ஒரு ராஜா இருந்தாராம். அவர் நகர் வலம் வந்த ஒரு சமயத்துல ஒருவர் ரொம்ப கஷ்ட ஜீவனத்தில் இருந்ததை பார்த்தாராம்.
அவர் நல்ல மனிதர்னு தெரிஞ்சு அவர் கஷ்டபடக்கூடாதுன்னு சந்தன மரங்கள் அடங்கிய ஒரு பெரிய காட்டை பரிசாக கொடுத்தாராம்.
காட்டை நமக்கு எதுக்கு ராஜா கொடுத்தார்னு யோசிச்சிகிட்டு உட்கார்ந்திருந்தாப்லயாம் அந்த மனுஷன். மரத்தால எனக்கென்ன பயன்னு யோசிச்சு ஒரு கோடாரியால மரங்களை வெட்ட ஆரம்பிச்சாப்ல. நடுவுல கோடாரியோட கைப்பிடி உடைய அந்த மரத்துல வெட்டினதுல ஒரு துண்டு எடுத்து அதை கைப்பிடியா வெச்சு செட் செஞ்சுகிட்டு மத்த மரங்களைல்லாம் வெட்டிபோட்டுட்டு நல்லா வெச்சு எரிச்சு அதுல வந்த கரியை வித்து காசாக்கிட்டு வந்த வரை லாபம்னு இருந்தாப்லயாம்.
சந்தனக்காட்டை கொடுத்தோமே அந்த மனிதர் இப்ப நல்ல நிலமையில இருப்பார் போய் பார்த்து வருவோம்னு அந்த ராஜா வந்து பார்த்தா எரிஞ்சு போன காட்டைதான் பார்க்க முடிஞ்சது. என்னய்யா செஞ்சீங்க காட்டைன்னு கேட்க என்ன செய்வேன் வெட்டி எரிச்சு கரியாக்கி கரியை வித்து கைல கொஞ்சம் காசு வெச்சிருக்கேன்னு சொன்னவரை பார்த்து தலை சுத்ததாத குறை ராஜாவுக்கு. மரத்தின் துண்டு ஏதாவது மிச்சம் இருக்கான்னு கேட்க, ஆகா ஒரு துண்டு கோடாரி கைப்பிடியா வெச்சிருக்கேன்னு காட்ட, இப்ப இந்த மரத்துண்டை கடைக்கு எடுத்து போய் என்ன விலை போகும்னு கேட்டுவரச்சொன்னார்.
மன்னருக்கு ஏதோ மர கழண்டிருக்கு! ஆனா அதை நாம சொல்லிட முடியுமான்னு நினைச்சுகிட்டு போய் அந்த துண்டை காட்டி விலை கேட்டா அவங்க சொன்ன விலையை கேட்டு இப்ப தலை சுத்தினது இந்த மனுஷருக்கு.
தான் எரிச்சு கரியாக்கினது எவ்வளவு பெரிய பொக்கிஷம்னு தெரிஞ்சு தன் கையில இருந்த தனது அழகான எதிர்காலத்தை கரித்துண்டாக்கிட்டோமேன்னு வருத்தப்பட்டார். என்ன பலன்?
இப்படித்தான் நம்ம வாழ்க்கையும். ப்ரபஞ்ச சக்தி நீ கேளு நான் தர்றேன்னு சொல்லிகிட்டு நம் கட்டளைக்காக காத்திருக்கு. நாம எப்பவுமே கற்பக விருட்சத்துக்கு கீழ தான் இருக்கும். ஆனா அதை தெரிஞ்சுக்காம நெகட்டிவ் எண்ணங்கள், பேச்சுக்கள், இருப்பதை பத்தி சந்தோஷபடாம இருப்பதுன்னு வரவேண்டிய வசந்தத்தை வாசலோட திருப்பி அனுப்பிடறோம்.
தலையெழுத்து மாதிரி தான் நடக்கும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. நாம எதையும் மாத்திட முடியாது இது நம்ம எண்ணம். தலையெழுத்து என்னன்னா உன் விருப்பபடியே ஆகட்டும் என்பதுதான். இதை ரொம்ப தாமதமா தான் நானும் புரிஞ்சுகிட்டேன்.
எப்படி அமைச்சுக்கணும் அதையும் சொல்லி கொடுக்க ஒருத்தரை அனுப்பினது ப்ரபஞ்ச சக்தி. law of attraction படி நாம தேடும் விஷயம் நம்மை தேடிக்கிட்டு இருக்கு. இது புதுசா இருக்குல்ல!!!! புத்தாண்டில் இனி எல்லாமே புதுசு தான் :))

No comments:
Post a Comment