க. வெயில் குறைவா இருந்தது. நான் அந்த அமைதியான இடத்தில் தொட்டில் கட்டி போட்டிருந்தாங்க அதுல சாஞ்சுகிட்டு பாட்டு கேட்டுகிட்டு இருந்தேன்.
சாயந்திரம் விளக்கு வைக்கற நிகழ்ச்சின்னு போட்டிருந்தாங்க. அது வேற ஒண்ணுமில்லை நாம கார்த்திகை, தீபாவளிக்கு வைக்கறமாதிரி லேக்கை சுத்தி அழகா அகல் விளக்கு ஏத்தி வெச்சிருந்தாங்க. பாக்க அவ்வளவு அழகா இருந்தது.
ரிலாக்ஸ்டா எஞ்சாய் செஞ்சோம். சன் செட் வ்யூ செம அழகு. காலையில சீக்கிரமே எழுந்திரிச்சாச்சு. அதை தவிர ஃப்ளைட் லேட். செம டயர்டா இருந்தது சீக்கிரம் சாப்டு தூங்க போகலாம்னு சாப்பிட போனோம்.
இந்த ஓடு வேஞ்ச இடத்துல தான் டின்னர். அது பக்கத்துல அந்த சிமிண்ட் தரை போட்டிருக்கே அங்க புல்லாங்குழல் கச்சேரி நடந்துகிட்டு இருந்தது. ரொம்ப அர்பணிப்போட வாசிச்சுகிட்டு இருந்தார். அன்னைக்கு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சின்னு போட்டிருந்தாங்க. ஆனா ட்ரடிஷனல் புடவை கட்டிய பெண்கள் வந்து நடனம் ஆடினாங்க. அதாவது திருவாதிரை நடனமாம். பரதநாட்டியம் கேன்சல் ஆகிடிச்சு போல. அவங்க ஆடி முடிஞ்சதும் புல்லாங்குழல் கச்சேரி தொடர்ந்தது. சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம் பாட்டு சூப்பரா இருக்கும். அதை வாசிச்சார். (மலையாளத்துல சபரிமலையில் தங்க சூர்யோதயம்)
அருமையான சாப்பாடு. ஆனந்தமான இசை. விளக்கொளியில் ஹோட்டல். மனதுக்கு ரம்யமா இருந்தது. சாப்டு முடிச்சு எந்திருக்கும்போது ஹரிவராசனம் வாசிச்சார். இருந்து கேட்டுட்டு ரூமுக்கு போனோம்.
தொடரும்...
(படங்கள் உதவி : கூகுளாண்டவர்)

7 comments:
மிகச் சிறப்பானதோர் அனுபவம் கிடைத்திருப்பது புரிகிறது......
நாங்களும் பயணத்தில் உடன் வருகிறோம்....
வணக்கம்
அறியாத இடம் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முடியுள்ள சீமாட்டி எப்படி வேணும்னாலும் கொண்டை போட்டுக்கிடலாம்!
தப்பா நெனைக்காதீங்க, காசும் மனமும் இருந்தா இப்படி அனுபவிக்கலாம்னு சொல்றேன். அவ்வளவுதான்.
நிறைய தகவல்களுடம் பகிர்வது சுற்றுலா செல்வோருக்கு உபயோகமாய் இருக்கும்! சிறப்பான பகிர்வு! நன்றி!
வாங்க சகோ,
ஆமாம். இயற்கையின் மடியிலே நமக்கு என்றைக்குமே பேரானந்தம் தான்.
வாங்க ஐயா,
தப்பால்லாம் நினைக்கலை. சுரேஷ் சொல்லிறாக்ப்ல போகணும்னு நினைக்கறவங்களுக்கு உதவியாய் இருக்கட்டுமேன்னு தான் ரேட் பத்தி சொல்லியிருந்தேன். அம்புட்டெல்லாம் நாம எங்க செலவழிக்கறது.. வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சுரேஷ்,
அதேதான். அதற்காகத்தானே இந்த பதிவுகள். வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment