Friday, February 17, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா??!!!....பாகம் 18

குமுதம் இதழில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சொன்னதாக ஒரு முறை படிச்சேன். அதுதான் இப்போதைய நிலை.

" இந்தியாவில் வந்து குவியும் பன்னாட்டு  நிறுவனங்கள் இன்று நம் இளைய சமுதாயத்தின் மீது நேர அவதியைதான் முதலின் திணிக்கின்றன.

நிமிடத் துல்லியமாக அலுவலகத்தின் உள்ளே நுழை! ஒரு நிமிடத்தைக் வீணாக்காமல் உழை. ஆனால் நேரம் பார்க்காமல் பாடுபட்டு. வீட்டிற்கு பூவதில் அவதி காட்டாதே! வீட்டிற்கு சாவகாசமாகப் போகலாம். டார்கெட் உண்டு உனக்கு! அதை முடிக்காமல் போகாதே! முடிக்காமல் போகப் பார்க்கிறாயா? ஒரேயடியாகப் போய்விடு என்கின்ற பல்லவியைத்தான் நாகரிகமாக இளைய தலைமுறையின் தலைக்குள் பதிக்கின்றன.இதற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டால் இனி எந்த வேலையிலும் தாக்குப்படிப்பது கடினம் ! இவை அவரின் கருத்துக்கள்.

9 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினால்," என்ன இன்றைக்கு சீக்கிரம் கிளம்புகிறாய் ?"என்று கேள்வி கேட்கு உயர் அதிகாரி, மனச்சோர்வு , மனஅழுத்தம், மனஉளைச்சல், நேரம் காலம் பார்க்காமல் அலுவலகமே கதி என்று கிடப்பதால் வீட்டிலும் அமைதி இல்லை, அலுவலக வேலையின் நெருக்கடியினால் வரும் அலுப்பு, இவை நம்மை இட்டுச் செல்லும் இடம் இதய மருத்துவமனை தான்.
அவர்களுக்கு நல்ல வருமானம் நம்மால்.

இது தூக்கத்தைப் பத்திய பதிவு. டயர்டா இருக்கு! எப்படா வீட்டுக்கு போய் தூங்குவோம்னு சிலருக்கு இருக்கும் (மத்த சிலர் ஆபீசில, ஸ்கூல்ல தூங்கிடுவாங்கல்ல :) )

மெல்ல மெல்ல இருட்டத் துவங்கியதுமே நமக்கு தூங்கும் நேரத்திற்கான எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நேரம் நாம ஓய்வு எடுக்கறோம். நல்ல தூக்கம் கிடைக்கும் பொழுதுதான் நம் உடல் உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுது. தூங்கி எந்திரிச்சா தலைவலி, உடல்வலி எல்லாம் ஓடிப்போயிட காரணம் நாம அசந்து தூங்கும் நேரத்தில் தான் உடலில்  மெயிண்டெனஸ் வொர்க் நடக்கும். ஏதும் ரிப்பேர் இருந்தா அது சரியாகும். அதனால் தான் நாம தூங்கி ஏந்திரிச்சதும் ஃப்ரெஷ்ஷா இருப்போம். இதெல்லாம் நமக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா அதென்னவோ படுக்கையில போய் படுத்தா கொஞ்ச நேரம் தூங்குவோம். அப்புறம் பாதி ராத்திரிக்கு கொட்ட கொட்ட முழிச்சிக்கிடுவோம்.இதைப்படிக்கும் போது ஆஹா எனக்கும் இப்படித்தானே நடக்குதுன்னு தோணுதா, வாங்க ஃப்ரெண்ட் வாங்க, இது உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல
தூக்கமில்லாம அவதிப்படும் எத்தனையோ இந்தியர்கள் நமக்கு துணையா இருக்காங்க.  

வயசானவங்க தான் தூக்கமில்லாம அவதிப்படுவாங்க. ஆனா இப்ப இள வயதினரும் தூக்கத்தை தொலைச்சிட்டுத்தான் இருக்காங்க. உடம்பு அசதியா இருந்தா தூங்கிடுவாங்கன்னு சொல்வாங்க. ஆனா அந்த அசதி மறைய வரை தூங்கிட்டு அப்புறம் முழிச்சிடுவாங்க சிலர். கண்ணைத்திறந்து பார்த்தா பாதி ராத்திரி மணி 1 அல்லது 2 அதுவும் இல்லாட்டி விடியாக்காலை மணி 3 ஆ இருக்கும். தூங்க முயற்சி முடியாம போய் சிலர் எந்திரிச்சி ஆபிஸ் வேலை பாத்துக்கிட்டு இருப்பாங்க. இல்லாட்டி டீவி, கம்ப்யூட்டர்னு இருப்பாங்க.

இப்படி தூக்கமில்லாம இருப்பது பல்வேறு காரணத்தால இருக்கலாம், ஏதேனும் நோயின் அறிகுறியா கூட இருக்கலாம்.
தூக்கமில்லாம இருக்கும் இந்தக்குறை 3 வாரம் முதல் நாலு வாரம் வரைக்கூட போகும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனா இதனால மறதி, மனச்சோர்வு, எரிச்சல், இவைகளோட இதய நோய்களும் தாக்கும்னு சொல்றாங்க. நல்ல தூக்கம் ரொம்ப அவசியமான ஒரு விசயம்.

பிரச்சனைன்னா அதுக்கு தீர்வும் இருக்கும்ல!!! மருத்துவர்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.

1. மாலை 6 மணிக்கு மேல காபி குடிக்க கூடாது. காபியில் இருக்கும் கஃபைன் தூக்கத்தை விரட்டி அலர்டா வெச்சிடும். அப்ப இரவு தூங்க முடியாது.

2. மாலை  உடற்பயிற்சி ஏதாவது செய்வது நல்லது. நடை கூட போதும்.

3.  ராத்திரி எத்தனை மணியானாலும் டீவி சீரியல், கணினி, மொபைல்னு இருக்கறவங்களா நீங்க உங்களுக்குத்தான் இந்த பாயிண்ட்.

ஸ்மார்ட் ஃபோன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், டீவி இவைகளிலிருந்து வெளிவரும்  அதிக  வெளிச்சம் கொண்ட திரைகளைப் பார்ப்பது இரவு நேரத்தில் சுரக்கும்  melatonin  என்கிற ஹார்மோன் சுரைப்பதை அமுக்கிடுது.
இந்த ஹார்மோன் தான் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்க காரணம்.

அதனால் தான் பெட்ரூம்களில் டீவி, கம்ப்யூட்டர் வைத்துக்கொள்ள வேண்டாம்னு சொல்றாங்க.  அதனால நல்ல தூக்கம் வேணும்னா தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி டீவி, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ஃபோன் எல்லாத்துக்கும் “ குட் நைட்” சொல்லி ஆஃப் செஞ்சு வெச்சிடணும்.

4. சின்னக் குழந்தைகள் தூங்கணும்னா ரூம் லைட்டை ஆஃப் செஞ்சிட்டு படுக்க வைப்போமே, அது மாதிரி தேவையில்லாத விளக்குகளை ஆஃப் செஞ்சு வெச்சிட்டு குறைவான வெளிச்சம் அதுவும் தேவைப்படும் இடங்களுக்கு மட்டுமே இருக்கும் படி செஞ்சா தூங்க முடியும்னு சொல்றாங்க.

அதாவது இரவா, பகலான்னு புரியாம மண்டை குழம்பி போகும் அளவுக்கு வெளிச்சமா இரவில் இருந்தா தூக்கம் வராது.

5. தூங்குவதற்கு முன் சிலருக்கு குளிக்க பிடிக்கும். ஆனா ஜலக்ரீடை செய்யாம, ஜஸ்ட் க்விக் ஷவர் எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ரொம்ப சூடான தண்ணில குளிச்சா உடம்பும் சூடாகும். அத்தோட போய் தூங்கினா வேர்த்து விறுவிறுத்து போகும்.

6. தூங்கப்போகும் முன் இடம் சூடான பால் குடிக்கலாம்.

7. ரொம்ப முக்கியமான விஷயம் தூங்கும் நேரம். நம்ம உடம்பில் BIOLOGICAL CLOCK   இருக்கு.  ( An innate mechanism that controls the physiological activities of an organism that change on a regular cycle.) நம்ம உடம்புகளில் இருக்கும் செல்கள் இதை வெச்சுத்தான் நேரத்தை உணர்வது.  இந்த கடிகாரம் சூரிய ஒளி மற்றும் தட்பவெட்பத்தை வைத்து இயங்குகிறது.  அதிக வெளிச்சம், அதிக இருட்டு இரண்டும் இதன் இயக்கத்தை மாற்றிப்போடும்.
8. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கப்போய்விடுவது நல்லது . அதற்கு முன் தூக்க நேரத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வதை வழக்கமா வெச்சுக்கணும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. குறைந்த பட்சம் 7 மணிநேர தூக்கம் அவசியம் என்பதால அதுக்கு தகுந்தவாறு நாம்  இரவு தூங்கப்போகும் நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு டீவி, கம்ப்யூட்டர் எல்லாவற்றிலிருந்தும் விலகி, இனிமையான பாடல்கள் கேட்கலாம், புத்தகம் படிக்கலாம்.

பின் இயல்பா தூக்கம் வரும் என்றும் இதனால் மதியம் தூங்க தேவையிருக்காது என்றும் ஒரு வாரம் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்க முடியும் என்றும் சொல்றாங்க. ஆனந்தமா தூங்கி ஆரோக்யமா வாழ்வோம்.
4 comments:

Anuradha Premkumar said...

அருமையான பகிர்வுகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

யோசனைகள் மிகவும் பயன் தரக்கூடியவை...

Dr B Jambulingam said...

தூக்கத்தின் முக்கியத்துவத்தினை நாம் மறந்துவிட்டோம் என்பது உண்மையே.

புதுகைத் தென்றல் said...

நன்றி அனுராதா

நன்றி தனபாலன்,

நன்றி ஐயா