எனக்கு சைக்கிளில் சுற்றுவது ரொம்ப பிடிக்கும். கல்யாணம் குழந்தைகள்னு ஆனதுக்கு அப்புறம் சைக்கிளிங் எல்லாம் முடியலை. 2017ல என் பிறந்த நாளுக்கு சைக்கிள் வேணும்னு கேட்டு என் சின்ன வயசு கனவான லேடிபேர் வாங்கிகிட்டேன். ( +2 படிக்கும்போது அம்மா ஹெர்குலீஸ் வாங்கி கொடுத்திருந்தாங்க). என் கால்வலியால சைக்கிள் ஓட்ட பயம். போதாகுறைக்கு வீசிங் வேற.
2018ல ஒரு நாள் மகன்கிட்ட கேட்டு ஒரு நாள் என்னுடன் சைக்கிளிங் வர சொன்னேன். எங்க வீதி கடைசிவரை கூட போகியிருக்க மாட்டேன் மூச்சு விட முடியலை. நிறுத்தி நிறுத்திதான் ஓட்டினேன். மகனும் பொறுமையா என் கூட நின்னு நின்னு வந்தாப்ல. ஒரு வழியா பீச்வரைக்கும் ஓட்டி வீடு வந்து சேர்ந்தேன். கால்வலி வந்தாலும் மனதுக்கு சந்தோஷமா இருந்துச்சு.
அப்புறம் மெல்ல மெல்ல வீட்டுக்கு பக்கத்துலயே சுத்தி சுத்தி ஓட்டினேன். ஆனா மனது பீச்சுக்கு போவதை பத்தியே இருந்துச்சு. ரோட்ல ட்ராபிக் நினைச்சு பார்த்தா பயமா இருந்தது. கார், பைக்ல போறவங்க சர் சர்ர்னு போய் பயமுறுத்தறாங்க. ரோடு மத்தவங்களுக்கும் தான்னு நினைப்பே கிடையாது. அதுக்காக அப்படியே இருந்துட முடியுமா? :))
மெல்ல தைரியம் செஞ்சு கொஞ்சம் கொஞ்சம் தூரம் கூட்டி மெயின் ரோட்ல வண்டி ஓட்டினேன். டிராபிக் பயம் குறையணும்னு இன்னும் அதிக தூரம் போக ஆரம்பிச்சேன். அப்படியே பெஸ்ஸில உட்கார்ந்திருந்த ஒரு நாள் தான் நான் இப்ப வீட்டுல சைக்கிள் எடுத்தா எங்க போகணுமோ அங்கேதான் போய் வண்டியை நிறுத்துவது ஞாபகம் வந்தது. ஹை சூப்பர்னு எனக்கு நானே பாராட்டிகிட்டு தினமும் சைக்கிளிங் விடாம செய்யறேன்.
நடப்பதை விட சைக்கிளிங் பிடிச்சிருக்கு. சைக்கிள் ஓட்டும்போது அந்த பழைய கலாவா ஆகிடறாப்ல ஒரு ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா :)) கடைக்கு போகணும்னாலும் சைக்கிள்ல போயிடறேன். இந்த சைக்கிள் ஓட்டுவது எனக்கு இந்த வருஷம் 5கிமீ ஓடுற அளவுக்கு உதவியது. 23 கிமீ ஒரே நாள்ல சைக்கிள் ஓட்டியது இந்த வருஷத்து சாதனை.
இப்ப கால்வலி போயிந்தி. இட்ஸ் கான். விடாமல் தொடரும் கைவலியையும் 2019 துரத்தி ஆனந்தமா இருக்கணும் அதான் டார்கெட். இன்னைக்கு ஒரு 10கிமீ சைக்கிள் ஓட்டினேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

6 comments:
றெக்க கட்டி பறக்குதய்யா கலாவோட சைக்கிளு
நன்றி :) மீ த ஃபர்ஸ்டாக வந்தது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Super.good job kala.very happy to read and got inspired a lot 👌👍💐-Srividya, B-19 Lotus manor.
நன்றி அவர்கள் உண்மைகள்.
ஸ்ரீவித்யா என் வலைப்பூக்கு முதல் தடவை வந்திருக்கீங்க. பதிவு பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம்.
Post a Comment