இந்த தசைநார்வலி என்பது எப்படி இருக்கும்னு கேட்டா, புதிதாக உடற்பயிற்சி செஞ்சா நமக்கு ஒரு உடல்வலி வரும். அப்புறம் அந்த வலி குறைஞ்சு, உடல் நார்மாலா அந்த பயிற்சியை ஏத்துக்கும். ஆனா இங்கே அந்த வலி குறையவே குறையாது.
என்ன செஞ்சாலும் வலிக்கும். நின்னாவலி உட்கார்ந்தா வலி ஏன் படுத்தாலும் வலி அதனால தான் இரவில் தூக்கம் பாதிக்கப்படும்.
மருத்துவர்கள் இதற்கு முற்றிலும் குணமாக்க மருந்து இல்லைன்னு சொல்றாங்க. வலி ஏற்படும்பொழுது மூளைக்கு செல்லும் மெசெஜ் வேற இதமா இருக்கும். அதனாலதான் இந்த நிலை. என்ன செஞ்சாலும் வலிக்கப்போகுது நான் என்ன செய்யலாம்னு கேட்டப்ப ரொம்ப அலட்டிக்க கூடாது. நீங்க ஏதாவது செஞ்சு வலி அதிகமானா கஷ்டம் அப்படின்னு சொன்னதை அப்படியே நம்பி அதிக வருத்தம் உடம்புக்கு கொடுக்காம இருந்ததன் பலன் உடல் இயக்கம் இல்லாம போயிடுச்சு. காலுக்கு தெம்பில்லை. கையில் கரண்டி பிடிக்க கூட வலுவில்லை.
என் பதிவுகள் குறைய இதுதான் காரணம். அதிலிருந்து என்னை மீட்டு எடுத்து உடற்பயிற்சி,மனதுக்கு பயிற்சின்னு ஆரம்பிச்சப்ப பலன் நல்லாயிருந்தது. ஓரளவு வலியோடு வாழப்பழகியாச்சு.
இந்த தாரக மந்திரம் தான். எப்பவும் உச்சரிச்சுக்கிட்டே இருப்பேன். மெல்ல மெல்ல கீழே விழாமல் நடக்க பழகினேன், அப்புறம் தினமும் நடை, ஓட்டம், சைக்கிளிங், எனக்கு ரொம்ப பிடிச்ச நடனம் கத்துக்க ஆரம்பிச்சேன். இதெல்லாம் செய்யும் போது வலி இல்லாம இல்லை. ஆனா என்ன செஞ்சாலும் வலிக்க போகுது. அதில் இதை செஞ்சா என்னால ஒன்றுமே செய்ய முடியாதுன்னு மனச்சோர்வு ஏற்படலை. தன்னம்பிக்கை பெருகியது.
என் ஹீலிங் பயணம் துவங்கியது.
உடலால் மனதா?? மனதால் உடலா? இரண்டும் ஒரு நேர்கோட்டில் இருப்பதுதான் சரின்னு புரிஞ்சு 13 வருஷமா தசைநார்வலி என் வாழ்வில் ஒரு அங்கமா இருந்தாலும் நான் யார்னு தெரிஞ்சுக்க, என் சக்தி என்னன்னு புரிஞ்சுக்க உதவியது இந்த தசைநார்வலி.
வாழ்ந்து காட்டலாம்.
அன்பும் நன்றியும்
No comments:
Post a Comment