Thursday, January 31, 2008

தாயுமானவ சுவாமித் திருக்கோயில்



















அருள்மிகு மட்டுவார் குழலம்மை ஸமேத செவ்வந்திநாதர் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ் நாடு
இதுதான் அந்த திருத்தலம். இங்கு என்ன விசேஷம்?


சுயம்புவாக வந்த தாயுமான ஈசர்.


இதற்கு மேல்தான் "உச்சிப் பிள்ளையார்" கோவில். 200 படிகள்
ஏறினால் தாயுமானவர் கோவில்.
மார்ச் 8,9.10 (பங்குனி23,24,25) தேதிகளில் சூரியனின்
கதிர்கள் லிங்கத்தின் மீதுவிழ சூரிய பூஜை நடைபெறும்.

ஸ்தல புராணம்:


ரத்னாவதி என்கின்ற சிவபக்தி நிறைந்த பெண்
தன் கணவன் தனகுப்தனுடன், திருச்சியில் வசித்து
வந்தாள். திருச்சியில் செவ்வந்தி நாதராக
மலைக்கோட்டையில் அருள்பாலிக்கும் சிவனை
நாள் தவறாது ஆராதனை செய்து வந்தாள்.

தாய்மையுற்ற ரத்னாவதி தான் கருவுற்ற நாள்
முதல், பிள்ளைபேறு வரை, தன்னைக் காத்து ரட்சித்து
அருள் புரிய வேண்டுமாய் கோருகிறாள்.
பிரசவ காலத்தில் தன்னுடன் இருக்கும்படி
தஞ்சாவூரில் இருக்கும்
தன் அன்னைக்கு சொல்லி அனுப்புகிறாள்.


செய்தி கேட்ட உடன் அன்னை திருச்சிக்கு
புறப்படுகிறாள். வாகன வசதி அதிகம் இல்லாத
அக்காலத்தில், திருச்சியை அடைந்த தாய், காவேரி
நதியின் கரையை கடக்க முயலும்போது,
வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடுவதைப் பார்த்து செய்வதறியாது
தவித்துக் கொண்டு இருக்கிறாள்.


தாயின் வருகையை எதிர் பார்த்திருந்த
ரத்னாவதி, தாயைக்காணாமல்
தவித்து செவ்வந்திநாதரை தன்
பிரசவம் நல்லபடியாக நடக்க
உதவ வேண்டுகிறாள். பிரசவ வலி
அதிகமாகி துடித்துக் கொண்டிருந்த
நேரத்தில் ரத்னாவதியின் தாயார் வந்து
சேர, பிரசவம் நல்லபடியாக
நடந்து, ஆண்மகவுக்குத் தாயாகிறாள்.
தாய் 7 நாள் வரை உடன் இருந்து
உதவி செய்கிறாள்.


நதியில் வெள்ளம் வடிந்தபின் ரத்னாவதியின்
தாய் மகளின் வீடு வந்து சேர்ந்து குழந்தை
பிறந்தருப்பதைப் பார்த்து வியந்து தனியாக
பிரசவம் எப்படி பார்த்தாள் என்று கேட்க,
மகள் அச்சரியத்துடன் பார்க்கிறாள். தான்
காவேரியின் அக்கரையில் மாட்டிக்கொண்டதை
தாய் கூற, மகள் மயக்கம் அடைகிறாள்.


கனிவு நிறைந்த சிவன், அசிரிரீயாய்
தானே தாயாக வந்து தன்பக்தைக்கு அருள்
பாலித்ததைச் சொல்கிறார். அன்று முதல்
செவ்வந்திநாதர் "மாத்ருபூதேஸ்வரர் அல்லது தாயுமானவர்"
என்ற பெயரில் பிள்ளையற்ற தம்பதிக்களுக்கு
மக்கட்பேறு அளித்து, பேறுகால ஆபத்துக்களிலிருந்து
காத்து, சுகப்பிரசவ அடைய
தாயாய் கருணையுடன் அருள்பாலிக்கிறார்.


ஒவ்வொரு வருடமும் கோயிலின் வசந்த
உற்சவத்தின் 5 ஆம் நாள்
"செட்டிப் பெண் மருத்துவமாக" நடைபெறுகிறது.

ரத்னாவதியின் குடும்பத்தைச் சேர்ந்த தற்போதய
தலைமுறையினர் விழாவை சிறப்பிக்கின்றனர்.

இன்றும் எங்கள் வீடுகளில் திருமணம் முடிந்ததும்
தாயுமானவரை வேண்டி, கருவுற்றதும் காசுமுடிந்து வைத்து,
நல்லபடியாக பிரசவம் ஆனதும் வாழைத்தார் கட்டி,
அர்ச்சனை செய்வது வழக்கம்.




"குழவியீன்றவட்கு அருமருந்து எண்ணெயும் கொடுத்தே, ஏழுதினத்து அளவு இழைத்திடும் செயல் எலாம் இயற்றி, அழகு தொட்டிலுள் துயிற்றி அங்கு ஒருமதி அளவாம், மழகளிற்றினை முருகவேள் எனும்படி
வளர்த்தாள்".

6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//இன்றும் எங்கள் வீடுகளில் திருமணம் முடிந்ததும்
தாயுமானவரை வேண்டி, கருவுற்றதும் காசுமுடிந்து வைத்து,
நல்லபடியாக பிரசவம் ஆனதும் வாழைத்தார் கட்டி,
அர்ச்சனை செய்வது வழக்கம்.//

ரீப்பீட்டேஏஏஏஏஏ

pudugaithendral said...

வாங்க மதுரையம்பதி,

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஏங்க, இப்படியா ஷாக் கொடுக்கறது? ஓ,தலைப்புல திருச்சிற்றம்பலம்னு இருக்கு.இப்பத்தான் பார்க்கிரேன். வேற மொழில உள்ளதை தமிழ்ல எழுதி திட்றீங்களோன்னு நினைச்சேன்.

pudugaithendral said...

இதுக்குத்தான் புதுகைத் தென்றல் போட்ட பதிவுன்னு தெரிஞ்சவுடனே,

என்ன குற்றம் சொல்லலாம் எப்படி, காட்டமா கமெண்ட் போடலாம்னு யோசிச்சுகிட்டே படிக்காம,

பொறுமையா, பதிவை அனுபவிச்சு படிக்கணும்ங்கறது.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் சொல்ரார்
என்ன குற்றம் சொல்லலாம் எப்படி, காட்டமா கமெண்ட் போடலாம்னு யோசிச்சுகிட்டே படிக்காம,
==>
நான் காட்டமாவா கமெண்ட் போடுறேன்? நான் அப்புராணி(அப்பாவி)ங்கோ.

pudugaithendral said...

நீங்க அப்புராணி இல்ல சிவா ஆப்பு வெக்கறதில மன்னன் ஆச்சே!! :)))