Saturday, January 26, 2008

பிரவசத்தின் போது உடன் இருக்கும் கணவன்மார்கள்!!!

என்னங்க தலைப்பை பார்த்து உங்க புருவம் உயரது!!!

நம்ம சென்னையிலதாங்க இது நடந்திருக்கு.

பிப்ரவரி 1 தேதி இட்ட "அவள் விகடன்" பத்திரிகையில் வந்திருக்கும் கட்டுரை இது.

தன் மனைவியின் பிரசவத்தின் போது உடன் இருந்த அஞ்சாத நெஞ்சம் கொண்ட 4 கணவன்மார்களையும், அவர்களது மனைவியையும் பேட்டிக் கண்டு போட்டிருக்காங்க.

தன் மனைவியின் கூட இருக்க விரும்பறதா சொன்ன ஆனந்த் என்பவரைப் மருத்துவர் ஆழமா பார்த்துட்டு,"மனசுல திடம் இருந்தா வாங்கன்னு," சொல்லிட்டு போக, சட்டுன்னு அவங்க பின்னாடியே
போய் உடன் இருந்தாராம். பிரவசத்திற்கு பிறகு இவருக்கு மயக்கம் வர்றமாதிரி ஆயிடுச்சாம்.

வெங்கடேஷ் என்பவர் பிரசவ அறைக்குள் போய் மனைவி படும் வேதனை தாங்கமல் வெளியே வந்துட்டு, பிறகு மனசு கேக்காம உள்ள போய் மனைவிக்கு மாரல் சப்போர்ட்டா இருந்திருக்கார்.

ஸ்ரீகாந்த் என்பவர் அடிச்சிருக்க கமென்ட்,

"இத்தனை வேதனைகளையும் தர்ற 'ரண'பிரசவத்துக்கு யார் 'சுக"ப்பிரச்வம்னு பேர் வெச்சிருக்காங்க?"
நல்லா கேட்டிருக்காரு. இவர் தன் மனைவிக்கு பிரசவ அறையில் வலி தெரியக்கூடாது என்பதற்காக ஜோக் சொன்னதில், டாக்டர், நர்ஸ் எல்லோறும் கூட சிரிச்சாங்கலாம்!!

தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்தை உடன் இருந்து பார்த்த விஜயகிருஷ்ணன் பதறி நின்னுகிட்டு இருந்த கோலத்தை பார்த்துதான் தனக்கு மயக்கம் வந்ததா அவங்க மனைவி சொல்லியிருக்காங்க.

நட்சத்திரங்கள் வகையில் நடிகர் அப்பாஸ் தன் மனைவியின் பிரசவத்தின் போது உடன் இருந்திருக்கார்.

புதுசா அப்பா ஆகியிருக்கிற "தல" ஷாலினியுடன் இருந்து, அந்த அற்புதத்தை விழி நிறைய நீருடனும், கனம் ஏறிய மனதோடு கண்டு வந்திருக்கிறாராம்.

இவர்களை என்ன சொல்லி வாழ்த்த. வார்த்தைகள் வரவில்லை.

மனம் கனிந்த வாழ்த்துக்கள்

31 comments:

சினேகிதி said...

\\தன் மனைவியின் ரெண்டாவது பிரசாத்தை உடன் இருந்து பார்த்த விஜயகிருஷ்ணன் பதறி நின்னுகிட்டு \\

prasath a prasavama mathidunga thenral:-)

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்த வேண்டிய நேரத்தில் பாவமாகவும் இருக்கிறது..என்னைப் பொறுத்தவரை ஆண்கள் இந்த விஷப் பரீட்சை எடுக்காததே நல்லது என்று தோன்றுகிறது..

நம்ம கஷ்டம் அவங்களும் ஏன் படணும்?

MyFriend said...

//0 பின்னூட்டம் போட்டிருக்காங்க, அப்ப நீங்க?: //

இப்போ எங்களை பின்னூட்டம் போடுங்கன்னு சொல்றீங்களா? வேணாம்ன்னு சொல்றீங்களா??? :-P

உதயம் said...

பிரசவத்தின் போது உடன் இறக்கும் கணவன்மார்கள் என்று போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆஸ்பிட்டல் பில்லு கட்டி தாங்கமாட்டின்கிறது சாமீ.

Sridhar V said...

என் சகோதரரும் அண்ணியின் பிரசவத்தில் உடனிருந்தார். இது நடந்து மதுரையில்.

எனது மனைவியின் பிரசவம் நிகழ்ந்த பொழுது நானும் அருகில் இருக்க விருப்பம் கொண்டு இருந்தேன். அறுவை சிகிச்சையானதால், என்னை அனுமதிக்கவில்லை.

ஒவ்வொரு கணவனும் செய்ய வேண்டிய கடமையாகும்.

இம்சை said...

நன்றி

சுரேகா.. said...

நல்ல விஷயம்..

தெகா கூட இதப்பத்தி அனுபவப்பதிவு ஒண்ணு போட்டிருந்தார்.

நிஜமா நல்லவன் said...

////இவர்களை என்ன சொல்லி வாழ்த்த. வார்த்தைகள் வரவில்லை.

மனம் கனிந்த வாழ்த்துக்கள்////



ரிப்பீட்டேய்......

pudugaithendral said...

முதல் வருகை தந்திருக்கும் அன்பர்கள் பலபேருக்கு

தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

மாத்திட்டேன் சினேகிதி.

pudugaithendral said...

பாசமலர்,

இது ஒரு பாசிடிவ் அப்ரோச்.

இது நல்லதுதான், நல்விளைவைத்தான் தரும்.

மனைவி படும் அவஸ்தை என்ன என்று தெரிந்துகொண்டால்தான், பிள்ளையின் எதிரில் மனைவிக்கு மரியாதை தருவார்கள்.

pudugaithendral said...

நான் சொல்ல வந்தது இதான்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் தன் குழந்தைதான் ஒசத்தி என்று கட்டிய மனைவியையும் கண்டு கொள்ளாமல் மகள் சொல்வதை மட்டுமே ஒரு தகப்பன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

அப்பாவின் அருகில் அம்மா நிக்க கூடக் கூடாது, காரில் முன் சீட்டில் தான் தான் அமர்வது, ... இப்படி எத்தனையோ துயரங்களைத் தன் தாய்க்கு தருகிறால்.

உயிர் வெளிவரும் அவச்த்தையை அந்த கணவன் கண்டிருந்தால், மனைவிக்கு தேவையான அன்பையும், அரவணைப்பையுயும் தந்திருப்பார்.

pudugaithendral said...

தங்கச்சி பின்னூட்டம் போடவேண்டாம்னு சொல்லுவோமா?

pudugaithendral said...

நீங்க சொல்றது கூட சரிதான் உதயம்,

இப்போ பல மருத்துவ மனைகள், பணம் பிடுங்கும் இடங்களாகிவிட்டன.

தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட பிரசவ அறையில் இருக்கும் நர்ஸ், மற்றும் ஆயாக்களுக்கு டீ, 100 பணம் கொடுத்தால் தான் என்ன குழந்தை பிறந்தது என்று சொல்வார்கள். (முன்பு அரசு மருத்துவமனைகளில் இருந்தது இங்கேயும் வந்துவிட்டது.)

pudugaithendral said...

வாங்க ஸ்ரீதர், இம்சை, சுரேகா

வருகைக்கு நன்றி.

cheena (சீனா) said...

இது தேவை இல்லாத ஒன்று. அயல் நாடுகளில் கூட இருக்க அனுமதிக்கிறார்கள். இங்கௌ பல காரணங்களினால் கூட இருக்க அனுமதிக்கப் படுவதில்லை. அனும்மதிக்கப்ப் பட்டாலும் இவ் விஷப் பரீட்சை தேவை இல்லாத ஒன்று. மனைவியை கணவன் மதிப்பதும் மதிக்காததும் பிரசவத்தை நேரில் கண்டதினால் மாறப் போவது இல்லை.

pudugaithendral said...

வாங்க சீனா,

உங்களின் கருத்துக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க டெல்பின்,

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

என் கண்ணில் தண்ணி.பதிவைப்படித்ததால் அல்ல.
நீங்க உங்க (குறைதபட்சம் ப்ளாக் வாழ்கையில) வாழ்க்கையில த.மணிகளப்பத்தி சொன்ன ஒரே பாராட்டு இதுதான்.
இத ஹஸ்பன்டாலஜிக்கு தலைப்பு மாதிரி கொடுத்துடலாம்
<==
மைஃபிரண்ட் சொல்ரார்
//0 பின்னூட்டம் போட்டிருக்காங்க, அப்ப நீங்க?: //
இப்போ எங்களை பின்னூட்டம் போடுங்கன்னு சொல்றீங்களா? வேணாம்ன்னு சொல்றீங்களா??? :-P
==>
நன்றி மைஃபிரண்ட்,நான் ரொம்ப நாளா இதக்கேட்கணும்னு நினைசேன்.

சேதுக்கரசி said...

நல்ல விசயம்ங்க...

pudugaithendral said...

என் கண்ணில் தண்ணி.பதிவைப்படித்ததால் அல்ல.
நீங்க உங்க (குறைதபட்சம் ப்ளாக் வாழ்கையில) வாழ்க்கையில த.மணிகளப்பத்தி சொன்ன ஒரே பாராட்டு இதுதான்.
இத ஹஸ்பன்டாலஜிக்கு தலைப்பு மாதிரி கொடுத்துடலாம்

வாங்க சிவா,
என்னடா நம்ம ஃபிரண்டை இன்னும் காணோமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.

நீங்க என் பதிவுகளை முழுசா ஒரு தர படிச்சிடுங்க. ஆண்கள் மேல் எனக்கு எப்போதும் கோபம் இல்லை.
மறுமுறை சொல்றேன். ஹஸ்பண்டாலஜி - ஆண்கள் செய்யும் தவற்றை சுற்றிக் காட்டத்தான்.

மங்களூர் சிவா said...

//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
என் கண்ணில் தண்ணி.பதிவைப்படித்ததால் அல்ல.
நீங்க உங்க (குறைதபட்சம் ப்ளாக் வாழ்கையில) வாழ்க்கையில த.மணிகளப்பத்தி சொன்ன ஒரே பாராட்டு இதுதான்.
இத ஹஸ்பன்டாலஜிக்கு தலைப்பு மாதிரி கொடுத்துடலாம்
//
ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்
ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்
ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்
ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்

மங்களூர் சிவா said...

//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<==
மைஃபிரண்ட் சொல்ரார்
//0 பின்னூட்டம் போட்டிருக்காங்க, அப்ப நீங்க?: //
இப்போ எங்களை பின்னூட்டம் போடுங்கன்னு சொல்றீங்களா? வேணாம்ன்னு சொல்றீங்களா??? :-P
==>
நன்றி மைஃபிரண்ட்,நான் ரொம்ப நாளா இதக்கேட்கணும்னு நினைசேன்.

//
அவ்வ்வ்வ்வ்

கலக்கல்!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
cheena (சீனா) said...
....
மனைவியை கணவன் மதிப்பதும் மதிக்காததும் பிரசவத்தை நேரில் கண்டதினால் மாறப் போவது இல்லை.
==>
சீனா,த.மணிகளூக்கு இது புரியும்னா நினைக்கிறீங்க? ஊஹூம்.நோ சான்ஸ்.

பிறைநதிபுரத்தான் said...

நம்ம ஊரில் வேண்டுமானல் இது மிகவும் அதிசயமாக இருக்கலாம் ஆனால் சிங்கப்பூரில் மகப்பேறு பார்க்கும் மருத்துவர்கள் - அறுவை சிகிச்சையல்லாத பிரசவத்தின் போது -கணவர்களை உடன் இருக்க அனுமதிக்கிறார்கள்.

எனது மனைவியின் பிரசவம் நிகழ்ந்த பொழுது நானும் அருகில் இருந்தேன்.

நந்து f/o நிலா said...

என் பொண்ணு உருவாகி மூதல் செக்கப்பின் போதே டாக்டரிடம் பிரசவத்தின் போது கூட நானுமிருப்பேன் அது அறுவை சிகிச்சையாக இருந்தாலும் கூட, இது முடியாதென்றால் நான் வேற டாக்ட்டரிடம் போய் விடுவேன் என்று சொன்னேன். ஏன்னா இங்க சில டாக்டர் இதற்கு அனுமதிப்பதில்லை

சாதாரன குழந்தையின் இதயத்துடிப்பு டெஸ்ட் பண்ணுவதற்கே ஒரு நர்ஸ் என்னை வெளியேபோக சொல்லிவிட்டார். நான் இருந்தால் அவங்களுக்கு சங்கடமாக இருக்குமாம்.

அதுக்கே சண்டை போட வேண்டி இருந்தது. அப்புறம் உலகத்திலேயே யாரும் பண்ணாத காரியமாய் நான் பிரசவத்தின் போது கூட இருக்கப்போவதை அந்த ஹாஸ்பிடலில்வேலை செய்பவர்கள் பேசுவார்கள்.

கடைசியில் சிசேரியன் என்று முடிவானதூம்ம் டாக்டர் என்னை கூப்பிட்டு சிசேரியன் ரத்தமும் சதையுமான ஒரு விஷயம். நான் என் மகனுக்கு ஒரு ஆப்ரேசன் என்றால் கண்டிப்பாக பக்கத்தில் இருக்க மாட்டேன். பர்சனலாக கேட்டுக்கோள்கிறேன் சிசேரியனின்போது கூட இருக்கவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.

ஆனால் நிலா பிறந்ததும் என்னை மட்டும் உள்ளே வர சொல்லி பிறந்த உடனே காட்டுன்னாங்க.

ஆனால் இதில் இன்னும் எனக்கு அது ஒரு ஏக்கம் தான்

நந்து f/o நிலா said...

என் சொந்தபந்தம் தெரிந்தவர்கள் நிறய பேரிடமிருந்து இதற்கு எதிர்ப்பு.காரணம் என்ன சொன்னார்கள் தெரியுமா?


பிரசவத்தின் போது கூட இருந்தால் மனைவியின் மீதான செக்சுவல் அட்ராக்சன் போய்விடுமாம்

உண்மையில் நம்ம ஊரில் இதற்கு அதிக எதிர்ப்பு பெண்களிடமிருந்துதான் வரூகிறது. காரணம் தெரியவில்லை

சேதுக்கரசி said...

//மனைவியை கணவன் மதிப்பதும் மதிக்காததும் பிரசவத்தை நேரில் கண்டதினால் மாறப் போவது இல்லை.//

இதுக்கும் ஒரு ரிப்பீட்டு!

Unknown said...

தெகா இதப் பத்தி ஒரு பதிவு போட்டுருந்தார். நானும் என் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தபோது கூட இருந்தேன்! முதல் மகள் இந்தியாவில் பிறந்ததால் என்னை அடிக்காத குறையாக வெளியில் விரட்டி விட்டார்கள்!

என்னைப் பொறுத்தவரை, கணவன் கண்டிப்பாக பிரசவத்தின்போது கூட இருக்கவேண்டும் (தைரியம் இருக்கும் பட்சத்தில்!). இது தங்கமணிகளுக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். என்னை மாதிரி தைரியசாலிகளுக்காகவே, நெஞ்சுப்பகுதியில் ஒரு திரை போட்டு இருந்தார்கள். நான் தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தேன். சிசேரியன் என்பதால், அப்போதைக்கு வலி தெரியவில்லை. நார்மல் டெலிவரி என்றால் கூட இருப்பது கொஞ்சம் தர்மசங்கடம்தான், படும் வலிகளை நேராகப் பார்க்க நேரிடும்!

எப்படியோ குழந்தையின், பூமிப் பிரவேசத்தின்போது கூட இருப்பது... பரவசம்!!
சென்னையில் இப்படி நடப்பது ஒரு நல்ல மாற்றம்.

pudugaithendral said...

பிறைநதிப்புரத்தான், நந்து, தஞ்சாவூரான்

எல்லோருக்கும் வருகைக்கும்
பின்னூட்டத்டுக்கும் நன்றி.

pudugaithendral said...

ஒவ்வொருவரின் பார்வை வேறாக இருக்கும்.

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு தானே>

வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.