Thursday, January 05, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா- பாகம் 8

ஆசையா ஒரு புடவை வாங்குவோம். கட்டிட்டு வந்ததும் மொதல்ல வீட்ல இருக்கறவங்களை கேட்கும் கேள்வி. புடவை நல்லா இருக்கா? எனக்கு சூட் ஆகுது? அழகா இருக்கேனா? போன்றவை.  வாங்கினது நாம ஆசைப்பட்டு. இதுல அடுத்தவங்க கருத்து ஏன்? முரணா இருக்குல்ல. இப்படித்தான் அடுத்தவங்க கருத்துக்கு ரொம்ப மதிப்பு கொடுக்கறோம்.

நான் எவ்வளவு கஷ்டபட்டு வேலை பார்க்குறேன். ஆபீஸ்ல ஒரு அப்ரிஷிஷேசனே இல்ல. இந்த குடும்பத்துக்காக எவ்வளவு உழைக்கறேன். எனக்கு ஒரு பாராட்டு உண்டா? சமைச்சதை நல்லா இருக்குன்னு ஒரு நாள் கூட சொன்னதில்லைன்னு ஒரு அங்கீகாரமான வார்த்தைக்கு தான் ஆசைப்படறோம். ஆனா அந்த ஆசையே நமக்கு அழிவை கொண்டு வருது. பாசிட்டிவ் வார்த்தைகளுக்கு சந்தோஷப்படறோமோ அதே அளவு வருத்தமும் வேதனையையும் நெகட்டிவ் வார்த்தைகள் தருது. அடுத்தவங்க கமெண்ட் தரும் பாதிப்பு ப்ளஸ்ஸாவும் இருக்கலாம். மைனசாவும் இருக்கலாம்.

 பசங்க மார்க், உடம்பு குண்டா இருப்பதைப் பத்தி வரும் கமெண்ட். நாங்க டபுள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்கினப்ப வீட்டுக்கு வந்த உறவினர் இதெல்லாம் தேவையா? அப்படின்னு சொன்னாங்க. நாங்க அவங்க கிட்ட ஏதும் கடன் வாங்கலை. ஏன் வெளிய கூட கடன் வாங்கலை. மாசா மாசம் ஆர்டி கட்டி அதுல வாங்கினது. இப்படி தேவையோ தேவை இல்லையோ அடுத்தவங்களைப் பத்தி கமெண்ட் அடிக்கறவங்க இருக்காங்க.

பல சமயம் பர்சனலா நம்ம மனசை பாதிக்கும் அளவுக்கு இருக்கும். முக்கியமா பெண்கள் சந்திக்கும் பிரச்சனை வேலைக்கு போனா அவங்களை வேற மாதிரி பேசுவாங்க. வேலைக்கு போகலைன்னா ஓ நீ வேலைக்கு போகலையா, அப்படின்னா எதுக்கும் லாயக்கில்லைங்கற ரேஞ்சுக்கு பேசி காயப்படுத்துவாங்க. குழந்தைகளையும் விடறதில்லை. கருப்பா இருக்க, ஒல்லியா இருக்கன்னு.

உண்மையா பாத்தா அவங்க கருத்தை அவங்க சொல்றாங்கன்னு எடுத்துக்கணும். ஆனா அப்படி நினைக்கறோமா. இல்லை. நம்ம மனசுல அந்த வார்த்தைகள் ஊசியா குத்திக்கிட்டு இருக்கும். இன்னும் சொல்லப்போனா அந்த குரல் வாக்கியங்கள் எல்லாம் நம்ம காதுல எதிரொலிச்சுக்கிட்டே இருக்கும். இதுதான் நமக்கு தீராத மன அழுத்தத்தை தருது.

நாலு பேரு பேசிட்டா என்ன செய்வது? இந்த ஒரு நினைப்பே  எத்தனை பிரச்சனைகளுக்கு வழி வகுத்திருக்குன்னு யோசிச்சிருப்போமா? யாரு அந்த நாலு பேரு? நமக்கு முத்திரை குத்தி நம்ம மனசை கிழிக்க யாரு அதிகாரம் கொடுத்தது?

அந்த நாலு பேரு யாரா வேணாம் இருக்கட்டும். ஆனா அவங்க கருத்துக்கு மதிப்பு கொடுத்தது யாரு நாம தான். அவங்க வார்த்தைகளை நம்மை பாதிக்க வெச்சுக்கிட்டதும் நாம தான்.

எனக்கு பிடிச்சது நான் செய்யறேன். என் பிள்ளைக்கு இந்த படிப்பு தான் படிக்க முடியும். அவன் வாங்கும் மார்க்கை பத்தி எனக்கு கவலையில்லை. நான் குண்டா இருந்தா அவங்களுக்கு என்ன? என்ன உடுத்தினா என்ன?ன்னு இருந்திருவோமா? இருக்க முடிஞ்சா அதுதான் நல்லது. ஆனா இது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.

நம்ம பெரியவங்க நமக்கு சொல்லி கொடுத்திருப்பது நல்ல பேரு வாங்கணும். நீ நல்லவன்னு சொல்லணும். யார் சொல்லணும்? பெத்தவங்க மட்டும் சொன்னா போதுமா? இப்படி நிறைய்ய சொல்லலாம். பதிவு ரொம்ப டீப்பா போகும்னு சொல்லும்போதே இந்த கருத்துக்கள் நம்ம மனசை எவ்வளவு ஆழமா பாதிக்குதுன்னு புரியும்.

அப்படியே அடுத்த வங்க என்னைப் பத்தி என்ன வேணாம் நினைக்கட்டும்னு இருந்திட முடியுமா? படிக்கும் போது காண்டெக்ட் சர்டிபிகேட் முக்கியம்,  இது சரியில்லைன்னா காலேஜ்ல அட்மிஷன் கிடைக்காது.  ஆபீஸ்ல நல்ல பேரு வாங்கணும். ஏன் திருமணம் பேசும்போது கூட பெண் வீடு, மாப்பிள்ளை வீடு எப்படி விசாரிக்கும்போது அடுத்தவங்க கருத்தும் தேவைப்படுதே. தாயைப்பார்த்து பெண்ணெடுன்னு வேற சொல்லிட்டாங்க. ஆனா உண்மையா பாத்தா  குடும்பத்தினருக்கு சம்பந்தமே இல்லாம மணமகளோ/மணமகனோ இருக்க வாய்ப்பு இருக்கும். முற்றிலும் எதிரா. அப்ப எதை வெச்சு முடிவு எடுப்பாங்க. ஆபிஸ்ல விசாரிப்பாங்க. கூட வேலை பார்க்கறவங்க நல்ல பையந்தான்னு சொல்லணும்.

இப்படி நிறைய்ய சொல்லலாம். அடுத்தவங்க கருத்துக்கு மதிப்பு கொடுத்து கொடுத்து அவங்க சொல்லிட்டாங்க அப்படின்னு நாம மனசு வருத்தப்பட்டு நம்ம உடம்பை கெடுத்துக்கிறோம். இது தான் எமோஷனல் ப்ளாக்கா  உடம்புல வந்து வலியைக் கொடுக்குது.

என்ன செய்யலாம்? பேசுவோம்........



7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

காத்திருக்கிறேன்...!

மாதேவி said...

நல்ல கருத்துகள்.

ர. சோமேஸ்வரன் said...

ரொம்ப தேவையான கருத்து இது மேடம், நீ ரொம்ப நல்லவன் என்று அடுத்தவர்கள் சொல்லும் போதே கண்ணுக்கு தெரியாத ஒரு சங்கிலியால் நம்மை கட்டிவிடுகிறார்கள். இதை உடைத்து நமக்காக நாம் வாழ்வது சவால்தான்.

இராய செல்லப்பா said...

உண்மைதான், அடுத்தவர் கருத்துக்களால் நமக்கு எள்ளளவும் பயனில்லை என்றாலும் சில சமயம் அவை நம் நெஞ்சை ஊசிகொண்டு குத்துவது போல் உணருவதுண்டு. இதைத் தவிர்ப்பதற்கில்லை. நாம் சராசரி மனிதர்கள் தாமே!

(அதற்காக நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டாம்: முக்கியமாக, புதிய பட்டுப்புடைவை கட்டிக்கொண்டால் அழகாக இருக்கிறோமா இல்லையா என்று மற்றவர்களிடம் கேட்பதை. "ஆஹா,சூப்பர்" என்ற பதில் கிடைத்தால் அது உண்மை என்று எடுத்துக்கொள்ளுங்கள். "அந்தக் கடையிலா எடுத்தீர்கள்? .." என்பது போன்ற, சந்தேகத்துடன் முகச்சுளிப்பும்டை கொண்ட பதில் கிடைத்தால் அவர்களுக்கு உங்கள்மீது பொறாமை என்று தெரிந்துகொள்ளுங்கள்...) (எல்லாம் நம்ம வீட்டு அனுபவம் தாங்க!)

- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
(http:/chellappatamildiary.blogspot.com)

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

இதோ பதிவு வருது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

நன்றி மாதேவி

வாங்க சோமேஸ்வரன்,

எல்லாம் வடிவேலு காமெடி மாதிரிதான். நல்லவன்னு சொல்லிட்டங்கன்னு பேசாம் இருந்தே அடி வாங்குறோம். நன்றி

pudugaithendral said...

வாங்க செல்லப்பா அவர்களே,

அந்த பழக்கத்தை தானே மாத்திக்க முயற்சி செய்யப்போறோம்.

வருகைக்கு மிக்க நன்றி