Thursday, March 16, 2023

Day 1part - 1 & Day to of HolisticlifewithkalaS


மருந்துகளில் பக்கவிளைவால் உடல் இயக்கம் குறைஞ்சதுலேர்ந்து மீட்டு கொண்டுவந்தாலும் Auto immune disease அப்படின்னு  சொல்லப்படுற Fibromyalgia இதுதவிர  Carpel Tunnel Syndrome பாதிப்பு இருக்கு.

ஆனாலும் விடாம சைக்கிளிங், டான்ஸ், யோகான்னு வலியிலிருந்து மனதை திசைதிருப்பும் வேலைகள் நடக்குது. :))


இரண்டாம் நாள் பகிர்ந்தது: 

காலாற மலையேற வைப்பாண்டி!!!!
காற்று அதிகமா இருக்கு ரோப் கார் சர்வீஸ் இல்லை! சரி வின்ச்ல போகலாம்.
வின்ச் ஒரு மணி நேரம் வெயிட்டிங் டைம். சரி வெயிட் பண்ணுவோம். 15 நிமிடம் நிண்ணு வரிசை நகரும் வழியா தெரியலை.
மலை ஏறணுமா??!! முருகா என்னால முடியாதுன்னு உனக்குத் தெரியாதா??? Bronchial infection இரண்டு பேருக்கும் இப்பதான் சரியாச்சு. அதுலயும் ஶ்ரீராமுக்கு இருமல் டிரிக்கர் ஆச்சுன்னா கஷ்டம்.
Fibromyalgia வோட 5 வருஷம் முன்ன ஏறி வலி அனுபவமும் இருக்கு.
வேற வழியே இல்லை. ஏறினா ராஜ அலங்கார தரிசனம், தங்க ரத இழுக்கலாம்.
குழப்பத்தோட லைன்ல வெயிட் பண்ணலாம்னு நின்னுக்கிட்டு இருந்தோம். உருவாரம் விக்கற அம்மா யாருக்கோ சொல்லிக்கிட்டு இருந்தாப்ல. 2 கோச் தான் போகுது நேரமாகும். உக்காந்து உக்காந்து போனாலும் 45 நிமிஷத்துல போயிடலாம். யானைப்பாதையில போ. படியேற வேணாம். ராஜ அலங்காரம் பாக்கலாம் தங்க ரதமும் இழுக்கலாம்.

இங்க நின்னா எதுவும் நடக்காது. இது நமக்கான செய்தின்னு யானைப்பாதையில் ஏற ஆரம்பிச்சாச்சு. ரொம்ப நேரம் நிற்க நேரும்னு எப்பவும் போல வெரிக்கோஸ்வெயின் சாக்ஸ் போட்டிருந்தேன் அதனால கொஞ்சம் வலி பயமில்லை. மூச்சு வாங்குது. மெல்ல மெல்ல இயற்கையை ரசிச்சுகிட்டு
38 நிமிஷத்துல ஏறியாச்சு.
6 மணிக்கு சஷ்டி கவசமும், ஸ்கந்தகுரு கவசமும் ஒலிக்க விடறாங்க. அதை அங்கே உட்கார்ந்து சொல்லும் பொழுது அந்த அனுபவமே வேறு.
தங்கரதம் இழுத்து ராஜ அலங்காரத்தில் அவனை தரிசித்து ரூமுக்கு வந்து சாக்சை கழட்டும்போது வலிதான். ஆனா மனசு நிறைஞ்சு இருந்தது.
ஏறும் சூழலை உருவாக்கி, ஏறவைத்தது எனை நடத்தும் எந்தைக்கு எனக்கு மருந்தாகவும் தெரியாதா!!!
கந்தா என்றால் இங்கு வந்தேனேனென்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி பழனி மலையாண்டி

பயனக்களைப்பு, அலைச்சல், உடல்வலி இதுலேர்ந்து வெளியே வர நான் யோகா செஞ்சேன்

யோகா அப்படின்னா அது ஒரு உடற்பயிற்சி மட்டும்தான்னு ஒரு தவறான கருத்து இருக்கு. மனதையும் உடலையும் இணைப்பதுதான் யோகா. வரும் நாட்களில் இதைப்பத்தி இன்னும் விவரமா சொல்றேன்.

அன்பும் நன்றியும்



No comments: