மாண்டிசரி உபகரணங்களிலேயே இந்த உபகரணம் ரொம்ப முக்கியமானதும் புனிதமானதும்னு சொல்வாங்க. அவ்வளவு சிறப்பு மிக்க அந்த உபகரணத்தின் பெயர் colour spool.
ப்ளவுஸ் மேட்சிங் கடையில இருக்க பல கலர் ஷேட்கள் மாதிரி இருக்கும். Dark கலர்லேர்ந்து லைட் கலர்வரைக்கும் இருக்கும், இதை அந்த மாதிரி ஒரே கலர்ல குழந்தைங்க பார்த்து கரெக்டா வைக்கணும்.
இதனால என்ன நன்மை. மாண்டிசரி உபகரணங்கள் எல்லாம் தொட்டு பார்த்து உணரும் வகையிலோ, இல்லை கண்ணுக்கும் கைக்கும் தொடர்பு ஏற்படுத்த கூடிய வகையிலும் இருக்கும். இது தான் அந்த உபகரணங்களில் சிறப்பு. தொட்டு உணராத எதுவும், கைகளுக்கும் கண்களுக்கும் தொடர்பு ஏற்படாத எதுவும் மனசுல பதியாது.
இந்த உபகரணத்தை புனிதமானதுன்னு சொல்லும் அளவுக்கு என்ன சிறப்பு. நிறக்குருடு ஏற்பட்டிருந்தா அதை இளம் வயதிலேயே கண்டு கொள்ள உதவுவது இந்த உபகரணத்தின் சிறப்பு. இதை அறிய உதவுவதால இதற்கு அவ்வளவு சிறப்பு. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கபட்டா அழகா அதற்கு மருத்துவம் பார்க்கலாம்.
சரி இந்த உபகரணத்திற்கு மாற்றாக நாம என்ன செய்யலாம்?
1. ஒரே ஷேட்ல நூல்கண்டுகள் வாங்கி அதை ஒரு சின்ன அட்டையில் சுற்றி வைத்து அதை டார்க்கிலிருந்து லைட்டிற்கு எப்படி அடுக்குவதுன்னு சொல்லி கொடுக்கலாம்.
2. ரெண்டு மூணு கலர்ல பல பொருட்கள் சேகரிச்சு வெச்சுக்கோங்க. அதை குழந்தைக்கு கொடுத்து அவர்களை ஒரே நிற பொருட்களை கலெக்ட் செய்ய வைக்கலாம். இந்த நிறம் இதுன்னு சொல்லிகிட்டே செய்யலாம்.
இதை ஒரு விளையாட்டு போல செய்ய வைக்கலாம். அவங்களும் விரும்பி செய்வாங்க. நிறங்களோடு இருப்பது மன அமைதிக்கும் நல்லது. 3 to 4 வயதுக்குழந்தைகளை இதில் ஈடுபடுத்தலாம்.
5 comments:
வணக்கம்
நிறங்கள் என்பது பிள்ளைகளின் மனதை கவரும் தாங்கள் சொன்னது போல வித்தியாசமான விளையாட்டு. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல தகவல்கள்...
பயிற்றுவிப்பில் உளவியலும் உள்ளது என்று நினைக்கிறேன்.
usefull informations madam.Kodi asaindhadhum finish pannitu montessori start pannirukeenga.But Seethava apdiye vittuteengale?
நல்ல பகிர்வு அம்மா...
Post a Comment