எனக்கு கல்யாணம் ஆனதும் அயித்தானின் அண்ணன் மனைவி ஒரு இரும்பு வாணலியை கொடுத்தாங்க. அதுதான் புழங்கிகிட்டு இருந்தேன். போகப்போக அதுல தோசை வார்த்தாலே ஒட்டிக்க ஆரம்பிச்சது. அவங்க ரொம்ப வருஷமா உபயோகிச்சதுதான். அதனால தேஞ்சு போயிருந்தது. அதனால வேற வாங்கினேன். ஆனா அதை பழக்கி எல்லாம் செஞ்சு கொடுத்தாங்க அம்மா. நல்லாதான் இருந்துச்சு.
எங்கம்மாவீட்டுல வேலைக்காரம்மா தோசைக்கல்லை மண் வெச்சு தேய்க்கறது, மாத்திரை பேப்பர் வெச்சு தேய்ப்பதுன்னு என்னனென்னவோ செய்வாங்க. ஓரங்களில் எல்லாம் ஒட்டாம ரொம்ப அழகா தோசை வார்க்க வரும். காலப்போக்கில் என் இரும்பு தோசைக்கல்லோட போராட முடியாம கைவலியும் சேர்ந்துக்கிட்டதால நான் ஸ்டிக் தோசை கல்லுதான் உபயோகிச்சு கிட்டிருந்தேன்.
இரும்பு வாணலி இருந்தது ஆனா அதை உபயோகிக்க முடியாமலே வெச்சிருந்தேன். என் மகளுக்கு இரும்பு தோசை கல்லுல தோசை சுட்டா அந்த டேஸ்ட் ரொம்ப பிடிக்கும். வாசனையே வேற மாதிரி இருக்குல்லம்மான்னு சொல்வாப்ல. இப்ப கை வலிக்கும் ஒரு தீர்வு கண்டுகிட்டதுக்கப்புறம் ஏதாவது செய்யணும்னு எண்ணம். வருஷா வருஷம் நான் ஸ்டிக் பாத்திரங்கள் வாங்குவது ஒரு தொகை போற மாதிரி எண்ணம். நெட்ல எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்குதே இதுக்கும் கிடைக்காதான்னு பாப்போம்னு தேடினேன்.
இவங்க ப்ளாக் கிடைச்சது. அது படி செஞ்சு பாக்கலாம்னு ஆரம்பிச்சேன். நாம அடிக்கடி உபயோகிக்கும் தோசைக்கல்லாக இருந்தாலும் அதுக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அவசியம்னு தெரிஞ்சுகிட்டேன். அது என்னன்னு பகிர்றேன்.
நல்ல குளிர்ந்த ஐஸ் தண்ணில தோசைக்கல்லை ஊற வைக்கணும். சோப்பு ஏதும் போடாம குளிர்ந்த தண்ணில கல்லு மொத்தமும் மூழ்குறாப்ல ரெண்டு மணிநேரத்துக்கும் மேல ஊற வைக்கணும். எடுத்து கொஞ்சம் பாத்திரம் கழுவும் லிக்விட் இல்ல சோப் போட்டு ஸ்டீல் உல்லால தேய்க்கணும். ஓரங்களில் எல்லாம் நல்லா ப்ரஷர் கொடுத்து தேய்க்கணும். இப்படி தேய்ப்பதால நாம முன்ன சமைக்கும் போது ஓரங்களில் பிடிச்சிருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு போய்டும். தேய்ப்பது கஷ்டமா இருந்தாலும் இதை செஞ்சிட்டா அடுத்த ஸ்டெப் ரொம்ப ஈசி. தேய்ச்சு முடிச்சதும் கழுவி ரெண்டு மணிநேரம் ஈரம் காய விடணும்.
இப்ப அடுப்பை பத்த வெச்சு அதுல நாம சுத்தமா தேய்ச்சு வெச்சிருக்கற தவாவை வெச்சு அதுல ரெண்டு ஸ்பூன் எண்ணெய விட்டு சூடாக விடணும். டிஷ்யூ பேப்பர் இல்ல துணியின் துணையோடு இந்த சூடான எண்ணெயை தவாவின் ஓரங்கள் வரைக்கும் தேய்க்கணும். பொதுவா அந்த ஓரங்கள் வரை நாம தோசை மாவை கொண்டு போக மாட்டோம். எண்ணெய் தடவினதும் தவாவில் புகை வரும் அளவுக்கு சூடாகட்டும். அடுப்பை அணைச்சிட்டு ஒரு மணிநேரம் அப்படியே விட்டுடணும். அப்புறம் இதே மாதிரி ஒரு மணிநேர கேப்ல ரெண்டு தடவை எண்ணெய் தடவி சூடாக விட்டா நம்ம இரும்பு தோசைக்கல்லு ரெடி. டிஷ்யூ பேப்பர் வெச்சு ஒட்டியிருக்கற எண்ணெயை துடைச்சா அதோட அந்த பிசுக்குகளும் சேர்ந்து வந்திரும். சோப்பு போட்டு தேய்க்க வேணாம். வெந்நீரை கொஞ்சம் ஊத்தி விட்டா போதும்.
இதை செஞ்சேங்க. இப்ப இரும்பு தோசைக்கல்லுதான். தோசை ரொம்ப அருமையா வருது. கண்ணம்மா அவர்களுக்கு நன்றி.
எப்படி மெயிண்டென் செய்வதுன்னும் விளக்கமா குறிப்பு கொடுத்திருக்காங்க.
இதோ அவங்க ப்ளாகுக்கான லிங்க். KANNAMMA COOKS.
ஸ்ரீரங்கம் போயிருந்தப்ப கொஞ்சம் பெரிய இரும்பு வாணலியும் வாங்கியாந்தாச்சு. (என் கிட்ட பூரி பொறிக்க சின்னதுதான் இருந்தது). கத்திரிக்காய், வாழைக்காய் தவிர மிச்ச காய்கறிகள் இரும்பு வாணலில தான் செய்யறேன். மண் பானையும், வாணலியும் கூட வாங்கி அதுல சாம்பார், குழம்பு, கூட்டு செய்யறேன். ரசத்துக்கு ஈயச்சொம்புன்னு ஒரு கலக்கல் மாற்றம். கிச்சனில். MODERN AND ETHNIC KITCHEN :)

8 comments:
அருமை.
ஈயச்செம்பு என்னிடம் கிடையாது. தோசைகல் மண்சட்டி இருக்கிறது.நொன்ஸ்ரிக் பாத்திரங்கள் உபயோகிப்பதில்லை.
வாங்க மாதேவி,
எண்ணெய் குறைவா உபயோகிக்கலாம்னு வாங்கறோம். இல்லை உபயோகிக்க எளிதுன்னு. ஆனா நம்ம பெரியவங்க உபயோகிச்ச பாத்திரம்தான் பெஸ்ட்.
வருகைக்கு நன்றி
அருமையான இணைப்பு... ரொம்ப நன்றிங்க....
ஈயச் செம்பில் கவனமாக இருக்கணும் ஆனால் ரசம் ருசியாக இருக்கும்
நல்லதொரு டிப்....
ஸ்ரீரங்கம் தோசைக்கல் மிகவும் பிரபலமானதாயிற்றே! :)
வாங்க தனபாலன்,
ஆமா ரொம்பவே சுவையான குறிப்புக்கள் கூட இருக்கு.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அபயா அருணா,
ஏதோ ஒரு படத்துல முத்துராமன் தண்ணியில்லாம அடுப்புல ஈயச்சொம்பை வெச்சு சொம்பே உருகி போயிருக்கும். :)
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சகோ,
எங்க பாட்டி அங்கேதான் வாங்குவாங்க.
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment