Thursday, October 15, 2020

துபாய் பயணம்

பலமுறை பயணத்துக்கு ஆயத்தம் செய்வோம். அங்கே இப்ப வெயில் அதிகம்னு நட்புக்கள் சொல்வாங்க. அடுத்தவாட்டி அடுத்தவாட்டினே தள்ளி போய்க்கிட்டு இருந்துச்சு. மகளுக்கு ஜனவரில பிறந்த நாள். பிள்ளைகள் பிறந்த நாளை ஒட்டி ஏதோ ஒரு லீவு வரும். கூட இரண்டு நாள் லீவு எடுத்து எங்காவது போய் வருவோம். அதுவும் இது மகளின் 20ஆவது பிறந்தநாள். துபாய் போகலாம்னு முடிவானது.

டிசம்பரிலேயே தேவையான புக்கிங்குகள் செய்து வைத்துகொண்டோம். கிளைமேட்டும் பரவாயில்லை மாதிரின்னு சொன்னாங்க. சரி போவோம்னு துபாய் டைரீஸ் மெமரீஸுக்காக ஆசையோட காத்திருந்தோம்.

வெயில் அதிகமாக இருக்குன்னு சொன்னாங்க. சரிதான் புக்கிங் செஞ்சாச்சு என்னசெய்யனு நினைச்சப்ப கிளம்ப 4 நாள் முன்னாடி துபாயில் செம மழை தண்ணீர் தேங்கியிருக்குன்னு தகவல். இது என்னடா எங்க பயணத்துக்கு வந்த சோதனைன்னு நினைச்சோம். வெயில் அதிகமா இருக்குன்னு செயற்கை மழை பொழிய ஏற்பாடு செஞ்சிருக்க, இயற்கை அன்னையையும் கண் தொறந்து பார்த்து மழை பெய்ய இரண்டுமா சேர்ந்து மழை, வெள்ளம் ரேஞ்சுக்கு போயிருச்சு.

ஆனது ஆகட்டும் இந்த முறை நாம துபாய் போவதை தடுக்க முடியாதுன்னு இருந்தோம். அந்த நாளும் வந்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பி துபாய் போய் சேர்ந்தோம்.

tour operator மூலமாக எல்லா ஏற்பாடும் செஞ்சிருந்தோம். ஏர்போர்ட் பிக்கபிற்கு வண்டி வந்திருந்தது.
டிரைவர் ஹோட்டலில் இறக்கிவிட்டு போயாச்சு. செக்கின். அங்க ஆரம்பிச்சது பிரச்சனை.

உங்க பாஸ்போர்ட்டுகளை கொடுங்க செக் பண்ணிக்கணும்னு சொன்ன ரிஷப்ஷனிஷ்ட், பாஸ்போர்ட்டை திருப்பி கேட்டா ஆளுக்கு 30 டாலர் பணத்தை கட்டு அப்பதான் தருவேன்னு சொன்னாப்ல. பயணத்துக்கான முழு தொகையும் முன்னமே கட்டியாச்சு. அப்புறம் இந்த டெபாசிட்டை எதுலயா கழிப்பன்னு கேட்டா நீங்க போகும்போது திரும்ப தருவேன், பணம் கொடுக்காட்டி பாஸ்போர்ட் கிடையாதுன்னுட்டு போயிட்டாப்ல. செம கடுப்பு.

மாலை ரெடியாகி இருக்க சொல்லி லோக்கல் டூர் ஏஜண்ட் வாய்ஸ் மெசெஜ் கொடுத்திருந்தார். (அங்கெல்லாம் வாட்ஸப் கால் இல்லை, அதனால வாய்ஸ் நோட் வாட்சப்ல வந்திரும்). பாஸ்போர்ட் இல்லாம வெளிய எப்படி போகன்னு கேட்டா? அப்ப பணம் கொடுன்னு அடாவடி.

உடனே இந்தியால நம்ம ஏஜண்டுக்கு வாய்ஸ் நோட் போட்டோம். சாமி மொதல்ல ஹோட்டலை மாத்து. எங்க பாஸ்போர்ட்டை வாங்கி கொடு. பயணத்துல டயர்டாகி கிடக்கோம். இப்படி தகறாரு பண்றாப்லயேன்னு கேட்க அவரு அங்கேர்ந்து லோக்கல பேசி, அப்புறம் ஹோட்டல் ஜீ எம் வந்து மன்னிப்பு கேட்டு எங்க ஆள் அப்படி பேசினது தப்புத்தான்னு சொல்லி அப்புறம் ஒரு வழியா பாஸ்போர்ட் கிடைச்சது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ணை கட்டுதே!!!!

ரூமுக்கு போய் ஃப்ரெஷ்ஷப் ஆகி கீழே வந்தோம்.

(தொடரும்)






 

No comments: