எப்படி இருக்கீங்க நட்புக்களே!!! மீண்டும் வலைப்பூக்கு வந்தாச்சு.
இப்போ ஹீலிங்கில் பிசியாகிட்டதால இந்தப்பக்கம் வரமுடியாமலே இருந்தது.
சக்திதாரா அப்படிங்கற பெயர்ல Holistic Health குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி சக நட்புக்களுக்கு உதவும் வகையில் சக்திதாரா ஈடுபட்டுகிட்டு இருக்கு.
வரக்கூடிய நாட்களில் இதைப்பத்தி இன்னும் அதிகமான தகவல்கள் தர்றேன்.
100 நாள் சேலஞ்ச் ஒண்ணு எடுத்திருக்கேன். அதில் தினமும் எனது இன்ஸ்டாவில், முகநூலில், யூட்யூப்பில் மற்றும் என் பாட்காஸ்ட்டிலும் பதிவுகள்,பகிர்வுகள் உடல் மற்றும் மனநலம் பற்றியதாக இருக்கும்.
முதல் நாள் நான் பகிர்ந்தது:
நான் யார்? ஏன் இந்த சக்திதாராவை துவங்கினேன்.
புதுகைத்தென்றலா வலையுலக நட்புக்களுக்கு என்னை தெரியும். என் பெயர் கலா ஸ்ரீராம் ( அதான் தெரியும்னு சொல்றீங்களா :)) புதுசா படிக்கறவங்களுக்காக. பரபரப்பா ஒரு நாளைக்கு 4 பதிவுகள் போட்டு கலங்கடிச்சுகிட்டு இருந்த சமயத்துல கூட எனக்குள்ள மன அழுத்தம் இருந்ததையோ அது என்னை மெல்ல மெல்ல அழுத்திக்கிட்டு என் இயல்பை தொலைக்க வெச்சுகிட்டு இருக்குன்னு தெரியாம இருந்தேன்.
மனநல மருத்துவரைப்பார்த்தப்ப மருந்துகள் கொடுத்தாங்க. ஆனா அது 2.5 வருஷம் எடுத்தும் எந்த பலனும் இல்லை. உடல் இயக்கம் முடங்கிடிச்சு. கைவலி அதிகமாச்சு. (கைவலின்னு பதிவுகள் போடாம இருந்தது உங்களுக்குத் தெரியும்). அடுத்த முறையும் மன அழுத்தத்துக்கு ஆளானப்ப இந்த முறை மருந்து இல்லை இதை வேறோடு எடுக்கணும்னு முயற்சி ஆரம்பிச்சதுல நான் கத்துக்கிட்டது நம் மனதை நாமதான் திடமாக்கி, நடந்தவைகளிலிருந்து வெளிவரணும்னு நினைச்சு அதற்கான வேலைகளை செய்தால் மட்டுமே முடியும்னு நான் கடந்து வந்த பாதை தான் ”கொடிஅசைந்ததும்” பதிவுகள்.
மெல்ல மெல்ல வெளிவந்துட்டேன். ஆனா மருந்து எடுத்துக்கொண்டதன்பலன் இன்னும் உடல் முழுமையாக இயக்கத்துக்கு வரலை.
என்ன நடந்தது?
......... தொடரும்
No comments:
Post a Comment