Sunday, December 25, 2016

Dear Zindagi

மன நலம் பத்தி இப்ப வெளிப்படையா எல்லோரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. ஆரோக்கியமான விஷயம். மனநலத்தை முன்னிறுத்தி ஒரு அழகான படம்.  அட்வைஸ் சொல்றாப்ல இல்லாம இயல்பா மெசஜ் சொல்லியிருக்காங்க.

தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்குன்னு தெரியாமலேயே இருக்கும் இளம்பெண்ணாக தன்னுடைய நடிப்பை ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருக்காங்கன்னு சொல்வதை விட காய்ராவா வாழ்ந்திருக்காங்கன்னு சொல்லலாம். தூக்கமில்லாமல் தவிப்பதாகட்டும், தன்னுடைய பாணி வேலையை செய்ய முடியாமல் தவிப்பதாகட்டும் ஆலியா ரொம்பவே முன்னேறி இருக்கிறார். ஒரு குழந்தை வளர்ந்து பெரிதானதும் அவர்களின் செயல்கள், நடந்து கொள்ளும் முறை இவை எல்லாம் குழந்தையின் இளம்பிராயத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் வெளிப்பாடுதான் என்பதை  சொன்ன விதம் பிடிச்சிருக்கு.

படம் ஆரம்பிச்சு ரொம்ப நேரத்துக்கு பிறகுதான் ஷாருக்கான் ஸ்க்ரீன்லயே வர்றார். ஜக் எனும் மனநல மருத்துவர். ஆலியாவிற்கு ஒவ்வொன்றாக புரிய வைக்குமிடம் மிக அருமை. சிறுவயதில் தன் பெற்றோரிடம் வளர்ந்திடாமல் தனது தாத்தா பாட்டியுடன் வளர்ந்திருக்கும் காய்ரா (ஆலியா) பெற்றோர்களிடம் அவ்வளவாக ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறார். அம்மா, அப்பாவிடம் தினமும் 10 நிமிடம் பேச வேண்டும் எனும் ஹோம் வொர்க் கொடுக்கிறார் ஜக். பத்து நிமிஷமா? என்ன பேச? எனும் குழம்பும் காய்ரா 4 நிமிடம் பேசியதை பெரிய சாதனையாக நினைத்து சொன்னபோது அவருக்கு அட்வைஸ் ஏதும் சொல்லாமல், அவருடைய பிரச்சனைக்கு ஆணிவேர் அடிமனதில் இருக்கும் இளம்பிராய வருத்தம் அதை தூக்கிப்போட்டு பெற்றோருடன் நல்ல உறவு பேணுவதனால் அவருடைய தற்போதைய வாழ்வில் மாற்றங்கள் வரும் என்பதை புரிய வைத்து அதை செயல்படுத்தும் விதம் அருமை.

பீச்சுக்கு தன் தந்தையோடு வந்து அலைகளுடன் கபடி விளையாடியது நினைவுக்கு வருவதாக சொல்லும் ஷாருக், ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு இனிமையான நினைவுகளை தருவது ரொம்ப முக்கியமென சொல்வது என மெசஜ்கள் போகிற போக்கில் சொல்கிறார். இப்படித்தான் படத்தில் மெசஜ்கள் சொல்லப்பட்டிருக்கு. அட்வைசாக சொல்லாமல் அவசியம் ஏற்பட்டபோது சொல்லியிருப்பது அழகு.

ஷாருக்கின் சக்தே இண்டியா மாதிரி இந்தப்படமும் அவரின் வித்தியாச நடிப்பை காட்டுது. பாலிவுட் பாதுஷா எனக்கொண்டாடப்படுபவர் இப்படி வித்தியாசமாக  நடிப்பதற்கு பாராட்ட வேண்டும்.

யாருக்குத்தான் துன்பமில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம். ஆனால் அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் இருப்பதுதான் மேலும் பிரச்சனையாக இருக்கிறது. பழையதை தூக்கிப்போட்டு புதிய வாழ்க்கையை தொடங்குவது ஒன்றுதான் பிரச்சனைக்குத் தீர்வு என அழகாக சொல்லியிருக்காங்க இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் இயக்கிய கொளரி ஷிண்டே.

நமக்குள் மாற்றத்தை எப்படி கொண்டு வரவேண்டும். இந்தப்பாட்டுல அழகா சொல்லியிருக்காங்க.





LET GO PAST SAY HI TO NEW LIFE இதுதான் இந்த படத்தின் மெசஜ். புத்தாண்டு பிறக்க இருக்கும் இந்த நேரத்தில் புதிய வாழ்க்கைக்கு ஹாய் சொல்லி உங்களுக்கு ஐலவ்யூ சொல்லிக்கோங்க. வாழ்க்கை வாழ்வதற்கே..




9 comments:

Muruganandan M.K. said...

சுருக்கமான நல்ல விமர்சனம்

Unknown said...

Nice movie...

கார்த்திக் சரவணன் said...

அடடா, இந்தப் படம் நம் வாழ்வில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரும் போலவே!

சுசி said...

பல புது தகவல்களை கொண்டுவந்து கொடுப்பதற்கும், நல்ல பதிவிற்கும் நன்றி கலா. பயனுள்ள பதிவு.

ஸ்ரீராம். said...

பார்க்க வேண்டிய படம். ஜெயகாந்தன் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்று எழுதிய புத்தகம் நினைவுக்கு வருகிறது 'எல்லோருமே ஒரு வகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்' என்னும் வரியைப் படிக்கும்போது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தமிழ் வலைப்பதிவகம் வழியாகத் தங்களின் தளத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான விமர்சனத்திற்கு பாராட்டுகள்.

pudugaithendral said...

வாட்சப் வலைப்பூ திரட்டி மூலம் என் வலைப்பூக்கு முதல் முறையாக வந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தரவேண்டுகிறேன்.

நன்றி தனபாலன் நன்றி சுசி

pudugaithendral said...

ஆமாங்க சரவணன்,

நல்ல மாற்றங்கள்தான் இப்போதைய தேவை.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

அனைவருக்கும் நன்றி