Tuesday, August 22, 2017

சென்னையும் நானும்!!!!!!!

இன்னைக்கு சென்னை மாநகரத்துக்கு ஹேப்பி பர்த்டே!!! முதல்ல என் வாழ்த்தை சொல்லிக்கறேன். புதுகையில் 19 வருடங்கள் இருந்துட்டு லாங்க் ஜம்பா மும்பை போனேன். அந்த ஊரும் மக்களும் ரொம்ப பிடிச்சிருந்தது. என் வாழ்க்கையில் நான் கத்துகிட்ட பல விஷயங்கள் மும்பை காலத்துலதான். கல்யாணமாகி ஹைதை!! அது ஒரு தனி சுகம். தென் இந்தியான்னா தென் இந்தியா, வட இந்தியான்னா வட இந்தியா அந்த ரேஞ்ச் ஹைதை. ( ஹைதை - ஹைதராபாத்).

1998 ஹைதையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். அன்று ரயில் நெக்லஸ் ரோட் ஷ்டேஷன் வந்தப்ப கண்களில் நீர். இரவு விஜயவாடாவில் சென்னை-ஹைதை- ஹைதை-சென்னை ரயில்கள் ரெண்டும் பக்கத்து பக்கத்து ப்ளாட்ஃபார்ம்ல நின்னது. இறங்கி போய் ஹைதை ரயிலில் ஏறிடலாமான்னு இருந்தது இப்பவும் ஞாபகம் இருக்கு.

98 சென்னை வாசம் ஆரம்பம். 4 வருடங்கள். மனதுல நிற்பது கஷ்டங்கள் மட்டுமே. உடல்நிலை பிரச்சனை ஆரம்பம் 2000லேர்ந்து. DESAMANTE MATTI KAADHU DESAMANTE MANISHALU என்று தெலுங்கில் ஒரு பாடல் வரி இருக்கு. தேசமெண்பது மண் அல்ல அதில் வாழும் மனிதர்கள். ஹைதை, மும்பை மாதிரி வேண்டாம் என் புதுகை போலவாவது இருந்திருந்தால் மனம் ஒன்றியிருக்கும் என் நினைக்கிறேன். 2002 கிளம்பியாச்சு சென்னையைவிட்டு. கிளம்பினால் போதுமென்று ஆகிவிட்டது.

2015 திரும்பவும் சென்னை வாசம் ஆரம்பித்திருக்கிறது. இப்போது வரை ரொம்ப லயிக்கவும் இல்லை, ரொம்ப கஷ்டமும் இல்லை. 50:50யாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஹைதையிலேயே இருந்திருக்கலாம் எனும் நினைப்பு வருவது தவிர்க்க முடியவில்லை. இந்த முறை உடல்நலம் பேண ஒரு சில வாய்ப்புக்கள் கிடைத்திருக்கு. (தொலைத்த இடத்தில் தேடுவது போல :)) )

நான் சென்னையை வெறுக்கவில்லை. என்னால் ஒன்ற முடியவில்லை அதுதான் உண்மை. ஹைதையில் இருக்கும் காலத்தில் நட்புக்கள் சிலர் சென்னை போனால் நல்லா பர்ச்சேஸ் செய்யலாம் என்று சொல்வார்கள். வீட்டில் விஷேஷமென்றால் சென்னை கிளம்பிவிடுவார்கள். காஞ்சிபுரம் போய் வாங்குவாங்கன்னு நினைச்சா சென்னையில் தான் வாங்குவாங்க. சமீபத்தில் கூட ஒரு உறவினர் இங்கே எங்க நீங்க பர்ச்சேஸ் செய்வீங்கன்னு கேட்க நாம இங்க புடவையெல்லாம் வாங்கவே இல்லையேன்னு யோசனை வந்தது.

ஜூன் மாதம் ஹைதை பயணத்தின் போது சில புடவைகள் வாங்கி வந்தேன். நான் பட்டு கட்ட மாட்டேன் என்பதால் சிலடிசைனர் புடவைகள் வாங்கினேன். அந்த புடவைக்கு ஃபால் தைக்க கொடுக்க போனபோது டெய்லர் “ இது எங்க வாங்கினீங்கன்னு?” கேட்க ஹைதைன்னு சொன்னேன். இந்த ரேட்ல இந்த மாதிரி புடவைகள் சென்னையில் சாத்தியமில்லை அப்படின்னு சொன்னாங்க.

சென்னை பிடித்தவர்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் இது என் மனநிலை. இங்கு விலைவாசியும் அதிகம். இந்த முறை சென்னைவாசத்தில் என்ன ப்ளஸ்ஸுகள், கானகந்தர்வன் யேசுதாஸ் அவர்களின் கச்சேரியை நேரில் அமர்ந்து ரசித்தது, க்ரோஷா கலையை மேம்படுத்திக்கொண்டேன், உடல்ல என்னதான் பிரச்சனைன்னு புரிஞ்சு அதற்கு தக்க வாழ்க்கைமுறை மாற்றம், மருத்துவம்னு கொஞ்சம் பாசிட்டிவ் ட்ராக்ல கோயிங்.

இன்னும் எத்தனை நாள் சென்னை வாசம்னு தெரியாது!!! இருக்கும் வரை இன்னும் என்னென்ன பாசிட்டிவாக அமைத்துக்கொள்ளலாம்னு பார்க்கணும்.

சென்னை வாசிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... ஒரு காலத்தில் அடியேனும் சென்னைவாசிதான்...(!)

ஹுஸைனம்மா said...

/சென்னையை வெறுக்கவில்லை. என்னால் ஒன்ற முடியவில்லை அதுதான் உண்மை//

எனக்கும் இதுதான்... அதென்னவோ... சென்னைக்கு எப்ப வந்தாலும், எப்படா கெளம்புவோம்னு இருக்கும்.... இத்தனைக்கும் அங்க நிறைய நட்புகள், சொந்தங்கள் இருக்காங்கதான். இருந்தாலும்..... :-)

ராஜி said...

சென்னை வாழ்க்கைக்கு ஏங்கி எட்டாக்கனியாவே இன்றும்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Honest words, grt. Living in different places is not easy, especially with kids its a challenge. Dont know much abt chennai, so cant confer that part :)

Geetha Sambasivam said...

என்னாலும் சென்னையோடு ஒன்ற முடியவில்லை. வீடே அங்கே கட்ட வேணாம்னு தான் சொன்னேன். நடக்கலை! ஒரு வழியா என்னோட விடா முயற்சியாலும் எங்க பையரோட ஒரு ஆலோசனையாலும் இங்கே வந்தோம்.

வெங்கட் நாகராஜ் said...

ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் சென்னையில் இருந்ததில்லை. சென்னை மீது பெரிதாக பிடிப்பும் இல்லை! தலைநகரிலிருந்து வரும்போது அங்கே இறங்கி திருச்சி செல்வதோடு சரி.

மாதேவி said...

வாழ்த்துகள்.

நாங்களும் பல வருடங்களுக்கு முன்
கே.கே.நகர், சாலிகிராமத்தில் சில காலம்இருந்து இருக்கிறோம்.

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ஓஹோ அப்படியா?!!!

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நாமதான் சேம் ப்ளட்டாச்சே. வேர்க்க ஆரம்பிச்சா தலைக்கு குளிச்சாப்ல சொத சொதன்னு ஆகுது. என்ன டிசைனோ???

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ராஜி,

ஏங்கினீங்களா!!!! அது சரி.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க புவனா,

:)) சென்னையின் ஆரம்பிச்சாலே நான் புலம்புவேன்னு எல்லாருக்கும் தெரியும். சென்னை நமக்கு புகுந்த வீட்டு உறவு வேற :)))))) அயித்தான் மிஸ்டர். ட்ரிப்ளிகேனாச்சே,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கீதா சாம்பசிவம்,

அதென்னவோ இவங்களும் இங்க ஒரு வீடு வாங்கிடணும்னு சொல்லும்போதெல்லாம் தடாதான். ஹைதையில் இருக்கும் சொந்த வீடு போதும்னு சொல்லிடுவேன். ம்ம்ம்ம்முடியலை. இப்ப அவருக்குமே இங்க ஒத்துக்காம ஆயிருச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

நீங்க எனக்கு சரியான சகோதான். எனக்கும் சென்னை வந்து செல்லகூடிய இடமாக தான் பிடிக்கும். இப்பவும் புதுகை, மதுரை ட்ரிப் காரில் போய்விட்டு ஊருக்குள் வந்ததும் ஐயோ நாம ஹைதைக்கு போகப்போறதில்லைலன்னு தோணும்போது கஷ்டமா இருக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மாதேவி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தனிமரம் said...

ஏதோ இந்தியாவுக்கு ஆன்மீக யாத்திரை வரும் போது சென்னையை கொஞ்சம் ரசிப்பது மட்டுமே!

கோமதி அரசு said...

எனக்கும் சென்னை ஏனோ பிடிப்பது இல்லை.
பிள்ளைகள் படிப்புக்காக இங்கு வந்தீர்களா?

வேர்க்க ஆரம்பிச்சா தலைக்கு குளிச்சாப்ல சொத சொதன்னு ஆகுது. என்ன டிசைனோ???//

அப்படித்தான் ஆகும் எனக்கும்.

எங்கு இருந்தாலும் அந்த ஊரை விரும்பி இருக்கும் வரை இருப்போம், அதுதான் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

pudugaithendral said...

வாங்க தனிமரம்,

எப்பவாவது வந்து போனா ஓகேவாதான் இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அம்மா,

கணவருக்கு மாற்றல் பிள்ளைகள் படிப்பு எல்லாம் சேர்த்து இழுத்துகிட்டு வந்திருச்சு. :) இருக்கும் வரைக்கும் ஓட்ட வேண்டியது தான்

வருகைக்கு மிக்க நன்றி