நட்புக்களுக்கு வணக்கம்,
காரணம் நிறைய்ய சொல்லலாம். வலைப்பு பக்கமே வராம் இருந்திட்டேன். வலைப்பூ ஆரம்பிச்சு 9ஆவது வருடம் நிறைவடையப்போகுது.
இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில ப்ளாக்குக்கே திரும்ப வந்திடலாம்னு முடிவு செஞ்சிட்டேன். ஆமாம் பழைய புதுகைத் தென்றலா வர்றேன்.
வலையுலகுக்கு இது ஒரு மறுப்ரவேசம்.
நடுவுல கொஞ்சம் இந்த பக்கம் வந்தேன். முன்ன மாதிரி பரபரன்னு வலையுலகம் இல்லை. பஸ்ல போக ஆரம்பிச்சாங்க, அப்புறம் ப்ளஸ்ஸாகி இப்ப முகநூலில் தான் நட்புக்களை பாக்கறேன். அங்க எழுதுறது நமக்கு அம்புட்டு மனசுக்கு இதமா இல்லை. ரொம்ப பெரிய போஸ்ட்னுன்னா சும்மா லைக்க தட்டிட்டு ப்ரசண்ட் போட்டுடறாங்க. நமக்கு பெரிய பதிவா எழுதித்தான் பழக்கம். அதனால இனி ப்ளாக்குக்கே திரும்பிடலாம்னு முடிவு செஞ்சிட்டேன்.
இங்க இருக்கற ஒரு சுகம் முகநூலில் இல்லை. இதுதான் என்னுடைய முகநூல் அனுபவம். அங்கே க்ரோஷா குருப்ல சேர்ந்திருக்கேன். நிறைய்ய டிசைன்களுக்கு ஐடியா கிடைக்குது. அதை பாக்க அங்க போய் அப்படியே அங்கயே இருந்திடறேன். இதனாலயே மக்கள்ஸ் என்னை ஃபேஸ்புக்ல அதிகம் நேரம் செலவிடறதா நினைக்கறாங்க. முக நூலிலும் நிறைய்ய கத்துக்க இருக்கு. விட்டமின் டி குறைபாட்டுக்குன்னே ஒரு குழு, உள்ளத்தனைய உடல்னு நாம செய்யற உடற்பயிற்சிகளை பகிர்ந்துகறது. குழு உறுப்பினர்கள் ஊக்குவிக்க இன்னும் நிறைய்ய உடற்பயிற்சின்னு நல்லாத்தான் இருக்கு. ஆனா வலைப்பூவை ரொம்ப மிஸ் செய்யறேன்.
அதனால இனி ப்ளாக்குக்கும் நேரம் ஒதுக்கணும்னு முடிவு செஞ்சு முகநூல் நேரத்தை குறைக்க ஆரம்பிக்க திட்டமெல்லாம் போட்டாச்சு. மொதல்ல மொபைல்ல முகநூல் பாக்கறதை நிறுத்தியிருக்கேன். என் ப்ளாக்குக்கு ஆப்பி 9த் பர்த்டே சொல்லிக்கிட்டு இனி தொடர்ந்து சந்திக்கலாம் எனும் நம்பிக்கையோட பத்தாவது வருஷத்துல காலடி எடுத்து வைக்கிறேன். உங்கள் ஆதரவை எப்பவும் போல வழங்க வேண்டிக்கறேன்.
14 comments:
வாருங்கள்.... அடியேனும் இன்று முதல் தான்..........!
வாங்க...வாங்க...
வாழ்த்துக்கள் தென்றல், வாழ்க வளமுடன்.
மனம் திருந்திய மைந்தரே வாரும் !எமது மனம் மகிழ உமது பதிவுகளைத் தாரும் :)
வாங்க வாங்க பிறந்தவீட்டிற்கு மீண்டும் வருவது சந்தோஷம் அளிக்கிறது
புதுகை தென்றலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்க சொல்ற எல்லாமே சரி. முகநூல்ல நேரம் நிறைய விரயமாகுது.அதோட வேண்டாத விவாதங்களும், அதனால விவகாரங்களும் அதிகமா இருக்கு. இங்க இருக்கிற நிம்மதி அங்க இல்ல. எனக்கு ஏன் லைக் போடல, கமெண்ட் போடலன்னெல்லாம் சண்டை வருது. எல்லாருக்கும் லைக்கும் கமெண்டும் போடறதுன்னா நாள் முழுதும் அங்கியே இருக்க வேண்டியது தான்.
அதனால, நானும் ப்ளாகுக்கே திரும்பிட்டேன். புது பேரோடும் ! :):)
வாங்க தனபாலன்,
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். வருகைக்கு மிக்க நன்றி
நன்றி அனுராதா
நன்றி கோமதி அரசு அம்மா
வணக்கம் பகவான் ஜி
மனம் திருந்தின்னுல்லாம் இல்லை. முகநூல் மட்டுமே இங்க வராம இருக்க காரணம் இல்லை, அதுவும் ஒரு காரணம்.
வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் அவர்கள் உண்மைகள்.
பிறந்தவீட்டு சொந்தத்தை புதுப்பிச்சுக்கிட்டேன்.
வருகைக்கு மிக்க நன்றி
தானைத்தலைவி தான்??!!!
வருகைக்கு மிக்க நன்றி
Welcome Madam,palaya madiri niraya vishayangali yezhuthunga.Romba santhoshama irukku
வாழ்த்துக்கள்
Post a Comment