தாயின் அன்பில் மிகவும் திளைப்பது மகன்.
அது ஏனென்றால் - ஒவ்வொரு தாயும்,
தன் மகனில் தன் தந்தையை காண்கிறாள்
அதனாலேயே தாய்க்கும் மகனுக்கும் அப்படி
ஒரு பாசப் பிணைப்பு.
தாயின் அன்பில் திளைத்த மகன்,
எல்லாவற்றையும் தனக்காக விட்டு வந்தாளே! மனைவி
என்று உணரும்போது ஆணில் இருக்கும் தாய்மை
வெளிப்பட்டு தாயுமானவன் ஆகிறான் - இங்கு
மனைவி முதல் குழந்தை.
தாய்க்குப்பின் தாரம் என்று உணர்ந்த மனைவி
கணவனுக்கு தாயாய் மாறும்போது அவளின்
முதல் குழந்தை கணவன்.
"அப்பனுக்கு பெண் பிடிக்கும்" என்று
தனக்கொரு மகள் வேண்டும் என்று
ஆண்மகன் விரும்பக் காரணம் எது?
தன் மகளில் தாயைக் காணவிழைகிறான்.
திருமணமாகும் வரைத் தந்தையின்
கழுத்தைக் கட்டிக் கொண்டு செல்லம்
கொஞ்சும் மகளின் பிரிவை (திருமணத்திற்கு பிறகு)
தாங்க முடியாத தகப்பன்கள் இருக்கிறார்கள் என்பது
ஆச்சரியமான உண்மை!
இவ்வாறாக தந்தையின் அன்பில் திளைத்த மகள்
தன் மகனின் மீது பாசத்தை பொழிந்து
தன் மகனில் தந்தையை பார்த்து பரவசமாகிறாள்
இது ஒரு சுழலும் சக்கரம்!
இதை உணர்ந்தால் வாழ்வு இன்பம்!
23 comments:
"அப்பனுக்கு பெண் பிடிக்கும்" என்று
தனக்கொரு மகள் வேண்டும் என்று
ஆண்மகன் விரும்பக் காரணம் எது?
தன் மகளில் தாயைக் காணவிழைகிறான்.
திருமணமாகும் வரைத் தந்தையின்
கழுத்தைக் கட்டிக் கொண்டு செல்லம்
கொஞ்சும் மகளின் பிரிவை (திருமணத்திற்கு பிறகு)
தாங்க முடியாத தகப்பன்கள் இருக்கிறார்கள் என்பது
ஆச்சரியமான உண்மை!
இவ்வாறாக தந்தையின் அன்பில் திளைத்த மகள்
தன் மகனின் மீது பாசத்தை பொழிந்து
தன் மகனில் தந்தையை பார்த்து பரவசமாகிறாள்
இது ஒரு சுழலும் சக்கரம்!
இதை உணர்ந்தால் வாழ்வு இன்பம்!
100% ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்
வாங்க இம்சை,
என் பிளாக்கில் உங்கள் முதல் பின்னூட்டம். நன்றி.
யாரும் தெரிந்து தவறு செய்வதில்லை.
புரிதல் மிக மிக அவசியம். அதைச் சொல்ல விழைந்தேன்.
எல்லாம் சரிதான். ஆனால் நடக்கும் பெண் சிசுக் கொலைகள் என்ன சொல்லுது? (-:
வாங்க துளசி அக்கா,
அது தனிக் கதை. எல்லா இடத்திலும் அப்படி இல்லையே. அதுவும் இருக்கிறது, இதுவும் இருக்கிறது.
அறியாமை தான் முக்கிய காரணம்
//
இது ஒரு சுழலும் சக்கரம்!
இதை உணர்ந்தால் வாழ்வு இன்பம்!
//
சூப்பர்.
நன்றி சிவா
புதுகை இதைப்பத்தி போனவாரம் ஏதோ யோசிக்கும்போது தோணிச்சு..
இட்பஸ் காம்ப்லெக்ஸ்,,ஈலெக்ற்றா காம்ப்லெக்ச் எல்லாம் ரொம்பமுனாடிய்யே அது ஒண்ணும் தெரியாமலே கதைகள் இருண்திருக்குன்னு..
எல்லா புராணத்திலயும் பெண்-அப்பா காம்பினேஷன் அதிகம்
சீதா-தசரதன்
ஆண்டாள் -அவுங்க அப்பா.
ஆண்கள் எடுத்தோம்னா..
ராமன் -அவுங்க அம்மா.கோசலா, கைகேயி ...
யசோதா -க்ரிஷ்னன்.
இன்னும் இருக்குமோ என்னவோ..
எல்லாம் சரிதான்.
இதை கவிதை மாதிரி எழுத நினைச்சீங்களா? இல்ல பத்தி பத்தியா பிரிச்சு இருக்கீங்களேனு கேட்டேன். :p
// தாய்க்குப்பின் தாரம் என்று உணர்ந்த மனைவி
கணவனுக்கு தாயாய் மாறும்போது அவளின்
முதல் குழந்தை கணவன்.//
//தாய்க்குப்பின் தாரம் என்று உணர்ந்த மனைவி
கணவனுக்கு தாயாய் மாறும்போது அவளின்
முதல் குழந்தை கணவன்.//
சூப்பரேய்ய்ய்ய்....
எல்லாம் ரொம்பவே நெசமாத்தேன் சொல்லியிருக்கிங்க தென்றல்..
கணவனை பெண்கள் முதல் குழந்தையாக நினைச்சு பாசமாயிருந்தாக்கா குடும்பத்துல பல குழப்பங்கள தவிர்க்கலாமில்ல...:D
ரொம்பச் சரி சீதா.
ஆனால் சீதாவின் தந்தை ஜனகன்.
அம்பி said
//இதை கவிதை மாதிரி எழுத நினைச்சீங்களா? இல்ல பத்தி பத்தியா பிரிச்சு இருக்கீங்களேனு கேட்டேன். :p//
எனக்கு கவிதை எல்லாம் எழுதத் தெரியாது. படிக்க வசதியாய் இருக்குமேன்னு பத்தியா பிரிச்சேன் அவ்வளவுதான்.
ரசிகன் said
//கணவனை பெண்கள் முதல் குழந்தையாக நினைச்சு பாசமாயிருந்தாக்கா குடும்பத்துல பல குழப்பங்கள தவிர்க்கலாமில்ல...:D//
உங்களுடைய முந்தைய பின்னூட்டத்துக்கு நன்றி ரசிகன்.
ஒரு தலை பட்சமாவே பார்க்க கூடாது.
ஆண்களும் மனைவியை முதல் குழந்தையா நினைச்சு பாசமா இருந்தா குழப்பமே இல்லையே! (முதல்ல மனுஷியாக பார்க்கட்டும்கிறீங்களா? அதுவும் சரிதான்.)
//
ஒரு தலை பட்சமாவே பார்க்க கூடாது.
ஆண்களும் மனைவியை முதல் குழந்தையா நினைச்சு பாசமா இருந்தா குழப்பமே இல்லையே! (முதல்ல மனுஷியாக பார்க்கட்டும்கிறீங்களா? அதுவும் சரிதான்.)
//
ஆரம்பிச்சிட்டாங்காய்யா அழுகாச்சி ஆட்டத்தை!!
mangalore shiva said
//ஒரு தலை பட்சமாவே பார்க்க கூடாது.
ஆண்களும் மனைவியை முதல் குழந்தையா நினைச்சு பாசமா இருந்தா குழப்பமே இல்லையே! (முதல்ல மனுஷியாக பார்க்கட்டும்கிறீங்களா? அதுவும் சரிதான்.)
//
ஆரம்பிச்சிட்டாங்காய்யா அழுகாச்சி ஆட்டத்தை!!//
திருந்துங்கப்பா.
தப்பு செய்ததை நினைத்து சிரிப்பு வருது புதிகை. எனக்கு எப்பவுமே எங்க தாத்தா மேல எரிச்சல்.ஏனோ சீதான்னு பெயர்வச்சுட்டாரே. அந்தம்மவோ அழுது புழிஞ்சிடிச்சிடிச்சி....ஆண்டாள் ந்னு பேர் வச்சிரிண்தா நலா இருக்குமே ந்ன்னு யோசிப்பேன்
//
Seetha said...
ஆண்டாள் ந்னு பேர் வச்சிரிண்தா நலா இருக்குமே ந்ன்னு யோசிப்பேன்
//
ROFL
நம்ம பேரு நம்ம கேட்டா வைக்கிறாங்க.
அதனால் வருந்தி பிரயோசனமில்லை சீதா.
என் பேரில் கூட குழப்பங்கள் இருந்தது அதைப் பத்தி தனியா மெயிலரேன்.
புதுகை...உறவுகளின் பரிமாணங்கள் உங்கள் ஒவ்வொரு பதிவிலும்..நன்றாக இருக்கிறது..
பாச மலர் said
//உறவுகளின் பரிமாணங்கள் உங்கள் ஒவ்வொரு பதிவிலும்..நன்றாக இருக்கிறது..//
வாழ்த்துக்கு நன்றி.
அடடா இவ்ளோ நாள் இம்சை உங்களுக்கு பின்னூட்டம் போடலயா.
இம்சைக்கு நான் பையனா பிறந்ததுல கொஞ்சம் வருத்தம் இப்போ நாங்க பிரண்ட்ஸ் ஆயிட்டோம்
அப்படியா பவன் குட்டி.
எப்போதும் பிரண்ட்ஸா இருக்கணும்னு புது பிரண்ட் கிட்ட சொல்லு.
அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.
Post a Comment