அந்த சின்ன ஹோட்டலுக்குள் யானை உள்ளே நுழையவுமே ஜெர்க்கானோம். அது பாராத்தான்னு தெரிஞ்சதும் இன்னும் டென்ஷன். அடுத்த நாள் காலை 9 மணிக்கு ஏர்போர்ட் போகணும். காலை முதல் பயணம் ஊர் சுற்றல்னு அலைச்சல். படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தா ஹோட்டலில் கல்யாணம். ஏதோ தனியா ஹால்ல இருந்தா கூட தெரியாது.
இந்த ஓபன் ஏரியாவுல கல்யாணம். இடது புறம் இருக்கும் அந்த ஜன்னல்களில் இரண்டு தான் எங்க ரூம். வட இந்திய திருமணங்கள் இரவில் தான். ரிஷப்ஷன்ல கேட்டால் மேனேஜர் ஹோட்டலிலேயே இல்லை. அதிரும் சத்தங்கள். இதுல எங்க தூங்க!!!!
ஏதாவது செய்ங்க. எங்களுக்கு வெளிலயாவது ஹோட்டல் மாத்தி கொடுங்கன்னு கேட்க அது கஷ்டம்னு சொல்லி ஹோட்டல் மேனேஜருக்கு போன் செஞ்சு கொடுத்தாங்க. ரூம் அப்கிரேட் செய்ய சொல்றேன். அங்க சத்தம் கம்மியா இருக்கும்னு சொன்னாங்க. அதே காம்பவுண்டுகுள்ள எங்க சத்தம் குறைய. ராத்திரி 11 மணிக்கு மேல தாண்டிடிச்சு. இந்த ரும் அந்த பெரிய கேட் கிட்ட இருந்தது. அந்த கதவுக்கு வெளியே பெரிய எதையோ ஒண்ணை வெச்சு 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை ஊதிகிட்டு இருந்தாங்க. அந்த சத்தம் கொஞ்ச நேரம்தான்னு வேற சமாளிப்பு வேற.
அரண்மனையை ஹோட்டல் ஆக்கியிருக்காங்களே அதை அனுபவிக்கலாம்னு வந்தா அந்த சின்ன ஹோட்டல்ல கல்யாணத்துக்கு புக்கிங் செய்திருக்காங்கன்னா மத்த கஷ்டமர்களுக்கு கஷ்டமா இருக்கும்னு மேனேஜ்மெண்டுக்கு தெரியாதா?? அதுதான் போகுதுன்னா அடுத்த நாள் நாங்க காலை 9 மணிக்கு ஏர்போர்ட் கிளம்பணும்னு சொல்லியிருந்தோம். அதனால காலை உணவையும் சீக்கிரம் கொடுக்க சொல்லி செக்கின் செஞ்சப்பவே சொன்னதை இராத்திரியும் கன்ப்ஃர்ம் செஞ்சாச்சு. சரி சரின்னு மண்டை ஆட்டினாங்க.
காலையில் எழுந்தா பாத்ரூமில் தண்ணீர் வரலை. அதுக்கு போராடி எதுர் போர்ஷன்ல எங்கயோ போய் குளிச்சு ரெடியாகி வந்ததோம். ப்ரெக்ஃபாஸ்ட் தயாராகலை. மணி 8.30. கேட்டா ராத்திரி மேரேஜ் பார்ட்டில பிசியா இருந்ததால அவங்களுக்கு தயாராகும்பொழூது 10 மணிக்கு மேலதான் காலை உணவுன்னு சொல்ல. ஆணியே வேண்டாம்னு செக்கவுட் செஞ்சு வந்திட்டோம்.
மொஹாலில ஏர்போர்ட். அங்க லவுஞ்சும் இல்லை. அதனால வெளில கிடைச்சதை சாப்பிட்டு வெயிட் செஞ்சிட்டு இருக்கும்பொழுது ஹோட்டல் மேனேஜர் போன் செஞ்சு தனது வருத்தங்களை தெரிவிச்சிகிட்டார். வருத்தத்தை வெச்சு மதியம் லஞ்சா சாப்பிட போறோம்னு காட்டா கத்திட்டு ஃப்ளைட் ஏறினோம்.
ஜூலை மாதம் ஹைதையிலும் இப்படியே ஒரு அனுபவம். கோர்ஸ் அட்டெண்ட் செய்யபோயிருந்தேன். அந்த ஹோட்டலில் மேரேஜ் பார்ட்டி கிட்டத்தட்ட 40 ரூம்கள் புக் செஞ்சிருக்காங்க. நைட்டெல்லாம் ஏதோ பாடிகிட்டு இருந்தாங்க. கேட்டா கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க நடத்தும் பூஜையாம். 30 லேடீஸ் பாடிக்கிட்டு இருந்தாங்க.
கல்யாண பார்ட்டி ரூம்களுக்கு நடுவுல எங்க ரூம் வேற கொடுத்து தொலைச்சிருந்தாங்க. பாராத்துக்கு டான்ஸாட எழுப்ப எங்க கதவையும் பாதி ராத்திரில மேரேஜ் பார்ட்டிக்காரங்க பொற்கை பாண்டியன் கதை மாதிரி தட்டிகிட்டே போனாங்க. கொடுமையான அனுபவங்கள்.
சில சமயம் சில ஹோட்டல்களில் இப்படித்தான் ஆகிடுது. மேரேஜ் பார்ட்டிகளை விடுங்க. குடும்பமா வெகேஷனுக்கு போறவங்களும் தன் வீட்டுல இரவு லேட்டா தூங்குறாப்லயே காரிடார்லயே கத்தி பேசுவது, டீவியை பெருசா வெச்சு பக்கத்து ரூம்காரங்களுக்கு நிம்மதி இல்லாம இருப்பதுன்னு இரூக்காங்க. இன்னைக்கு பேப்பர்ல பொது இடத்துல எப்படி நடந்துக்கணும்னு சின்ன வயசுலேர்ந்தே பழக்கணும்னு ஒருத்தர் எழுதியிருந்ததை படிச்சப்ப நம்மள மாதிரி ரொம்ப அடிவாங்கியிருப்பார் போலன்னு தோணுச்சு. :))

No comments:
Post a Comment