Thursday, November 17, 2016

அமிர்தசரஸ் பயணம் - 2

லால் மாதாகி மந்திர் போகலாம்னு நம்ம ட்ரைவர் ராஜாகிட்ட சொன்னதும் சரின்னு கூட்டிகிட்டு போனார்.

ஏதோ சாதாரணக்கோவில் தரிசனம் செஞ்சிட்டு வந்திடலாம்னு நினைச்சோம். செம எக்சர்சைஸ். மேலே ஏறி, குகைல நுழைஞ்சு, தண்ணில நடந்துன்னு கோவிலுக்குள்ளயே பல தெய்வங்களின் தரிசனம்.

பாதி வழியில திரும்ப முடியாது. உள் நுழைவது ஒரு வழின்னா வெளிய வர இன்னொரு வழி. மொத்தமும் பாத்துட்டு தான் வரமுடியும்.  ஆனா போரடிக்காம ஒவ்வொரு தெய்வத்தையும் அழகழகா அலங்காரம் செஞ்சு வெச்சிருக்காங்க.

இந்த கோவிலை கட்டிய லால் மாதாங்கற பெண்மணியின் பெயராலாயே அறியப்படுற இந்தக்கோவில் வைஷ்ணோ கோவில் மாதிர். அங்கே போக முடியாட்டி இந்த கோவிலுக்கு போயிட்டு வந்தா அங்க போய் வந்த பலன் இங்க கிடைக்குமாம்! சரி நம்ம 22 வருஷ வைஷ்ணோ தேவி வழிபாடு இப்போதைக்கு இங்கே தரிசனம் வரைக்கும் வந்திருக்குன்னு நினைச்சுகிட்டேன்.

பெண்கள் தலை மூடியிருக்க வேண்டும் என்பது கட்டாய விதி.


இதான் வீடியோ லிங்க்

மேல ஏறி கீழ இறங்கி, குனிஞ்சு குகையில தவழ்ந்து, தண்ணில நடந்துன்னு ஓவர் எக்சர்ஸைஸானதுக்கு அப்புறம் மத்த இடத்துக்கு போக தெம்பு இல்லை. காலையிலிருந்து பயணம். தலைவலி ஆரம்பிச்சிருச்சு. ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு பாத்துக்கலாம்னு வந்துட்டோம்.

நண்பர் போன் செஞ்சு 7 மணிக்கு வருவதாகவும், அடுத்த ப்ளானை பத்தி அப்ப டிஸ்கஸ் செஞ்சுக்கலாம்னு சொன்னார். சரின்னு கட்டைய சாய்ச்சு கொஞ்சம் ரெஸ்ட், எடுத்து ரெஃப்ரெஷ் ஆகி, 7 மணிக்கு நண்பருக்கு போன் செஞ்சா 7.30க்கு வர்றேன்னார். ஒரு வழியா 7.45க்கு வந்தார். கூட இன்னொரு நண்பரையும் அழைச்சுகிட்டு வந்திருந்தார்.



2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பயண அனுபவத்தை சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு நன்றி படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உதிரத்தில் வளர்ந்த மொழி:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

நல்ல காணொளி .
நாங்கள் அமிர்தசரஸ் போய் இருந்த போது (லால் மாதா கோவில் )
இந்த கோவில் கட்டிக் கொண்டு இருந்தார்கள் உங்க்ள் பதிவில் தரிசனம் செய்து விட்டேன்.