Sunday, December 09, 2007

ஹைதராபாத்திலே அறுசுவை உணவு.

ஹைதராபாத் - என்று நினனத்தவுடன் பிர்லா மந்திர், சார்மினார் ஆகியவைகளுடன் நினனவுக்கு வருவது ஹைதராபாதி பிரியாணி.


இதைத் தவிறவும் நான் மிகவும் விரும்பும் இடம் ஒன்று இங்கே உண்டு.


ராணிகன்ஞ் ஏரியாவில் இருக்கும் குஜராத்தி ஜெயின் கோவில் அருகில், இருக்கிறது ஸ்ரீ ஷ்யாம் நிவாஸ். இது ஒரு மார்வாடி, குஜராத்தி, மற்றும் மராத்தி உணவகம்.


பார்க்க சிறிய கடையாக இருக்கும் இதில் விசேஷம் என்ன வென்றால் இது

குடும்பத்துடன் போக ஏற்ற இடம். மெனு கார்ட் எல்லாம் கிடையாது.

ஆனால் அதிர்ச்சி காத்திருக்கும்.

ஆம் இங்கு சப்பாத்திக்கள், கறிவகைகள், சாதம் ஆகியவை "UNLIMITED".


வீட்டுச்சாப்பாடு போன்ற வகையில் நீங்கள் எவ்வளவு கேட்டாலும் முகம் சுளிக்காமல் இன்முகத்தோடு பரிமாறுவார்கள். சுடச்சுட சப்பாத்திகளை கையில் வைத்துக்கொண்டு ஒரு பையன் டேபிள்கள் அருகில் வந்து கேட்க கேட்க பரிமாறுவான்.

கோதுமை,ஜோவ்ரா,பாஜ்ரா, பேசன் ஆகிய வகை 4 வகை ரோட்டிகள் இங்கு கிடைக்கும். அன்லிமிடெடாக சாப்பிட்டாலும் வயிற்றுக்கு எந்த உபத்திரமும் செய்யாத உணவு. குழந்தைகளுக்கு காரமில்லாமல் தனியாக பருப்பு, மற்றும் கறிவகைகள் பரிமாறப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் குஜராத்தி கிச்சடி & கடி (இம்சை கடிக்கு ஒரு பதிவு போட்டிருந்தார்), ஞாயிற்றுக்கிழமைகளில் பூரியும் இங்கு ஷ்பெஷல். (ஞாயிறு மாலை விடுமுறை)

பாஜ்ரா ரோட்டிகளுக்கு வெல்லம் கொடுப்பார்கள். தயிர்- 10 ரூபாய். ஆம்ரஸ்(Mango juice)um கிடைக்கும். (need to pay extra).

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மேலாக சுவையாலும், உபசரிப்பாலும் உங்கள் வயிறு நிறையும் என்பதற்கு நான் உத்திரவாதம். ஹைதராபாத்தில் இந்த இடத்தை தவிர வேறு எங்கும் குறைந்த பணத்தில் நிறைவான உணவு கிடைக்காது. ஒரு பிளேட் 50 ரூபாய்.

ஹைதராபாத் போனால் ஷ்யாம் நிவாஸ் போய் சாப்பிட்டு, எதிரில் இருக்கும் பான் கடையில் மீட்டா பான் சாப்பிட மறக்காதீர்கள்.

ADDRESS:

SHREE SHYAM NIVAS (MARWADI, GUJARATI & MARATHI FOODS)
2-2-57/4, PAN BAZAR, M.G.ROAD,
NEAR GUJARATI JAIN TEMPLE,
SECUNDERABAD - 500 003

22 comments:

Sanjai Gandhi said...

எல்லாம் சரி தான்.. போய் வர ஃப்ளைட் டிக்கட்டும் 50 ரூபாய் பணமும் உடனடியா அனுப்பி வைங்க... :)

மங்களூர் சிவா said...

கடையோட போன் நம்பர் போட விட்டுட்டீங்களே???

என்ன இருந்தாலும் மங்களூர்ல ஒரு தரம் சாப்பிட்டவங்களுக்கு வேற எங்க சாப்பிட்டாலும் நல்லா இருக்காது!!!
அந்த சாம்பார் இருக்கே சாம்பார் அடடா, ரசம் சொல்லவே வேணாம் ஆளையே தூக்கும்(!)

ஏங்க இப்படி சாப்பாட்டு விசயத்தை எழுதி பேச்சிலர் பசங்க வயித்தெரிச்சலை கிளப்பறீங்க!!!
:-(((((((((((

pudugaithendral said...

பொடியன்,
//எல்லாம் சரி தான்.. போய் வர ஃப்ளைட் டிக்கட்டும் 50 ரூபாய் பணமும் உடனடியா அனுப்பி வைங்க... :)//

அது சரி!

pudugaithendral said...

சிவா உங்களுக்காக போன் நம்பர் இதோ. 27715388, 27712350.

கர்னாடகா சமையல் குறித்து நான் அறிவேன்!

அந்த ஊருபக்கம் போனா இதை மறக்காதீங்கன்னு சொன்னேன்.

Sanjai Gandhi said...

//புதுகைத் தென்றல் said...

பொடியன்,
//எல்லாம் சரி தான்.. போய் வர ஃப்ளைட் டிக்கட்டும் 50 ரூபாய் பணமும் உடனடியா அனுப்பி வைங்க... :)//

அது சரி!
//

இது சரி இல்ல.. நான் கேட்டது என்னாச்சி? :O

pudugaithendral said...

பொடியன் said,
//இது சரி இல்ல.. நான் கேட்டது என்னாச்சி? :O//

நாங்க போகும்போது சொல்றேன் கூட வாங்க அங்கிள். (ஆஷிஷ், அம்ருதா)

சுரேகா.. said...

இதைப்படிச்சவுடனே..மைசூர்ல சாப்பிட்ட Mango Jam சுவை நாக்கு உணருதுங்க..இருங்க..ஒரு அனுபவத்தோட வரேன்..

pudugaithendral said...

vaanga vaanga,

sureka naanga kathukittu irukom.

e kalapai vela seyyala. athan thanglish.

ரசிகன் said...

இப்பவே நாக்குல தண்ணி ஊருதே..
ஆனா இதுக்காக அம்புட்டு தூரம் போக முடியுமான்னுதேன் கவலை..ஹிஹி..

pudugaithendral said...

வாங்க ரசிகன்.

எனக்கும் அப்படித்தான் இருக்கு.

என்ன செய்ய? போய்வந்த ஞாபகங்கள் தான் ரீவைன்ட் செஞ்சுக்கரேன்.

ambi said...

நல்ல உபயோகமான தகவல் முக்யமா பேச்சுலர் மற்றும் அடங்கி ஒடுங்கிய ரங்குகளுக்கு! :p

ஹிஹி பார்சல் எல்லாம் அனுப்புவாங்களா? :))

Note: No blogging in weekends, so now only read rest of the posts. :)

இம்சை said...

எனக்கு பிளைட் டிக்கெட் எல்லாம் வேண்டாம் பஸ் சார்ஜ் மட்டும் அனுப்புங்க போதும்...

Sriram said...

i have been to this restaurent and fully agree that it is worth visiting and value for money

pudugaithendral said...

இம்சை,
//எனக்கு பிளைட் டிக்கெட் எல்லாம் வேண்டாம் பஸ் சார்ஜ் மட்டும் அனுப்புங்க போதும்...//

ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா!

துளசி கோபால் said...

விவரமாத்தான் இருக்கு.

சென்னையில் சரவணபவன் ரங்கோலியில் நல்ல குஜராத்தி உணவு கிடைக்குது.

ருமால் ரோட்டி அருமை.

pudugaithendral said...

ஓ அப்படியா?

மெளலி (மதுரையம்பதி) said...

அடுத்தமுறை விஜயம் செய்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

அடுத்தமுறை விஜயம் செய்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

அடுத்த முறை ஹைதராபாத் போகையில் இங்கே போக வேண்டும்...

Unknown said...

அப்படியா? நேரம் கிடைக்கும்போது ஒரு எட்டு போயிட்டு வந்துட்டு சொல்றேன் :-)

pudugaithendral said...

ஆமாம் தவறாம் போய் பாருங்க அருட்பெருங்கோ

pudugaithendral said...

மதுரையம்பதி, பாசமலர் போய் பாத்துட்டு சொல்லுங்க.