Friday, December 16, 2016

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? பாகம் -3

நம்ம வீட்டுல காய்கறி/பழங்கள் வாங்கி வெச்சிருக்கோம். அதுல ஒண்ணு அழுகியிருக்குன்னு வெச்சுப்போம். என்ன செய்வோம்? அதை உடனே தூக்கி போடுவோம்? ஏன் அது மத்த பழங்களையும் அழுகி போக செஞ்சிடும். அழுகின  பண்டம் சுகாதார கேடுன்னு தெரியும். ஆனா நம்ம மனசை கெடுக்கும் விஷயங்களை தூக்கி போடுறோமான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.

நமக்கு ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் திரும்ப திரும்ப அசைப்போட்டு இப்படி நடந்திருச்சேன்னு சுயபச்சாதாபம், சோகம் எல்லாம் கூட்டிக்கறோம்.  ப்ரபஞ்ச சக்திக்கு நாம எது கேக்கறோமோ அதை கொடுக்கத்தான் தெரியும். அப்படி இருக்க நாம பழைய வேதனைகளையும், வலிகளையும் நினைச்சு பாக்கும் போது “ஒ இவங்களுக்கு இதுதான் வேணும்போலன்னு” அதே மாதிரி அனுபவங்களை நமக்கு தருது. இது நமக்கு தெரியறதில்லை.

சரி விட்டொழிப்போம்னு நினைச்சா அப்பதான் எதிர்மறை எண்ணம் ஜாஸ்தி ஆகும். நமக்கு உடம்புல ஒரு காயம் ஏற்பட்டிருக்குன்னா அதுக்கு மருந்து போடுவோம். அதை பிடிச்சு சொறிஞ்சு கிட்டு இருக்க மாட்டோம். சொறிஞ்சா ரணமாகும்னு தெரியும். ஆனா மனசுல இருக்கும் காயம் வெளியில தெரியாது என்பதால அதை பிடிச்சு சொறிஞ்சுகிட்டுத்தான் இருக்கோம். இதனால அந்தக் காயம் இன்னும் இன்னும் அதிகமாகுது.

விடறது அவ்வளவு ஈசியானது இல்லீங்க. நான் ஏன் மறக்கணும்? நான் ஏன் மன்னிக்கணும்? என்னையப்போய் இப்படி பேசிட்டாங்களே? எனக்கு மட்டும் ஏன் இப்படி? இந்த மாதிரி நிறைய்ய கேள்விகள் ஓடும். அதுக்கு பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது நாம அதே வேதனை மன நிலையில்தான் இருப்போம்.

நான் ஒரு ரெய்கி ஹீலர். அடுத்தவங்களுக்கு இனிஷியேஷன் கொடுக்கும் அளவுக்கு க்ராண்ட் மாஸ்டர்.  எதிர்மறை சிந்தனைகளை எப்படி களையனும்னு தெரியும். ஆனாலும் ஒரு சமயத்துல இவை எதுவுமே எனக்கு உதவலை. ரொம்ப நாளா உள்ள சேர்த்து வெச்சிருந்த எண்ணங்கள் என்னை அமுக்கிடிச்சு. எப்பவும் எதிர்மறை சக்திக்கு சக்தி அதிகம்.  என்னை வெளியே கொண்டுவரத் தெரியாம போயிடிச்சுன்னு தான் சொல்லணும். என் உறவினர்  ஒருவர் எனக்கு ரெய்கி ஹீலிங் செய்யறேன்னு வந்தாங்க. என் உடம்புலேர்ந்து அடைப்புக்களை (Blocks- which has been created by negative emotions) எடுக்கவே முடியலை. இவை போனாத்தான் உனக்கு உடம்பு சரியாகும். விட்டுத்தள்ளுன்னாங்க. விடத்தெரியலையேன்னு அழுதேன்.

அப்ப அவங்க எனக்கு இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா எதிர்மறை சிந்தனைகளை எப்படி களைவதுன்னு சொல்லிக்கொடுத்தாங்க. அது ஹெல்ப் செய்ய ஆரம்பிச்சது.  நான் அப்ப ஹைதையில் இருந்ததால என்னால வகுப்புக்கு போக முடியாதுன்னு விஜயலட்சுமி பந்தயன் அவர்களின் ALPHA MIND POWER CD வாங்கிக்க சொன்னாங்க. உங்களுக்கு சாத்தியம்னா கண்டிப்பா இந்த கோர்ஸை செய்ய தவறாதீங்க. அது அற்புதமான உணர்வு.

சரி அந்த குறுந்தகடுல அப்படி என்ன இருக்கு? எதிர்மறை எண்ணங்களை எப்படி களைவது? இதுதான நமக்கு இருக்கும் பெரிய்ய பிரச்சனை. இதற்கு விஜயலட்சுமி மேடம் அவர்களின் இனிமையான குரலில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ தமிழ்/ஆங்கிலம் மொழிகளில் கிடைக்குது. இது ஒரு guided meditation.
Meditation அப்படின்னது ஏதோ ஆன்மீகம் சம்பந்தப்பட்டதுன்னு நினைக்காதீங்க.

ஆன்மீகமா அதை மாத்திக்கறது அவங்வங்க தனிப்பட்ட விஷயம். மெடிட்டேஷன் என்பது உண்மையில் நமது மனதை ஒருமுகப்படுத்தி, அலைப்பாயம வைக்க உதவும் ஒரு கருவி. மனத்தை அமைதியாக்கத்தான் தியானம். உடலுக்கு உடற்பயிற்சி மாதிரி மனதுக்கு தியானம். நம்ம வள்ளுவ சொல்லியிருப்பதை ஒரு தடவை நியாபக படுத்திப்பாருங்க. “ வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு” உயர்வு மட்டுமில்லீங்க நம்ம உடலும் உள்ளத்தை சார்ந்துதான் இருக்கும். உள்ளம் ஆரோக்கியமா இருந்தா உடம்பையும் வலுவாக்கலாம்.

அந்த ஆடியோ சீடி வாங்கினேன். எதிர்மறை சிந்தனைகளை களைவது எப்படி இதுதான் அந்த சீடி. (negative thoughts removal) Alpha mind power இதுதான் அந்த வெப்சைட். இந்த தளத்துல ஆன்லைன்ல சீடி வாங்கலாம்.  மனதுல ஆழமா இருக்கற எதிர்மறை சிந்தனைகளை இந்த சீடி உதவியோடு வெளியக் கொண்டுவரணும். ஒரு தடவையில ஆகாது. வாராவாரம் அல்லது 3 நாளைக்கொருதரம் இந்த சீடியை கேட்டு செய்யணும். இப்படி அடிக்கடி செய்ய செய்ய நல்ல மாற்றம் வரும்.

முடிஞ்சவங்க அவங்க நடத்தும் வகுப்புல சேர்ந்து பயனபெறலாம். முடியாதவங்க அவங்களுடைய குறுந்தகடுகளை வாங்கி உபயோகிக்கலாம். இந்த சீடி வாங்கி போட்டு கேட்டுட்டா எல்லாம் மாறிடுமான்னு கேக்கலாம்? மாறணும். வலிலேர்ந்தும் வேதனையிலிருந்தும் நாம விடுபடணும்னு அப்படிங்கற எண்ணம் இருந்தா இந்த மாற்றத்தை நாம ஏத்துக்க நம்ம மனசுல நினைக்கனும். அப்பதான் சாத்தியம். த்ருட சங்கல்பம் அப்படின்னு சொல்வாங்க.

சங்கல்பம் அப்படின்னா என்ன?( Sankalpa (Sanskrit: संकल्प) means conception or idea or notion formed in the heart or mind, solemn vow or determination to perform, desire, definite intention, volition or will.) ஒரு விஷயத்தை நாம செய்வதாக முடிவு செய்வது. நம்ம சங்கல்பம் என்ன நம்மை நாம குணமாக்கிக்கனும்.
தொடரும்......2 comments:

மாதேவி said...

நன்று. தொடருங்கள்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எல்லாம் எறிந்து சிறப்பாக வாழ்வேன் என்றஎண்ணம்மேல்ஓங்கிஇருந்தால் அனைத்தும் களையும்என கருதுகிறேன்.

புதுகைத் தென்றல் said...

நம் எண்ணத்தை மாத்திக்கணும் அது மட்டும்தான் சிறந்த வழி. வருகைக்கு நன்றி