நம்ம ஊரு பிளைட்தான் சரியில்லையேன்னு ஸ்ரீலங்கன் விமானச் சேவையைப் பார்ப்போம்னு அதுல போக ஆரம்பிச்சோம்.
பெரிய பிளைட், ஏர்ஹோஸ்டஸும் சிரிச்ச முகமா இருப்பாங்க,
பிள்ளைகள் விரும்பும் வகையில் விமானத்தினுள் ஒவ்வொரு சீட்டிற்கு
முன்பாகவும் ஒரு சின்ன டீவி, downward camera வில் நாம் கீழே கடலன்னனயையும், இயற்கையையும் ரசிக்கலாம்.
Forward camera வில் காக்பீட்டில் அமர்ந்து பயணிப்பது போல் டேக் ஆஃப்,
லேண்டிங் ரசிக்கலாம். தொலைதூரப் பயணத்தில் சினிமா, கார்டூன் பார்க்கலாம், என்று நன்றாகத்தான் இருந்தது.
அவர்கள் தரும் பிளாக் டீ மிக அருமை. திருச்சிக்கும் நேரடி விமானச்
சேவை என்று பல ப்ளஸ்கள் கொஞ்ச நாள் அனுபவத்தோம், எங்கள்
சிங்கப்பூர்- மலேசியா பயணம் வரை.
ஸ்ரீலங்கன் விமான எண்கள் பொதுவாக UL என்றுதுவங்கும். அந்த ULக்கு
Abrevation USUALLY LATE என்றாகி விட்டது. சர்வீஸின் தரமும் குறைய
ஆரம்பித்தது. (நாம சந்தோஷப்படப்டாதில்ல!!!)
சிங்கப்பூர்- மலேசியா போனபோது நடந்தது என்னன்னு சொல்றேன்.
மலேசியாவிலிருந்து கொழும்பு திரும்பும் போது நேரடி விமானச்
சேவை இல்லாமல், மலேசியா-சிங்கப்பூர்- கொழும்பு வரும் விமான
டிக்கெட்தான் கிடைத்தது.
மலேசியா - சிங்கப்பூர் 1 மணித்தியால பயணம். சிங்கப்பூர்- கொழும்பு 2.30 மணித்தியால பயணம். சிங்கப்பூரில் விமானத்தை விட்டு இறங்க
முடியாது, விமானம் 1 மணி நேரம் சிங்கப்பூரில் நிற்கும்.
மகனுக்கு உலர்ந்த சருமம். 2 மணி நேரத்திற்கு மேல் A/Cல் அமர்ந்திருந்ததால்
சருமம் வரண்டு போக ஆரம்பித்து, சின்னச் சின்ன ரேஷஷ் வர ஆரம்பித்தது.
(அல்கொயதா அண்ணன்களில் உதவியால் கைப்பையில் கிரீம்கள்
கொண்டுச்செல்ல தடையிருந்த நேரம் அது.)
மாய்சுரைஸர் கிரீம் தடவினால் வலி தெரியாது என்று ஹோஸ்டஸைக்
கேட்டேன். பதில் பேசாதது மட்டுமல்ல போனவர் வரவேயில்லை.
கதவின் அருகில் போய் நின்று கொண்டார். வரும் போகும் விமானப் பணிப்பெண்களைக் கேட்டும் யாரும் தரவில்லை. பிள்ளையோ தவிக்கிறான்.
கோபம் வந்து வேறு பணிப்பெண்ணிடம்," இதுதான் உங்க ள் உயர்ந்த
சர்வீஸா.............. என்று கத்த, "விமானத்தில் கிரீம்கள் ஏதும் இல்லை.
நான் என்னுடைய கிரீம் தருகிறேன், "என்று கொண்டுவந்து கொடுத்தார்.
நாமும் கையில் வைத்திருக்ககூடாது எனில் அவர்கள் தரவேண்டியதுதானே?
இங்கும் சின்னப் பையன் அவஸ்தைப் படுகிறான் என்ற நினைப்பே
இல்லாமல் அந்த ஏர்ஹோஸ்டஸ் நடந்து கொண்டார்.
பணம் கொடுப்பது கொடுக்கிறோம்.(மற்ற ஏர்லைங்களைவிட இங்கு
பணம் அதிகம்) அதற்கு உண்டான சர்வீஸ் இல்லையே என்று
வெறுத்து ஜெட் ஏர்வேஸில் பயணம் செய்தேன்.
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால், எதிரில் 4 கொடுமை
ஜிங்கு ஜிங்குன்னு ஆடிகிட்டு வந்த கதையாகிப் போச்சு............
தொடரும்
6 comments:
ஹா! ஹா!
என்ன சிரிக்கிறீங்க என்று பார்க்கிறீர்களா?
இதைவிட மோசம் எல்லாம் நாங்க பார்த்திருக்கோம் அல்ல!!
இதெல்லாம் சகஜமங்க.
அடுத்து ஜெட் ஆ!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் - எமிரேட்ஸ் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இனி எமிரேட்ஸ் இவர்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படிதான் இருக்கும். இனி எல்லாம் மகின், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சம்பாதிக்கும் பணம் எல்லாம், நம் தமிழர்களைத் தாக்க மட்டுமே பயன்படும். இனி ஏற வேண்டாம், என் அன்பு வேண்டுகோள்.
தாயே...
ஒன்னு சொன்னா கோவிக்கப்டாது...இந்த மாதிரி விமானபயண பதிவு போடும் போது...அங்கன அங்கன அந்தந்த விமான பணிப்பெண்களோட படத்தை போடோனும்...அப்பத்தானே படிக்கறவுகளுக்கு சந்தோசமா இருக்கும்....
யோசிங்க ஆத்தா....ஹி..ஹி...
வாங்க வடுவூரார்,
இதெல்லாம் சகஜமா???????????
கடவுளே! என்ன கொடுமை இது குமார்.
ஜொதிபாரதி,
நீங்க சொல்ற விவரம் வேற. ஆனாலும் நான் தான் அந்த விமானத்துல ஏறக்கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டுதானே 3 வருஷமா
வேறவேற ஏர்லைன்ஸ்ல போறேன்.
இரண்டாம் சொக்கன்,
உங்க தனிமடல் ஐடி கொடுங்க.
சில விவரம் பொதுவா சொல்லமுடியாது.
Post a Comment