திருச்சிற்றம்பலம்.
நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளேறுஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைசென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.
கைம்மகவேந்திக் கடுவனோடுஊடிக் கழைபாய்வான்செம்முகம்ந்தி கருவறை ஏறும் சிராப்பள்ளிவெம்முக வேழத்து ஈருரிபோர்த்த விகிர்தா நீபைம்முகநாகம் மதியுடன் வத்தல் பழியன்றே.
மந்தம் முழவம் மழலததும்ப வரைநீழல்செந்தண்புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்சந்தம் மலர்கள் சடைமேல் உடையார் விடையூரும்எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.
துறைமல்குசாரல் சுனைமல்கு நீலத்து இடைவைகிச்சிறைமல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிகறைமல்கு கண்டன் கனல் எரியாடும் கடவுள்எம்பிறைமல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.
கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில் மூன்றும்சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்தலைவரரைநாளும் தலைவரல்லாமை உரைப்பீர்காள்நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே.
வெய்யதண் சாரல் விரிநிற வேங்கைத் தண்போதுசெய்யபொன்சேரும் சிராப்பள்ளிமேவிய செல்வனார்தையலோர்பாகம் மகிழ்வரி நஞ்சுண்பர் தலையோட்டில்ஐயமும் கொள்வர் யாரிவர்செய்கை அறிவாரே.
வேயுயர்சாரல் கருவிரஊகம் விளையாடும்செயுயர்கோயில் சிராப்பள்ளி மேவிய செல்வனார்பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்தீயுகந்தாடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே!.
மலை மல்குதோளான் வலிகெடவூன்றி மலரோனதன்தலைகலனாகப் பலிதிரிந்துண்பரி பழியோரார்செலவலவேதம் சொலவலகீதம் சொல்லுங்கால்சிலவல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.
அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்கரப்புல்ளிநாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்தசிராப்பள்ளிமேய வார்கடைச் செல்வர் மனைதோரும்இரப்புள்ளீர் உம்மை ஏதிலர்கண்டால் இகழாரே.
நாணாது உடைநீத்தோர்களும் கஞ்சிநாட்காலேஊணாப் பகல் உண்டு ஓதுவோர்களும் உரைக்கும் சொல்பேணாதுறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்சேணார்கோயில் சிராப்பள்ளி செந்த்ரு சேர்மினே.
தேன்நயம்பாரும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்தகானல்சங்கு ஏறும் கழுமலஊரில் கவுணியன்ஞானசம்பந்தன் நலமிகுபாடல் இவைவல்லார்வானசம்பந்தத் தவரொடு மன்னி வாழ்வாரே.
தாயுமானவ சுவாமிகள்
தாயுமானவ சுவாமிகள்தந்தை தாயும் நீ என் உயிர்த் துணையும் நீசஞ்சலம் அது தீர்க்கவந்த தேசிக வடிவு நீ உனையலால்மற்றொரு துணை காணேன்அந்தம் ஆதியும் அளப்பரும் சோதியேஆதியே அடியார் தம்சிந்தை மேவிய தாயுமானவன் எனும்சிரகிரிப் பெருமானே
9 comments:
மக்கட்பேறு கிட்ட, திருவெண்காடு எனும் தலத்தில் பாடப்பட்ட "கண்காட்டும் நுதலானும்" எனும் திருவெண்காட்டுப் பதிகத்தையும் (திருஞானசம்பந்தர் தேவாரம் - 2ம் திருமுறை) பாராயணம் செய்யலாம்.
http://www.shaivam.org/galdomain/audio/thiru_padikam.htm
தகவலுக்கு நன்றி சேதிக்கரசி
நல்ல பதிவு.
வாங்க சிவா,
ஊர்லேர்ந்து வந்தாச்சா?
வருகைக்கு நன்றி.
நாள்தோறும் பாராயணம் செய்தால் மட்டும் போதாது.
இவற்றையும் கவனிக்க வேண்டும்.
திருமூலர் சொன்னபடி கூடும்போது, ஆணின் உயிர்காற்று எங்கே ஓடுகிறது என்று கவனிக்க வேண்டும், பெண்ணின் வயிற்றில் மலசலம் இல்லாமல் இருக்க வேண்டும்.
http://njaanam.tamil.net/?p=148
(கூடியபின் ஐந்து நாட்களுக்கு பிறகு கூட கருத்தரிக்கக் கூடும் என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யக்கூடாது)
http://www.americanpregnancy.org/gettingpregnant/ovulationfaq.htm
-- sperm can live in the (woman's) body for up to five days--
இந்தப் பிரச்சினைகள் இல்லாத சோதனைக்குழாய் மூலம் கருவை உண்டாக்கும் போதும் வளர்ச்சி குறைக்கான மரபணுக் கோளாறுகள் உண்டாவதையும் விட்டுவிட வேண்டும்.
சாதகப்படி குழந்தைக்கு சிறப்பான யோகம் இருக்கூடாது. மிகச் சிறப்பான சனன காலத்தைக் கணித்து அந்நேரத்தில் பெற்றெடுத்த சோதியம் அறிந்த பெற்றோருக்கு, கடைசியில் எல்லாமே பிறர் பணிவிடை செய்யும் படியான (அதாவது அரச யோகம்) வளர்ச்சி குறைந்த குழந்தை பிறந்ததாம். (முன்பு படித்தது. இப்போது சுட்டி கிடைக்கவில்லை).
தூங்கும் போது, வடக்குப் பக்கம் தலை வைத்து படுத்திருந்திருக்கக் கூடாது, தலைக்கு நேர் மேலே உத்திரம் இருந்திருக்கக் கூடாது.
ஊருக்கு போனபோது எண்ணெய், சிகைக்காய் எடுத்துப் போயிருக்கக் கூடாது.
கறி சாப்பிட்டதை நிறுத்தி இருக்கக்கூடாது.
மூத்த குழந்தைமீது யார் கண்ணும் பட்டிருக்கக் கூடாது.
சொல்வார் சொல் எல்லாம் கேட்டால், இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.
யாரோ எதையோ போற்றி பாடியதை தினமும் உருப் போடுவதை விட்டு வருவதை எதிர் கொள்ளும் பக்குவமான கல்வி பெற்றால் எல்லாமே நல்ல பேறுதான்.
இதுக்கு கோனார் நோட்ஸ்(விளக்கவுரை) எல்லாம் இல்லையா?
அதெல்லாம் கிடையாது சிவா,
நல்லது சொல்லியிருந்தாங்க அதான் கொடுத்திருந்தேன்.
இந்த விளக்க உரையெல்லாம் இல்லாமல் இன்னும் என்னென்னோவோ இருக்குன்னு குலவுசனப்பிரியன் ஒரு பின்னுட்டம் போட்டிருக்காரு.
tendral madam
ithuku meani0ng sonna ennai mathiri alungaluku ubayogama irukum
எனக்கு அம்புட்டு தமிழ் தெரியாது எல் கே.
Post a Comment