Tuesday, September 15, 2009

FREE DELIVERY!!!!!!!

ஏதாவது சாமான் வாங்கினா கைவலி எடுக்க மூட்டை
தூக்கிகிட்டு வந்தது அந்தக்காலம்!!

சுண்டைக்காய் காப்பணம், சுமைக்கூலி முக்காப்பணம்
எனும் பழமொழி மாதிரி வண்டிக்கு பணம் கொடுப்பதை
விட தூக்கிகிட்டு வருவது நல்லதுன்னு சாமானை
நாமளே தூக்கிகிட்டு வருவோம்.

நான் சின்னதா இருந்த பொழுது மாச சாமான் வாங்க
அம்மாகூட போவேன். கீழ 2ல இருக்கற அர்பன் ஸ்டோர்லதான்
வாங்குவோம்.ரேஷன் கடை. சாமான் சுத்தமா தரமா
இருக்கும். 1 மாதம் க்ரெடிட் கிடைக்கும் என்பது
எக்ஸ்ட்ரா. சாமான் ஜாஸ்தியா
இருந்தா ரிக்‌ஷாவுல போட்டு எடுத்துகிட்டு போவோம்.
இல்லாட்டி அம்மா என்னை சாமானுக்கு காவலா வெச்சிட்டு
சாமானை கொண்டு போய் வீட்டுல போட்டுட்டு வருவாங்க.
அடுத்த ட்ரிப்ல அம்மாகூட சாமனை எடுத்துகிட்டு நானும்
போவேன்.......

இப்ப எங்க போனாலும் சாமானை தூக்குற வேலையில்லை.
சில சூப்பர் மார்க்கெட்டுகளில் சாமான்களை வாங்கி
அங்கேயே வைத்துவிட்டு ஹோம்டெலிவரி என்று
சொல்லிவிட்டால் நமது விலாசம் எல்லாம் வாங்கிகிட்டு
அவங்களே கொண்டுவந்து வீட்டுல கொடுத்திடுவாங்க.
ரொம்ப வசதி.

பர்னீச்சர்கள் இப்பல்லாம் ஃப்ரி ஹோம் டெலிவரிதான்.

சூப்பர் மார்கெட்டுகள் தவிர சில மளிகை கடைகளும்
ஃப்ரி ஹோம் டெலிவரி தர்றாங்க. போன் செஞ்சு
தேவையானவற்றை போதும் சாமான் வீட்டுக்கு வந்திடும்.சாமான்களுக்கு அடுத்து உணவு. போன் செஞ்சா போதும்
தேவையான உணவு வீட்டுக்கு வந்திடும். பிட்சா டெலிவரி
மாதிரி நம் தெந்நிந்திய உணவுவகைகள், வட இந்திய
உணவுவகைகள் எல்லாமும் ஃப்ரீ ஹோம் டெலிவர்
லிஸ்ட்ல இருக்கு. பெரிய பெரிய நகரங்களில் இது தான்
நடை முறை.


நெட்டுல ஃப்ரி ஹோம் டெலிவரின்னு போட்டு தேடினா
எம்புட்டு சைட்கள். இண்டியன் ஃபுட்னு போட்டாலும் வருது!!!
போன்லாம் வேணாம் ஆன்லைன்லயே சொல்லி சாப்பாடை
வரவழைச்சிடலாம்.

இலங்கையில் இருந்தப்ப, திடும்னு முடிவெடுத்து நாட்டை
விட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க என் ஃப்ரெண்ட். வீட்டுக்கு
சாப்பிட கூப்பிடவும் முடியாது. நேரமே இல்லை. பிட்சாஹட்டுக்கு
போனைப்போட்டு பிட்சா ஆர்டர் செஞ்சு டெலிவர் அட்ரஸ்
ஃப்ரெண்ட் வீட்டுது கொடுத்து பணம் வந்து என் கிட்ட வாங்கிக்கிட
சொல்லிட்டேன். அழகா பசி நேரத்துக்கு பிட்சா டெலிவரி
செஞ்சாங்க. நான் ஆர்டர் செய்யவேயில்லையேன்னு!! அவங்க
ஆச்சரியமா குழம்ப போனைப்போட்டு தாக்கலை சொல்ல அவங்களுக்கு
ரொம்ப சந்தோஷம். ஃப்ரி ஹோம் டெலிவரினால நல்லதுதான்.


சரி இப்ப இதனால் என்ன வந்துச்சு??!! ஃப்ரீ ஹோம் டெலிவரினால
அலைச்சல் இல்லை, வண்டிக்கு தண்டமா அழத்தேவையில்லை,
ஆத்திரம் அவசரத்துக்கு சாப்பாடு வந்திடுது.... அப்புறமென்ன???

இதனால நாம கொஞ்சம் சோம்பேறி ஆயிட்டோமோன்னு தோணுது.

சாப்பாடு, சாமான்கள், வீட்டுக்கு உபயோகமான பொருட்கள் எல்லாம்
ஹோம் டெலிவரி செய்யப்படுவது சரி..

எனக்கு வந்த போன்கால் தான் இந்தப் பதிவுக்கு காரணம்!!!

ஏதோ ஒரு பார்மஸிலேர்ந்து போன் செஞ்சு ,”நாங்க மருந்துகளை
உங்க வீட்டுக்கு வந்து கொடுக்கறோம், 10 பர்சண்ட் விலை
கழிவுல தர்றோம்” அப்படின்னு சொன்னாங்க. இதப்பார்றா!!
நல்லா இருக்கேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.

15 நாள் கழிச்சு அந்த மருந்துக்கடையி்லேர்ந்து போன் செஞ்சு
”என்னங்க! நீங்க மருந்து ஏதும் வாங்கலியா!!!” அப்படின்னு
கேக்க அடப்பாவிகளா! மருந்து என்ன அடிக்கடி வாங்க
வேண்டிய சாமானா!! போனப்போட்டு மருந்து வாங்கங்குன்னு
சொல்ற அளவுக்கு போயிடிச்சேன்னு நினைச்சேன்.

இன்னொரு கடையிலேர்ந்து போன் செஞ்சு,”மேடம்
நாங்க ட்ரைஃப்ரூட்ஸ் உங்க வீட்டுக்கே டெலிவரி தர்றோம்.
வேணுங்கறபோது கண்டிப்பா போன் செய்ங்க, தரமானது,
நல்ல சகாயவிலையில தர்றோம்னு”!! சொன்னாங்க....

அவ்வ்வ்வ்வ்வ் ட்ரைப்ரூட்ஸ் என்னாவிலை!!

இப்படியே போன இன்னும் யார் யாரெல்லாம் ஃப்ரி ஹோம்
டெலிவரி தர்றோம்னு போன் செய்வாங்கன்னு யொசிச்சு
பாத்தேன்......... மண்டை காயுது.

(யாரவது யோசிச்சு யார்யாரெல்லாம் ஃப்ரி ஹோம் டெலிவரி
தர்றோம்னு சொல்வாங்கன்னு பதிவு போடுங்கப்பு)

நெட்டுல இந்த கார்ட்டூன் கிடைச்சது........
ஒண்ணும் சொல்ற மாதிரி இல்ல........

21 comments:

ஆயில்யன் said...

மிளகாய் பொடிக்கும்,ஜீனிக்கும் எண்ணெய்க்கும் மற்றும் இன்னபிற மளிகை பொருட்களுக்கு நாள் தோறும் பல தடவைகள் சைக்கிளில் கடைத்தெரு சென்று நகர்வலம் வருவது போல ஆகுமா?
:(

புதுகைத் தென்றல் said...

mic testing

:))))

எம்.எம்.அப்துல்லா said...

//கீழ 2ல இருக்கற அர்பன் ஸ்டோர்லதான்
வாங்குவோம்.ரேஷன் கடை

//

நாங்க அங்க பட்டாசு வாங்குவோம் :)

எம்.எம்.அப்துல்லா said...

//அடப்பாவிகளா! மருந்து என்ன அடிக்கடி வாங்க
வேண்டிய சாமானா!! போனப்போட்டு மருந்து வாங்கங்குன்னு
சொல்ற அளவுக்கு போயிடிச்சேன்னு நினைச்சேன்.

//

சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :)))

butterfly Surya said...

மனிதனை மொத்தம் முழு சோம்பேறியாக்கும் ....

கார்டூன் நல்லாயிருக்கு...

புதுகைத் தென்றல் said...

நாள் தோறும் பல தடவைகள் சைக்கிளில் கடைத்தெரு சென்று நகர்வலம் வருவது போல ஆகுமா?//

ஆமாம் பாஸ். சில சமயம் கடுப்பா வந்தாலும் அதுவும் ஒரு சுகம் தான்

புதுகைத் தென்றல் said...

பட்டாசு வாங்குவோம் //

அதுவும் வாங்குவோம். கூட்டுறவு கடைஆச்சே. அப்பா அங்கதான் வாங்குவார்.

:))))))

புதுகைத் தென்றல் said...

சிரிச்சுக்கிட்டே இருக்கேன்//

நல்லது. :))))))))

புதுகைத் தென்றல் said...

நன்றி சூர்யா

ஆயில்யன் said...

//எம்.எம்.அப்துல்லா said...

//கீழ 2ல இருக்கற அர்பன் ஸ்டோர்லதான்
வாங்குவோம்.ரேஷன் கடை

//

நாங்க அங்க பட்டாசு வாங்குவோம் :)
///

ஒரே ஒரு தடவை அந்த ஸ்டோருக்கு போய்ட்டு வந்த ஞாபகம் ஒரு பெரிய வீடு மாதிரி உள்ள்ள்ள்ள்ளா போய்க்கிட்டே இருக்குமே அதானே??

:)

மங்களூர் சிவா said...

ஹோம் டெலிவரி பல நேரங்களில் உதவியாதான் இருக்கு.

Mrs.Faizakader said...

எங்க ஊர் காயல்பட்டிணம் அங்கு வடை, பஜ்ஜிக்கு போனில் ஆர்டர் சொன்னாலே போதும் வீடு தேடி வரும்..:-}

நட்புடன் ஜமால் said...

அப்துல்லா சிரிச்ச அதே இடத்தில்

நானும் சிரித்து கொண்டே ...

வித்யா said...

கொஞ்சம் இல்லக்கா ரொம்பவே சோம்பேறியாக்கிடுது:(

எம்.எம்.அப்துல்லா said...

//ஒரே ஒரு தடவை அந்த ஸ்டோருக்கு போய்ட்டு வந்த ஞாபகம் ஒரு பெரிய வீடு மாதிரி உள்ள்ள்ள்ள்ளா போய்க்கிட்டே இருக்குமே அதானே??

:)

//

அதேதான்ணே :)

SK said...

இந்தியர்கள் மார்க்கெட்டிங் விடயத்தில் அடித்து செல்வது இந்த இடத்தில் தான். ஐரோப்பாவில் நான் பார்த்தவரை இந்த ஹோம் டெலிவரி விடயம் இல்லை.

சென்ற வாரம் அண்ணனுக்கு எதோ ஒன்று தேவை பட்டது. நானும் இரண்டு வாரமாக அவனிடம் சொல்லி சலித்து விட்டேன். போன் பண்ணி சொன்னேன், 'நீ இன்னும் ரெண்டு நாள்ல அதை வாங்கலைனா நான் நேரடியா போன்ல ஆர்டர் பண்ணி வீட்டுக்கோ, ஆபிசுக்கோ டெலிவரி கொடுக்க சொல்லிடுவேன் சொல்லி'.. அப்படின்னு.. அம்புட்டு வசதி நம்ம ஊருல :-)

புதுகைத் தென்றல் said...

பல நேரங்களில் உதவியாதான் இருக்கு.//

ஆமாம், சில நேரங்களில் கொடுமைக்கு உச்சமாயிடுது சிவா.

புதுகைத் தென்றல் said...

வடை, பஜ்ஜிக்கு போனில் ஆர்டர் சொன்னாலே போதும் வீடு தேடி வரும்..//

ஆஹா... ஒரு லிஸ்ட் போட்டு பதிவு போடலாம் போல இருக்கே

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜமால்

புதுகைத் தென்றல் said...

வாங்க வித்யா,

உங்களுக்குமா!!!

புதுகைத் தென்றல் said...

வாங்க எஸ்கே,

எல்லாம் நல்லாத்தான் இருக்கு....