Monday, February 15, 2021

துபாய் பயணம்-2

பெரிதாக குளிர் ஏதும் இருக்காது என நினைத்து ஸ்வெட்டர்கள் கொண்டு செல்லவில்லை. அன்று மாலை நாங்கள் போனது Dubai marina cruise dinner.  எங்கள் டூர் ஆப்பரேட்டர் அனுப்பி வைத்த காரில் மரினாவுக்கு போய் சேர்ந்தோம். அப்பொழுதே குளிர் ஆரம்பித்திருந்திருந்தது. இரண்டடுக்கு போட்டில் பயணம். இரவு உணவு அதிலேயே. மேல் டெக்கில் தான் எங்களூக்கு புக்கிங் செய்திருந்தார்கள். கீழே bulk booking. கீழே குளிராது. மேலே ஒப்பன் டெக் என்பதால் குளிர் நடுக்க ஆரம்பித்தது. உணவை உண்டு கொண்டிருக்கும் பொழுதே லோக்கல் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுஃபி நடனம் போல் ஒன்று மிக நன்றாக இருந்தது. ஆனால் இவையெற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலை இல்லை. காரணம் குளிர். இரவு வெளிச்சத்தில் மெரினா பே பார்க்க மிக அழகாக இருந்தது. ஒரு வழியாக புறப்பட்ட இடத்துக்கு படகு வந்து சேர இறங்கி டிரைவர் சொல்லியிருந்த இடத்துக்கு போனோம்.வண்டியில் ஏறி அமர்ந்து எங்கள் ஹோட்டலை வந்து அடைந்து படுத்ததுதான் தெரியும். துபாயில் வாட்சப் கால் செய்ய முடியாது. அதனால் வாட்சப்பில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து அனுப்பும் முறையைதான் பெரும்பாலோனோர் பின்பற்றுகிறார்கள். அடுத்த நாள் பிக்கப் பற்றி வேற டிரைவர் வாய்ஸ் மெசெஜ் வைத்திருந்தார்.


 



No comments: