Friday, February 12, 2016

மலையாளக் கரையோரம்.- நிறைவுப் பகுதி

குமரகோமிலிருந்து கிளம்பி கொச்சி வந்தாச்சு. அங்கே அயித்தான் ஏற்கனவே புக் செஞ்சு வெச்சிருர்ந்த ஹோட்டலில் செக்கின் ஆகி ரெஸ்ட் எடுத்தோம். சாயந்திரம் ஷாப்பிங். ட்ரடிஷனல் புடவை எனக்கும், மகளுக்கு கேரள ட்ரடிஷனல் சுடிதார் மெட்டிரியலும் வாங்கினோம். அண்ணா ஏதும் இண்டரஸ்ட்டா இல்லைன்னுட்டாரு. அயித்தானுக்கும் வேணாமாம்.

 எம் ஜி ரோடில் இருக்கும் அந்த ஜெயலக்‌ஷ்மி துணிக்கடை அருமையா இருக்கு. முகம் கோணாத கஸ்டமர் கேர். விளக்கு வாங்கணும்னு ஆசை. எங்க வாங்கலாம்னு சொன்னப்ப ஒருத்தர் கைரளிக்கு போங்கன்னு சொல்ல எனக்கு புடவை காட்டிய பொண்ணு மரைன் ட்ரைவ் பக்கத்துல ஏதோ பஜார் பேரு சொன்னாங்க அங்க போங்கன்னு சொன்னாங்க. கைரளில விலை ஜாஸ்திங்கற குறிப்பையும் சொல்லி அனுப்பினாங்க.


எதிர்லயே மால் இருந்தது. பிள்ளைகள் அங்கே போகணும்னு சொன்னதால பஜார் போறதை கைவிட்டு மால் போனோம். டின்னர் அங்கயே சாப்பிடலாம்னு முடிவாச்சு. நம்ம ஊர் மால்களுக்கும் அங்க மாலுக்கும் ரொம்ப வித்தியாசம். நம்ம ஊர்ல தண்ணி பாட்டில் காசு கொடுத்து வாங்கினாதான் உண்டு. ஆனா கொச்சியில் அங்கங்கே  மினரல் வாட்டர் கேன் வெச்சு அதுக்கு டம்பளரும் வெச்சிருக்காங்க.

அடுத்த நாள் காலையில் ப்ரெக்பாஸ்ட் முடிச்சு வர்றதுக்கும் வண்டி வர்றதுக்கும் சரியா இருந்தது.  சோட்டானிக்கரை பகவதி தரிசனத்துக்கு போனோம். டிசம்பர் மாசம் மதுரை போனப்பவே ஐயப்ப சீசன் கூட்டத்துனால அவதி பட்டது மறந்து அதே பீக் சபரிமலை சீசன்ல கேரளாவுக்கு ட்ரிப் போட்டது அப்பதான் மண்டையில உரச்சது. :(. வந்தது வந்திட்டோம். தரிசனம் செஞ்சிட்டு போயிடுவோம். வேற வழியில்லைன்னு முடிவு செஞ்சுகிட்டு கிளம்பினோம்.

நினைச்சதைவிடவும் நிறைய்ய கூட்டம் இருந்தது. ஆனா 45 நிமிஷத்துல தரிசனம் முடிச்சு வந்தாச்சு. திருப்பதி ஜரகண்டி மாதிரி அவசர தரிசனம் தான். ஆனா மனதில் நிற்கும் தரிசனம். முடிச்சு வெளிய வரும்போது கார் பார்க்கிங்குக்கு பக்கத்துல ஒரு விளக்கு கடை பாத்தது ஞாபகம் வந்தது. பெருசும் சிறுசுமா நிறைய்ய விளக்குகள் இருந்தது. எனக்கு  கேரள விளக்குதான் வேணும். நம்ம ஊர்ல கிடைக்குது. ஆனா ஒரிஜனல் அங்க தானே. :)

 இந்த கேரள விளக்குகள் இப்ப வாங்கினது. ஃபேஸ்புக்ல தன்மாலா செய்யும் போட்டி ஒண்ணு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அதுல என் கிட்ட இருக்கும் விளக்குகளை வெச்சு செஞ்சப்ப எடுத்த போட்டோ இது. இந்த விளக்குகள் டிஸ்ப்ளேக்குதான். ரொம்ப பெருசா இருந்தா எடுத்து வர சிரமம்னு மீடியம் சைஸா வாங்கினோம்.

லஞ்ச் முடிச்சு குருவாயூர் கிளம்பினோம். கேரளாவுல ஹைவே கூட குருகலா தான் இருக்கு. அதனால  கொறைஞ்ச கிலோமீட்டர் கூட அதிக நேரம் பயணம். 3.30க்கு கோவில் கிட்ட போனோம். அன்னைக்கு சனிக்கிழமை என்பதால கூட்டம் ஜாஸ்தியாதான் இருக்கும்னு தெரியும். வேற வழி. கண்ணன் பாத்துக்கட்டும்னு விட்டுட்டோம். குருவாயூர் கோவிலில் அழகா ப்ளான் செஞ்சிருந்தாங்க. அது ஐயப்பமார்களுக்கு தனி வரிசை. பொது மக்களுக்கு தனி வரிசை.  தனித்தனியா பிரிச்சு மாத்தி மாத்தி விட்டாங்க. 5 மணிக்குள்ள ஆனந்தமான தரிசனம். ஸ்ரீவேலி பாக்கணும்னு ஆசை. ஆனா 4 மணிக்கு முடிஞ்சிருச்சாம். அப்ப வரிசையில இருக்கறவங்களை அனுமதிக்கலை. ராத்திரி 9 மணிக்கு இருந்து பாத்துட்டு போங்கன்னாங்க. அடுத்த நாள் ஃப்ளைட். லேட்டான கஷ்டம்னு கிளம்பிட்டோம். பால்பாயசம் வாங்கினோம். இதமான சூட்டுல அதிக இனிப்பு இல்லாம பிரசாதம் ருசித்தது.

குருவாயுர்லயும் விளக்குகள் இருந்தது. விலை கேட்டேன். சோட்டானிக்கரையில் வாங்கினது விட 50 ரூவா கூட சொன்னாங்க. அந்த கடையில இருந்த வெரைட்டிகளும் இல்லை. நல்ல வேளை அங்கயே வாங்கினோம்னு நினைச்சுகிட்டேன்.  கண்ணனின் தரிசனம் இனிதே முடிந்து கொச்சி ட்ரிப்பும் முடிந்தது. இனிமையான நினைவுகள் எப்போதும் மனதில்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான பயணக் கட்டுரை...
அருமை அம்மா...

Pandian R said...

நிறைவான பயணமாக இருந்திருக்கிறது. நன்று.

pudugaithendral said...

நன்றி குமார்,

நன்றி கடைசி பெஞ்ச்

Unknown said...

Pudhugai akka, good to see you writing again. Ippove kerala poganum pola irukku. Will try to make it this time. Bookmarked your resort.

Take care,
Uma (Bayarea, CA)