Friday, February 08, 2008

எனக்கு ஏன் இப்படி நடக்குது-நிறைவுப் பகுதி

இந்தியனும் சரியில்லை(ஏர்லைன்சை சொல்றேன்),

ஸ்ரீலங்கனும் சரியில்லைன்னு "ஜெட் ஏர்வேஸ்"ல
போய் பார்க்கலாம்னு நினைச்சோம்.

விமானத்தில ஏறியாச்சு. ஏர்ஹோஸ்டஸ் அக்கால்லாம்

பரவாயில்லை கொஞ்சம் சிரிச்ச முகமவே

இருந்தாங்க. (சின்னப் பொண்ணுங்கதான்)


சரி நல்லா இருக்கும் போலன்னு நினைச்சு

சந்தோஷப்பட ஆரம்பிக்க, போச்சு.

வந்தாங்க ஒரு ஏர்ஹோஸ்டஸ்.

ஹேண்ட் பேக்கூட மேல வெச்சிடுங்கன்னுட்டாங்க.

"ஹேண்ட் லக்கேஜ் மட்டும் மேல வெச்சா போதுமேன்னு,"

கேக்க டென்ஷன் ஆகிட்டாங்க.

கொடுமையேன்னு மேல வெச்சேன். டேக் ஆஃப் ஆனதிலேர்ந்து

பாப்பாக்கு காதுவலி ஜாஸ்தி ஆகிடுச்சு. சாக்லேட் கொடுத்தும்

உமிழ் நீரைகூட்டி சரியா முழுங்காம, அழுகறா.

நான் எப்போதும் கையில் சாக்லேட் வெச்சிருப்பேன்,

ஆனா, ஹேண்ட் பேக்தான் மேல இருக்கே?

எந்திருக்கவும் விடல அந்தப் பொண்ணு.

சரி நீங்க சாக்லெட் கொடுங்க காதுவலில

துடிக்கிறான்னு கேக்க, "நானே ஃபிளைட் ஃபுல்னு

டென்ஷன்ல இருக்கேன்னு", சொல்லிட்டு

போயே போயிடுச்சு. பிஸன்ஸ் கிளாச் முடிஞ்சு

வர்ற மொதல் சீட்டுல உட்கார்ந்திருந்தோம்.

அயித்தான் எந்திருச்சு பிஸினஸ் கிளாஸ்ல

இருக்குற ஹோஸ்டஸ்கிட்ட சொல்ல

அவங்க வந்து அந்த பொண்ணு கத்தினதுக்கு

மன்னிப்பு கேட்டுட்டு, பாப்பா கைநிறைய

சாக்லேட் கொடுத்துட்டு போனாங்க.


இதுக்கப்புறமும் இந்த ஜெட் வேணாம்னு

அயித்தானே சொல்லிட்டாரு.

நம்ம நாட்டு விமானம், நீ அப்படி எல்லாம்

சொல்லக் கூடாதுன்னு அயித்தான் சொல்லி

வம்படியா இந்தியன் ஏர்லைன்ஸ்ல

போன டிசம்பர்ல பயணம் செஞ்சோம்.

அங்க நடந்தது என்ன? பார்க்க இங்கே சொடுக்குங்க.

அங்கே இருக்குற என் பின்னூட்டத்தைப் பாருங்க.

வருஷத்துக்கு ஒருமுறை வரும்போதே

இப்படி இருக்கு. அடிக்கடி வந்த அவ்வளவுதான்

போலிருக்கு.

எனக்கு ஏன் இப்படி நடக்குது??????????


முற்றும்

8 comments:

வடுவூர் குமார் said...

கடைசியாக "முற்றும்" என்று போட்டுவிட்டாலும் இனிமேல் உங்களுக்கு இப்படி நடக்காது என்று நிச்சயம் இல்லை.
எதுக்கும் ஒரு தடவை சிங்கப்பூர் ஏர்லயன்சில் போய் பாருங்க- நிஜமான வித்தியாசம் தெரியும்.
என்ன? ஒரு 65% காசு அதிகமாக கொடுக்கவேண்டி வரும்.பரவாயில்லையா?

pudugaithendral said...

வாங்க வடுவூரார்,

அதென்னவோ சரிதாங்க. இனி இப்படி நடக்காது என்பதற்கு அத்தாட்சி ஏது?


காசு எப்படியும் கம்பெனிதான் கொடுக்குது. சிங்கப்பூர் ஏர்லயன்சில்
போகலாம். ஆனா நாங்க அந்த பக்கம் இல்லையே?

ம்ம்ம்ம்ம்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

என்னுடன் வேலை பார்த்தவர் இப்படி சொல்லி அம்மாவிடமும்/தங்க மணியிடமும் வாங்கிக் கட்னாராம் - "வந்தவளும் சரியில்லே,வாய்ச்சவளும் சரியில்லே....."
நீங்க சொல்ரதும் அதே மாதிரி இருக்கு "இந்தியனும் சரியில்ல,ஸ்ரீலங்கனும் சரியில்லே...."

pudugaithendral said...

வாங்க சிவா,

என்னவோ புலம்பல்ஸ்தான்.

செல்லி said...

அனுபவம் நல்லாத்தான் இருக்கு.:-)

pudugaithendral said...

வாங்க செல்லி,

மொதோ தடவையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீக

என்னத்த நல்லா இருந்து...............?

இரண்டாம் சொக்கன்...! said...

ஆமா...ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது...

அடுத்த முறை பணிபெண்கள் உங்களுக்கு உணவு பரிமாறும்போது, உண்மையாக அக்கறையுடன் கேட்பது மாதிரி...நீங்கள் சாப்டீர்க்ளா? என கேட்டுப் பாருங்கள்....ஒரு கணம் தடுமாறி சந்தோஷிப்பார்கள் பாருங்கள்...அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்புதான்...

எனக்கு இது நிறைய தடவை ஒர்க்கவுட் ஆயிருக்கிறது....என்ன சில சமயங்களில் தங்கமணியிடம் இடி வாங்கியிருக்கிறேன்....

பொது வாழ்க்கையில இதெல்லாம் சஹஜமப்பான்னு எடுத்துக்கணும்....ஹி..ஹி...

pudugaithendral said...

வாங்க இரண்டாம் சொக்கன்,

நான் எப்போதும் நட்பா சிரிச்ச முகத்துடனும், அவங்க செய்யற வேலைகளுக்கு நன்றி சொல்லித்தான் வருவேன்.

விமானம் தரையிறங்கி வெளியே வரும்போதும் நன்றி சொல்லாம இறங்கமாட்டேன்.

நாம மாத்திரம் சரியா இருந்தா போதுமா?