Sunday, January 09, 2022

Artangi re

நட்புக்களுக்கு இனிய வணக்கம். புத்தாண்டில் திரும்ப என்னை எழுத வைத்திருப்பது ஒரு இந்தித்திரைப்படம். தனுஷ், சாரா அலிகான், அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் அழகான படம் Artangire.
பீஹாரில் ஒரு பெண் தன் வீட்டைவிட்டு காதலனுடன் ஓடிப்போக ரயில்வே ஷ்டேஷ்னுக்கு வருகிறார். அவரை திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் அடியாட்களுடன் வர அங்கே இருக்கும் கடையில் வைத்திருந்த சோடா பாட்டிலகளால் அடித்து நொறுக்கி தன்னை அண்ட விடாமல் செய்கிறார் ரிங்கு ( சாரா அலிகான் ). அதே ஷ்டேஷனில் வந்து இறங்குகிறார் தனுஷ் மற்றும் நண்பர்கள். அடுத்தவாரம் அவருக்கு நிச்சயதார்த்தம். தனுஷுடன் வந்த நண்பருக்கு பதில் தனுஷை தூக்கி போய்  laughing gas ! கொடுத்து ரிங்குவிற்கு திருமணம் நடக்கிறது.

 

கதையை முழுதாக நீங்கள் வெள்ளித்திரையில் (ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. தமிழில் கலாட்டா கல்யாணம் எனும் பெயரிலும் கிடைக்கிறது)


படம் பார்க்க எனக்குள் விரிந்தது  Dear Zindagi  படத்தை போல இதுவும் மனநலம் சம்பந்தப்பட்ட ஒரு படம் என்பது தான். மிக அழகாக சித்தரித்திருக்கிறார்.  1982ல் வெளியான அக்னி சாட்சி எனும் படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். “ கணாக்கானும் கண்கள் உறங்காதோ பாடல் சொல்ல” எனும் பாலுவின் பாடல் நினைவுக்கு வரும் அதே வேளையில் மருண்ட விழிகளுடன் சரிதாவின் நடிப்பும் ஞாபகபடுத்த தான் இந்த படத்தின் பெயரைச்சொன்னே.

schizophrenia  -(a serious mental disorder in which people interpret reality abnormally)  அந்த படத்தில் சரிதா இப்படி ஒரு மனநோய்க்கு ஆட்பட்டிருப்பார்.

Artangi re படத்திலும் ரிங்குவிற்கு இப்படி ஒரு மனநோய்தான். இதுமட்டுமில்லாமல்  split personality (சந்திரமுகியில் ஜோதிகா கேரக்டர்)யும் இருக்கிறது. இதை தனுஷில் சைக்காலஜி டாக்டர் நண்பன்   MS கண்டுபிடித்து மருந்தும் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். மருந்து வேலை செய்ய ஆரம்பித்த உடன் எப்படி சின்னசின்ன மாற்றங்களி நிகழ்கிறது என்பதையும் அழகாக சொல்லியிருப்பார்கள்)

இந்த கேரக்டருக்கு சாரா அலிகான் நியாயம் செய்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். 

படத்தில் சிலாகித்து கூற நிறைய்ய விஷயங்கள் இருக்கிறது. நேர்த்தியான கதை, அலட்டல் இல்லாத இசை ( ஏ.ஆர். ரஹ்மான்), அழகான ஒளிப்பதிவு, பாத்திரம் அறிந்து நடித்திருக்கும் நடிகர்கள். ( தமிழைவிட தனுஷ் இந்தியில் இன்னும் இயல்பாக நடிப்பதாக தோணுகிறது)

கிளைமாக்ஸில் அந்த Inner Child Healing  எனும் பார்ட்டையும் தொட்டு சொல்லும் விதம் அழகு.

 Dear Zindagi  மனநல மருத்துவம் எவ்வளவு அவசியம் என்பதை தெரியப்படுத்தியது என்றால்,  Artangi re குழந்தைப்பருவத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் நாம் பெரியவர்கள் ஆன பிறகும் அது நம் வாழ்க்கையில் எப்படி பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை சொல்கிறது.

தனுஷின் கேரக்டர் போல் பொறுமையாக (டாக்டராகவே இருந்தாலும்) கல்லானாலும் மனைவி ( எத்தனை நாளைக்குத்தான் கணவன் என்றே சொல்வது அதான் மாத்திட்டேன் :) ) என பொறுமையாக மனைவி குணமாக உதவக்கூடிய கணவன் அமைவது வரம் எனலாம். மன நல பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரையுடன் அக்கறை, பரிவு, அன்பு, பாசம் காட்டக்கூடிய உறவுகள் அமைந்துவிட்டால். இதுவும் கடந்துபோகும் என சொல்லாமல் அந்த அமில ஆற்றை கடக்க துணை இருக்கும் எனும் மன சக்தியுடன் அடிகள் எடுத்துவைக்கலாம்.


இந்தப்படம் ரொம்ப பிடித்திருக்கிறது.


டிஸ்கி: மேலே குறிப்பிட்டிருக்கும் மனநோய் பற்றிய விஷயங்கள் என் புரிதல் மற்றும் நான் அறிந்த விஷயங்கள். நபர்களுக்கு நபர் இது வேறு படலாம்.

அன்பும் நன்றியும்

புதுகைத்தென்றல்






2 comments:

Pandian R said...

அருமை. பரிந்துரைக்கு நன்றி.
2022 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

படம் குறித்து சில விமர்சனங்கள் படித்தேன். பார்க்க நினைத்தாலும் வாய்ப்பில்லை. தொடரட்டும் பதிவுகள்.