Saturday, December 31, 2016

2017ஆம் வருடத்தின் நிறமென்ன.

இன்று 2016ன் கடைசி நாள். ஒவ்வொரு வருஷமும் முடியும் போது பல சமயம் அலுப்பா இருக்கும். இந்த வருடம் முடிஞ்சா போதும்னு நினைச்ச வருடங்களும் உண்டு. புரட்டி எடுத்த வருடங்கள்னு சொல்லலாம். ஆனா 2016 எனக்கு மிக நல்ல வருடம்.

துவண்டு போயிருந்த நான் என்னை மீட்டெடுக்கணும்னு ஆரம்பிச்சேன். நாம கேட்பதை பிரபஞ்ச சக்தி கொடுக்கும் என்பதை உறுதி படுத்திக்கொண்ட வருஷம் 2016. என்னை மீட்டெடுக்கணும், ஆனா எப்படின்னு தெரியலை. இந்த சமயத்துல தான் எனக்கு சில கோர்ஸ்கள் வாட்சப் மூலமா செய்யும் வாய்ப்பு கிடைச்சது. ஹீலிங் கோர்ஸ்கள்.

என்னை எனக்கு புரிய வைத்து என் காயங்களுக்கு மருந்து போட்டு என்னை மீட்டெடுத்த அந்த வகுப்புக்களை நடத்திய என் ஆசான்களுக்கு நன்றி. அதிலும் பழையதை விட்டொழிது மன்னிப்பே கேட்காதவர்களையும் மன்னிக்கும் சக்தியை உருவாக்கி அந்த frogivenss course நடத்திய ரத்தி படேல் மேடம்மிற்கும், ஹூஓனோபோனோ மூலம் forgiveness சொல்லிக்கொடுத்த kanchan sharmaவிற்கும் மிக்க நன்றி. இவர்களின் வழிநடத்தலால்  60 பர்சண்ட் தேறிட்டேன். வாட்சப்பில் சூரிய நமஸ்காரம் சொல்லிக்கொடுத்த குரு விஜிக்கும் நன்றிகள். நானும் 108 சூர்ய நமஸ்காரம் செய்தேன் என்பதே மிகப்பெரிய ஆச்சரியம். இப்போ இவர்களின் உதவியால் 75 சதவிகிதம் நல்ல முன்னேற்றம்.

பழைய படி சுறுசுறுப்பாக பதிவெழுதி, ஹீலிங் கேட்பவர்களுக்கு உதவி செய்துன்னு இனிமையான துவக்கம். கற்றுக்கொண்டவைகளி விடாம தொடர்வதுதான் முழுமையா என்னை குணமாக்கும் என்று புரிந்ததுடன் நமக்கான வாழ்க்கையை நாம் நம் எண்ணங்களால், செயல்களால் முறையா சரியா அமைச்சுக்கலாம் என்பதையும் கட்டுக்கொண்ட வருடம் இது. வரப்போகும் 2017 எப்படி இருக்குமோ என பயமில்லை. நான் நினைத்தபடி நல்லவிதமாக ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாகத்தான் இருக்கும். நான் கேட்பதைத்தானே ப்ரபஞ்ச சக்தி கொடுக்க போகிறது. என்ன கேட்கணும், அதை எப்படி கேட்கணும் என்ற புரிதலுடன் 2016ஆம் ஆண்டை வழி அனுப்பிவிட்டு 2017க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
******************************************************************************
2017ஆம் வருடத்தின் நிறம் ரொம்ப அழகானது. Greenery இதுதான் 2017 வருடத்தின் சிறப்பு. பச்சை நிறமே பச்சை நிறமேன்னு கொண்டாடி மகிழலாம். அதுவும் ரொம்பவே கண்ணுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பச்சை.

பால்கனியில் சின்னதா செடிகள் வளர்த்தும் நாம இந்த பசுமையை நம்ம வீட்டுக்கு வரவேற்கலாம். வர்தா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு இந்த பச்சை நிறம் தொலைத்த பசுமையை திரும்ப தரட்டும். Angel therapyல்  Archangel Raphel  அவர்கள் தன்னுடைய பச்சை நிற ஒளியால் குணமாக்குவார் என்று சொல்லப்பட்டிருக்கு.

  காயப்பட்ட நெஞ்சங்களுக்கு மருந்தாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆண்டாகவும் பிறக்க இருக்கும் 2017ஆ ஆண்டு ,Greenery பசுமை எங்கும் தழைத்தோங்கி பாரதம் தழைக்க, நம் மனங்கள் குளிர என் பிரார்த்தனைகள்


5 comments:

மாதேவி said...

மகிழ்ச்சியுடன் வரவேற்போம் புத்தாண்டை.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் சிறப்பான எண்ணத்திற்கு வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

பரிவை சே.குமார் said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புதுகைத் தென்றல் said...

வாங்க மாதேவி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

வாங்க தனபாலன். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க சகோ, தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வாங்க குமார். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி