Wednesday, January 30, 2008

சினிமா பார்த்து அழுத ரஜினி!!!!

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஒரு படம் பார்த்து

அழுதுட்டாராம்.

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் (லேசா லேசாவில நடிச்சிருக்காரே!)

நடித்த மலையாளப் படம் 'கத பரயும் போன்' இந்த படத்தை

பார்த்துட்டு ரஜினிகாந்த் அவர்கள் ஸ்ரீனிவாசனை கட்டிபிடிச்சு

"ஒரு சினிமா மூலம் என்னை அழவெச்சுட்டீங்க... கங்கிராட்ஸ்",

அப்படின்னு சொல்லியிருக்காராம்.

இதுல ஹாட் நீயூஸ் இந்த மலையாளப் படத்தை

தமிழில் எடுக்கறாங்க. அதில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார்.

படத்தின் பெயர் "குசேலன்"

தகவல் உதவி:குமுதம் (30.1.08)

11 comments:

சுரேகா.. said...

உண்மையான கலைஞனுக்கு கண்டிப்பா அழுகை வந்துடும்ங்க..!

நானெல்லாம் நிறைய அழுதிருக்கேன்..

இன்னிக்கும்...அம்மம்மா..தம்பி என்று நம்பி..ன்னு சிவாஜி சார் பாட ஆரம்பிச்சாலே..ரசிச்சு அழுதுக்கிட்டிருப்பேன்.

ILA (a) இளா said...

என்னது காந்திய சுட்டுட்டாங்களா?

pudugaithendral said...

வாங்க சுரேகா,

சத்தியமான வார்த்தை.

pudugaithendral said...

வாங்க சுரேகா,

சத்தியமான வார்த்தை.

pudugaithendral said...

இளா என்னது இது?

எனக்கு ஒண்ணும் புரியல.

இம்சை said...

ILA(a)இளா said...
என்னது காந்திய சுட்டுட்டாங்களா?

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்....

பினாத்தல் சுரேஷ் said...

அது மட்டும் இல்ல இளா, கோட்சேன்னு ஒரு ஆள் மேல வழக்குப்பதிவு செஞ்சுருக்காங்களாம்!

பு தெ.. புரியலை?

pudugaithendral said...

வாங்க பினாத்தல் சுரேஷ்,

எம்புட்டு நாளாச்சு. வைபாலஜிக்கு பதில் பின்னூட்டமா போட்டபோது வந்து கமெண்டிட்டு போனீங்க.

நேற்று காந்தியடிகள் இறந்த நாள் என்பது தெரியும்.

ஆனா அதுக்கும் இந்த பதிவுக்கும், இளா & உங்க பின்னூட்டம் எதுக்குக்கு அதுதான் புரியல.

தனி மடலிலாவது சொல்லுங்க.

நிஜமா நல்லவன் said...

ILA(a)இளா said...
என்னது காந்திய சுட்டுட்டாங்களா?


பினாத்தல் சுரேஷ் said...
அது மட்டும் இல்ல இளா, கோட்சேன்னு ஒரு ஆள் மேல வழக்குப்பதிவு செஞ்சுருக்காங்களாம்!





மொழி படத்தில வருகிற ப்ரொபசர் M.S.பாஸ்கர் மாதிரி மாறிட்டாங்கன்னு நினைக்கிறேன்

வவ்வால் said...

இந்த தகவலை இன்னும் கார்ப்பரேஷன் கக்கூஸ் சுவத்துல மட்டும் தான் யாரும் எழுதலை... மற்றப்படி தமிழில் வரும் காலணா பத்திரிக்கைல இருந்து வலைப்பதிவு வரைக்கும் இதைப்போட்டாச்சு :-))

பொங்கலுக்கு வந்த படங்களை பார்த்து நான் அழுத கதையை எப்படி வெளில சொல்வேன் ! :-))(அதுவும் காளைப்படத்தை பார்த்தா கல்நெஞ்சமும் கலங்கிடும்ல)இல்லை சொன்னாத்தான் புதுகை தென்றல் பதிவா போடுவாரா :-))

G.Ragavan said...

அடிச்சுச் சொல்லேன். தமிழ்ல படத்தப் பாத்துட்டு அழத்தான் போறோம். ஏன்னா பி.வாசு இந்தப் படத்தைத் தமிழுக்கு ஏத்தாப்புல மாத்தப் போறாராம். மணிசித்ரதாழுக்கு ஆன நெலமைதான் இந்தப் படத்துக்கும். அதான் பாத்தவங்கள்ளாம் அழுவாங்கன்னு சொன்னேன்.

இளாவும் இம்சையும் ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா... இவ்ளோ பழைய நியூஸ் சொல்லீருக்கீங்களேன்னு :)