Tuesday, January 01, 2019

பயண அனுபவங்கள்

டீவில சீரியல்கள் பார்க்க மாட்டேன் விரும்பி வார்ப்பது Travel Xp, Ndtv good times இந்த மாதிரியான சானல்கள் தான். பலமுறை அந்தக்கால அரண்மனைகளை இப்போ ஹோட்டல்களாக்கி வெச்சிருப்பதை காட்டுவாங்க. நல்லா இருக்குல்ல நாமும் முடிஞ்சா இந்த மாதிரி இடத்துல தங்கி பார்க்கணும்னு நினைச்சுப்பேன்.

இரண்டு வருஷத்துக்கு முன்ன பஞ்சாப் சண்டிகர் போனப்ப இந்த மாதிரி ஒரு ஹோட்டல் இருப்பதை நெட்டில் பார்த்து சந்தோஷமா புக்கிங் செஞ்சோம்.
பஞ்சாப்பிலிருந்து சாலை மார்கமாக சண்டிகர் வந்தோம். அருமையா இருந்தது அந்த பயணம். சண்டிகரில்hotel Ramgarh heritage  ஹோட்டலில் செக்கின் செய்து லக்கேஜ்களை வைத்துவிட்டு சாப்பிட்டோம். சாப்பாடு அருமையாக இருந்தது.


ரொம்ப சின்ன அரண்மனை தான். அந்த ஹோட்டலில் பலகார்வகைகளும் மியூசியம் மாதிரி வெச்சிருந்தாங்க. ஆஷிஷ்க்குதான் கார்னா ரொம்ப பிடிக்குமே! அதையெல்லாம் பார்த்து சந்தோஷபட்ட அதே நேரம் இன்னும் கொஞ்சம் நல்லா மெயிண்டெயின் செய்யலாம் அப்படின்னு வருத்த பட்டாப்ல.

கணவரின் நண்பர் வீட்டுக்கு போனபோது இரவு அங்கேயே தங்க சொன்னார். அடுத்த நாள் காலையில் சென்னைக்கு பயணம். அதனால ஹோட்டல் போயிடலாம்னு கிளம்பினோம். சண்டிகர் மெயின் சிட்டியிலிருந்து கொஞ்சம் தூரத்துல தான் இந்த ஹோட்டல் இருக்கு.

காலையிலயே பஞ்சாப்பிலிருந்து காரில் பயணம், அப்புறம் நாளெல்லாம் சண்டிகரை சுத்தி பார்த்ததுன்னு செம டயர்டா இருந்தோம். படுத்தா போதும்னு இருந்தது. ஹோட்டல் வாசலில் கார் நுழைந்த நேரம் அந்த ஹோட்டலின் பெரிய்ய கதவு திறந்து அதற்குள் ஒரு யானை உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.......  ஜோதா அக்பர் பாட்டு ஒலிக்க யானையின் மீது மணமகன் உள்ளே நுழைய பாராத் நடப்பது தெரிந்தது...
தொடரும்........


No comments: