Monday, January 07, 2019

கோவா பயண அனுபவங்கள்.

கோவா போகலாம்னு ப்ளான் செஞ்சு ஹோட்டல், ஃப்ளைட் புக்கிங் எல்லாம் ஆனதுக்கப்புறம் புயல் உருவாகியிருக்குன்னு செய்தி. ஏற்கனவே பஞ்சாப் போறதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் பிரச்சனை வந்து வாகா பார்டர் பார்க்காமலேயே வந்தோம். இப்ப கோவா போகணுமா வேணாமான்னு தெரியலை. கோவாவில் இருக்கறவங்களைத்தான் கேட்கணும். ஹோட்டலுக்கு ஃபோன் செஞ்சா இப்ப வரைக்கும் மழை பெஞ்சுகிட்டு தான் இருக்குன்னு சொல்லிட்டு கூடுதல் தகவலா புக்கிங்கை கேன்சல் செஞ்சா பணம் கைக்கு வராதுன்னும் சொன்னாங்க.

ஃப்ளைட்டும் இதே நிலைதான். போய்த்தான் பாப்போம்னு  கிளம்பியாச்சு. சென்னையிலயே அன்னைக்கு மேகம் மூட்டமாத்தான் இருந்தது. கோவாவில் தரை இறங்கினப்ப லேசான தூரலுடன் மேகம். ஆனா பச்சை பசேல்னு அந்த மரங்கள் வானத்துலேர்ந்து பார்க்கறப்ப மனதுக்கு நல்லா இருந்தது.

சாமான்களை எடுத்துகிட்டு வெளிய வந்து Rent a car நபருக்கு போன் செஞ்சோம். அவர்கிட்ட ஏற்கனவே பேசி புக் செஞ்சிருந்தோம்.  ஏர்போர்ட்ல காரை கொடுத்துட்டு போயிடுவாங்க. நாம ஊர் திரும்பும் முன் ஏர்போர்ட்ல வந்து வாங்கிப்பாங்க. ஒரு நாளைக்கு 2500 வாடகை. பெட்ரோல் செலவு நம்மது.


காரை வாங்கிட்டு ஹோட்டலை நோக்கி கிளம்பினோம். வழியில மழை அதிகமாக ஒரு ஹோட்டல்ல நிப்பாட்டி கிடைச்சதை சாப்பிட்டு வந்தோம். நாங்க தங்கியிருந்த  karma royal hotal haathi mahal இது  cavelossim beach கிட்ட இருக்கு. ரொம்ப சத்தம் பார்ட்டின்னு இல்லாம அமைதியான ஏரியா. கார் பார்க்கிங்க் அப்படின்னு தனியா ஏதும் இல்லை ஹோட்டலில். ஆனா பின்னாடி ஓபன் பார்க்கிங். அங்கே வண்டியை வெச்சிட்டு செக்கின் செஞ்சோம்.

ஹோட்டல் நல்லாதான் இருந்தது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரமா கெவலோசிம் பீச் நடக்கற தூரம் தான் போனோம். ரெட் அலர்ட் போட்டிருந்தாங்க. அதனால கடல்ல இறங்க வேணாம்னு மக்களை கேட்டுகிட்டாலும் அதைபத்தி யாரும் கண்டுக்காம இறங்கிட்டிருந்தாங்க. கடல் செம கொந்தளிப்போட இருந்தது. கொஞ்ச நேரம் இருந்துட்டு திரும்ப ரூம் வந்திட்டோம்.

பக்கத்துலயே சின்னதா ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது. அங்க் போய் தண்ணி கேன் வாங்கிட்டு வந்தோம். ஹோட்டல்ல ரேட் ரொம்ப ஜாஸ்தி. ஊர் பச்சை பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது. ஏனோ கோவாவை நான் வேற மாதிரி கற்பனை செஞ்சு வெச்சிருந்தேன். மழைக்காக வீடுகளுக்கே ரெயின் கோட் போட்டமாதிரி பால்கனிகள், முன் வாயில் எல்லாத்துக்கும் ப்ளாஸ்டிக் உறை போட்டு வெச்சிருந்தாங்க. அது புதுமையா இருந்தது.
நாலு நாள் தான் நம்ம ஸ்டே. மழை பாதிப்பு அதிகமா இல்லாம இருக்கட்டும்னு பிரார்த்தனையுடன் உறங்க போனோம்.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

மழை இருந்தால் ஊர் சுற்றக் கஷ்டம் தான். ஆனாலும் மழை தேவை தான் இல்லையா.

சில சமயங்களில் இப்படி சுற்றுலா வந்த இடத்தில் பிரச்சனைகளால் ஒன்றுமே பார்க்க முடியாமல் போவதுண்டு.

கோவாவில் நீங்கள் பார்த்த இடங்களை உங்கள் மூலம் நாங்களும் பார்க்க இருப்பதில் மகிழ்ச்சி.

தொடரட்டும் பதிவுகள்.

pudugaithendral said...

சாதாரண மழைன்னா பரவாயில்லை. இது ரெட் அலர்ட் புயல் அறிவிப்பு மழை :))

KSGOA said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க blog படிக்கிறேன் ..... சுவாரஸ்யமான எழுத்து....