Monday, January 21, 2008

என்னனக் கவர்ந்த தேசம் - பாகம்: 2

அதிசயங்களும், ஆச்சரியங்களும்.
இங்கு வந்தப் பிறகு எனக்கு பலவித ஆச்சரியங்கள், ஷாக் காத்திருந்தன.1. முதல் ஷாக் - என்னவர் வேலை முடிந்து விட்டிற்கு மாலை 5.30 மணிகே வந்துவிடுவார். (சென்னையில் இருந்த போது 9.30 மணிக்கு (just leaving the office-அப்படின்னு சொல்லி போன் செய்வார்.)2. சனிக்கிழமை 1/2 நாள் தான் லீவு. ஒவ்வொரு பொளர்னமியும் விடுமுறை. (இந்தப் பதிவு எழுதும் இன்றும் ஒரு "போயா டே"- விடுமுறை.3. விடுமுறைக்கு பஞ்சமே இல்லாத ஊரு. (என் கணவர் சொல்லும் ஜோக் - இங்கே list of holidays க்கு பதில் list of workingdays தான் கேட்க வேண்டும்.)

4. காலை 6 மணிக்கே காலைஉணவு சாப்பிட்டு தத்தம் வேலைக்கு கிளம்பிவிடுகிறார்கள். கடைகளும் 8 மணிக்கே திறக்கப்பட்டு, மாலை 7 மணிக்குள் மூடப்பட்டு விடும். (ஷாப்பிங் மால்கள்) Govt. office timings 8.00 to 4.30)


5. ஹோட்டல்கள் மிஞ்சிப்போனால் இரவு 10மணியோடு சரி.


6. சுத்தமான, விசாலமான ரோடுகள்.


7. மாலை 7 மணிக்கு மேல் வெரிச்சோடிகிடக்கும் சாலைகள். (இப்ப அப்படி இல்ல. செக் பாயின்ட் போலிஸுகளாவது இருப்பார்கள்)8. பொதுவாக Fresh milk -இல்லை. பவுடர் பாலில்தான் காபி. (நல்ல தயிர் கிடைக்கும்.) (எங்களுக்கு ஒரு தமிழர் கறந்தபால் கொண்டுவந்து கொடுப்பார்.)9. கோயில்களில் அவ்வளவு சுத்தம். சத்தம் சுத்தமாக இல்லை. மன அமைதி தரும் கோயில்கள்.

10. விமானம் தரையிறங்கும் போது காணப்படும் பசுமை மிகு தென்னைமரங்கள் ஆஹா.. காணக் கண்கோடி வேண்டும்.

11. யுத்தம் நடக்கும் நாடும் என்று சொல்ல முடியாத செல்வச்செழிப்புடன் திகழும் கொழும்பு. (எல்லாம் பெரிய பெரிய கார்கள்தான். pajero, brado, audi,camry,BMW,Merc. சின்னக் காரில் போனால் கொஞ்சம் மதிப்புக் குறைச்சல் மாதிரி.)


விலைவாசி ஆஹா, அதிகம் இல்லை ஜென்டில்மேன் - காலிஃளவர் - கி.700 (LKR), திராட்சை - 700 lkr, தக்காளி - 140rs. இது சும்மா சாம்பிள் தான். ஏறும், ஏறும், ஏறிக்கொண்டே இருக்கும். நான் வந்த போது பிரட் - 29 lkr, இப்போ - 85lkr.(வந்த புதிதில் மனோரமா ஒரு படத்தில் செய்வாரே அது மாதிரி சாதம், ரசம் செய்து காய்கறிகடைக்கு எடுத்து போய் காய்கறிகளைக் கண்ணால் பார்த்தும், வாசனையும் பிடித்து கொள்ளலாமா?என்று நினைத்ததுண்டு. ஹி.. ஹி..ஹி..)(நம் இந்திய பணம் 1 ரூபாய் இங்கே 2.85 ஆகும்)


(இந்தப் படம் ஜொலிக்கும் சந்திரன்- எங்கள் தோட்டத்திலிருந்து எடுத்தது)
8 comments:

மங்களூர் சிவா said...

//
விலைவாசி ஆஹா, அதிகம் இல்லை ஜென்டில்மேன் - காலிஃளவர் - கி.700 (LKR), திராட்சை - 700 lkr, தக்காளி - 140rs. இது சும்மா சாம்பிள் தான். ஏறும், ஏறும், ஏறிக்கொண்டே இருக்கும். நான் வந்த போது பிரட் - 29 lkr, இப்போ - 85lkr.
//
இந்த சக்கரை, சீமண்ணை, பெட்ரோல் எல்லாம் ரொம்ப சீப்-னு சொன்னாங்களே!!

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா
//இந்த சக்கரை, சீமண்ணை, பெட்ரோல் எல்லாம் ரொம்ப சீப்-னு சொன்னாங்களே!!//
சர்க்கரை- 70, பெட்ரோல் - 127ரூபாய். சீமண்ணை தெரியல. கேட்டு வேணாம் சொல்றேன்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
வாங்க சிவா
//இந்த சக்கரை, சீமண்ணை, பெட்ரோல் எல்லாம் ரொம்ப சீப்-னு சொன்னாங்களே!!//
சர்க்கரை- 70, பெட்ரோல் - 127ரூபாய். சீமண்ணை தெரியல. கேட்டு வேணாம் சொல்றேன்.
//
இந்த விலையெல்லாம் இலங்கை கரன்சியிலா இல்லை இந்திய ரூபாயிலா??

புதுகைத் தென்றல் said...

சிவா,
இலங்கை ரூபாய் தான்.

சுரேகா.. said...

சூப்பர் அலுவலக நேரங்கள்!

(ஒரு இலங்கை வேலை..பார்சல்!)

வெறிச்சோடிய சாலைகள்தான்...அச்சத்தை ஏற்படுத்துகின்றன.!

நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

குசும்பன் said...

ஹலோ வணக்கமுங்க, இங்க கும்மி உண்டா?

எதுக்கும் பதிவு சூப்பர் என்று ஒரு கமெண்டை போட்டுக்கிறேன்!

புதுகைத் தென்றல் said...

வாங்க குசும்பன்,
தங்கள் வருகைக்கு நன்றி.

எல்லாமும் உண்டு. பதிலும் கொஞ்சம் காட்டமாவே கொடுப்பேன்.

அடிக்கடி வாங்க.

புதுகைத் தென்றல் said...

சூப்பர் அலுவலக நேரங்கள்!

(ஒரு இலங்கை வேலை..பார்சல்!)

வாங்க சுரேகா,

இப்ப முக்கால்வாசிப் பேரு அவங்க அவங்க தாயகத்துக்கோ, மற்ற நாடுகளுக்கோ போயிகிட்டு இருக்க்றதனால வேலை கண்டிப்பா கிடைக்கும்.

சத்தியமா சொல்றேன், இந்த ஊரு எந்த ஊரும் வராது.

வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அதை அனுபவிப்பது எப்படி எல்லாம். வேற எங்கெயும் சான்ஸே இல்ல.