Wednesday, December 21, 2016

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?? பாகம் - 5

சங்கல்பம் என்பது நாம ஒரு வேலையை செஞ்சு முடிக்கணும்னு மனசார நினைப்பது. பூஜைகள் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துது. மந்திரங்கள் அதைப்பத்தி பாப்போம். (இது என்னுடைய பார்வைதான். இது தான் சரின்னு சொல்லலை.)

The Secret புத்தகம் பத்தி சொல்லியிருந்தேன்ல அந்த புத்தகத்துல  நம்ம எண்ணங்களின் வெளிப்பாடா நம்ம வாழ்க்கை எப்படி இருக்குன்னு சொல்லியிருப்பது போல நாம சொல்லும் சொல்லுக்கும் மதிப்பு இருக்குன்னு சொல்லியிருக்காங்க. அதனால தான் நம்ம பெரியவங்க நல்லதையே பேசணும். நிறைஞ்ச வீட்டுல இருந்துக்கிட்டு இல்லைன்னு சொல்லக்கூடாது, அப்படின்னு நிறைய்ய சொல்லியிருக்காங்க. மத்ததைப்பத்தி அப்புறம் பாக்கலாம். இப்ப சொல்லக்கூடிய சொற்களின் தாக்கத்தை பத்தி பாப்போம்.

ததாஸ்து தேவதைகள் நம்மை சுத்தி இருப்பாங்க. அதனால இல்லைன்னு சொல்லக்கூடாது அப்படின்னு எங்க அம்மம்மா சொல்வாங்க. நிறைய்ய இருக்குன்னு தான் சொல்லணும். அந்த நிறைய்யல கொடுக்கற அர்த்தத்தை வெச்சு ஓகே இது கம்மியா இருக்கு/No availability அப்படின்னு புரிஞ்சுக்கணும். அதாவது இப்ப உப்பு தீர்ந்து போச்சுன்னு வெச்சுக்குவோம். உடனே உப்பு இல்லை வாங்கிட்டு வரணும்னு சொல்வோம். ஆனா அதுக்கு பதிலா “உப்பு நிறைய்ய இருக்கு” வாங்கணும்னு மாத்தி சொல்லணும்.

ப்ரபஞ்ச சக்திக்கு இல்லைங்கற வார்த்தை என்பதே தெரியாதுன்னு சீக்ரட் புத்தகத்துல சொல்லியிருக்காங்க. நாம எனக்கு இது வேணாம்னு சொன்னா நமக்கு வேணும்னு சொல்வதாத்தான் எடுத்துக்குமாம். இல்லைன்னு சொன்னா இல்லாம போகும். சொல்லப்படும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.
அதனால நாம என்ன சொல்றோம் அப்படிங்கறதுல அதிக கவனம் செலுத்தனும். நேர்மறைகூற்றாத்தான் அது இருக்கணும். இதை நாம எப்பவும் மறக்க கூடாது.

POSITIVE AFFIRMATION - நேர்மறை உறுதிக்கூறப்படுவது:
மருத்துவரோட முக்கிய வேலை மருந்து கொடுப்பது மட்டுமில்லை. நோயாளிகள்ட்ட அன்பா பேசி அவங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுப்பதும்தான். “ எல்லாம் சரியாகிடும். இந்த மருந்தை எடுத்துக்கோங்க. சீக்கிரம் நிவாரணம் ஆகிடும்” அப்படின்னு சொல்லி அனுப்புறார்னு வெச்சுக்குவோம். அந்த நோயாளி அந்த எண்ணங்களோடயே அந்த மருத்துவத்தை தொடரும்போது அந்த மருந்து சீக்கிரம் வேலை செய்யும். எல்லாம் சரியாகிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார்னு அவங்க திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அப்ப எல்லாம் சரியாகும். இது ஒரு உதாரணத்துக்கு சொல்லியிருக்கேன்.

அந்த மருத்துவர் சொன்ன வார்த்தைகள் தான் positive affirmation. ஹீலிங்கில் இந்த positive affirmation ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கப்படுது. நான் நல்லா இருக்கேன். எல்லாம் நல்லபடியா நடக்கும், இப்படி உறுதிக்கூறப்படும்போது  நம்ம மனசுல அது ஆழமா பதியுது. இந்த உறுதிகூறப்படும் நேர்மறை வார்த்தைகள் தான் நமக்கு மந்திரம். அதாவது அதுல எந்த எதிர்மறை சொல்லும் இல்லாம இருக்கணும். இது ரொம்ப முக்கியம். நேர்மறை வார்த்தைகளால் அந்த உறுதிக்கூறும் வாக்கியங்கள் அமைக்கப்படணும்.

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

தனம் தரும் – எல்லாவிதமான செல்வங்களும் தரும்
கல்வி தரும் – எல்லாவிதமான கல்வியையும் தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் – என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்
தெய்வ வடிவும் தரும் – தெய்வீகமான உருவத்தையும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்
நல்லன எல்லாம் தரும் – இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும் – எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே.
                         ***********************************************

கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி அருள்வாய் அபிராமியே!
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி அருள்வாய் அபிராமியே!
அபிராமி அன்னையே, அலைகடலில் உறங்கும் மாயன் திருமாலின் தங்கையே, பழமை நிறைந்த திருக்கடவூரின் வாழ்வே, அமுத ஈசன் உன்னை விட்டு விலகாமல் எப்போதும் ஒருபக்கம் பொருந்தியிருக்கிறவளே,
1.கலையாத கல்வி2.நீண்ட ஆயுள்3.வஞ்சகம் இல்லாத நட்பு, நண்பர்கள்4.நிறைந்த செல்வம்5.என்றும் இளமை6.நோயற்ற உடல்7.சலிப்பற்ற மனம்8.அன்பு நீங்காத மனைவி / கணவன்9.குழந்தைப் பேறு10.குறையாத புகழ்11.சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தன்மை12.பிறருக்குக் கொடுக்கும் எண்ணம், அப்படிக் கொடுப்பதற்குத் தடைகள் இல்லாத சூழ்நிலை13.நிலைத்த செல்வம்14.நேர்மையாக ஆட்சி செய்யும் அரசன் (தான் நேர்மையாக வாழ விரும்பும் உள்ளம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
15.துன்பம் இல்லாத வாழ்க்கை6.உன்மேல் எப்போதும் அன்பு இந்தப் பதினாறு செல்வங்களையும் எனக்குத் தருவாய், அதோடு, உன்னுடைய பக்தர்களுடன் என்றென்றும் கலந்து பழகி மகிழும் வரத்தையும் அருள்வாய்!

இவை அபிராமி பட்டர் அவர்கள் அருளிச்செய்த அபிராமி அந்தாதி பாட்டு. இது மொத்தமும் positive affirmations தான். நம் முன்னோர்களுக்கு ப்ரபஞ்ச சக்தி எனும் ரகசியம் தெரிஞ்சிருக்கு. கேளுங்கள் கொடுக்கப்படும் அப்படின்னு சொல்லிக்கொடுத்து அதை எப்படி கேக்கணும்னும் அழகா சொல்லியிருக்காங்க. சீக்ரட் புக் படிச்சதுக்கு அப்புறம் மந்திரங்கள் ஸ்லோகங்களை பார்க்கும்போது ஒரு எதிர்மறை சொல் இல்லாம எவ்வளவு அழகா வார்த்தைகளை அமைச்சு நமக்கு கொடுத்திருக்காங்க அப்படின்னு புரிஞ்சது.

ஸ்கந்த சஷ்டி கவசம் எல்லோருக்கும் தெரியும். அதில் இருக்கும் ஒவ்வொரு வார்தைகளும் நேர்மறை உறுதிகூறப்படுவதுதான்.  ஸ்கந்த குரு கவசமும் அப்படித்தான். “கற்றர்வகளோடு என்னை களிப்புறு இருத்திடச்செய், உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்கிறேன், எந்த நினைப்பயும் எரித்து நீ காத்திடு, அன்பே சிவம், அன்பே நித்தியம், அன்பே பிரம்மமும்” இப்படி நிறைய்ய. இவைகளை திரும்ப சொல்ல சொல்ல நமக்குள் அன்பு பெருகும், கற்றவர்களுடன் நாம கலந்து மேலும் அறிவை பெருக்கிக்கலாம். ஏதோ மந்திரம் அப்படின்னு நினைக்காம நேர்மறை உறுதிக்கூறப்படுவதாக நினைத்து ஒரு முறை ஆழமா கேட்டுப்பாருங்க.

நம்ம முன்னோர்களுக்கு ரகசியம் தெரிஞ்சிருக்கு. எதை எப்படி அடையணும்னு தெளிவு இருந்திருக்கு? இப்ப வெளிநாட்டினர் THE SECRET  அப்படின்னு புத்தகம் எழுதி அதை படிச்சதுக்கப்புறம் தான் தெளிவாகியிருக்குன்னா நம்ம முன்னோர்கள் சொன்னதை நாம எவ்வளவு தூரம் நாம கண்டுக்காம விட்டிருக்கோம். காரணங்களை பத்தி பேச வேண்டாம்.

இனியாவது நமக்கு தெரிஞ்சதை நாலு பேருக்கு எடுத்து சொல்வோம். நேர்மறை உறுதிக்கூறுவதைப்பத்தி சொல்வோம். இந்த positive affirmations எல்லாம் நமக்கு நாமே சொல்லிப்பது. நமக்கு எது தேவையோ அதுக்கு தக்க நம்ம உறுதிக்கூற்றை அமைச்சுக்கணும். அதைப்பத்தி விரிவா இன்னொரு பதிவில் சொல்றேன்.

தொடரும்

2 comments:

Vaishnavi said...

5 Bagamum ippathan padichen madam.yellam super.continue pannunga madam.All the best

pudugaithendral said...

thank you